For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆபாசப் படம் பார்க்க வைத்து மைனர் பெண்ணை கற்பழித்த அப்பா - மகன்!

  By Staff
  |

  ஏழ்மை என்றால் உதவுங்கள், உதாசீனப்படுத்தாதீர்கள். ஏழ்மையில் இருக்கும் பெண்களை எப்படி வேண்டுமானாலும் நம் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற பண முதலைகள் சிலவன நமது சமூகத்தில் அலைந்து வருகின்றன.

  இன்றளவிலும் தாங்கள் மானபங்கப்படுத்தப்படுத்துவதை மானம், மரியாதை, குடும்ப நிலைமை கருதி வெளியே கூறாமல் பல்லைக் கடித்துக் கொண்டு வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  Both Father and Son Raped a Minor Girl for Long Time.

  Cover Image: shadhinbangla24

  பஞ்சாப் மாநிலத்தில் தங்கள் வீட்டுக்கு வேலை செய்ய வந்த பெண்ணை, வற்புறுத்தி ஆபாசப் படம் காட்டி அப்பா - மகன் கற்பழித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நன்கு வாழ்ந்த குடும்பம்!

  நன்கு வாழ்ந்த குடும்பம்!

  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் ஒரு காலத்தில் நன்கு வாழ்ந்தவர்கள். அவரது அப்பா இறந்த பிறகு கெட்ட காலம் துவங்கியது, பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர். வீட்டு வேலை செய்து தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகினர்.

  வீட்டு வேலை!

  வீட்டு வேலை!

  அந்த பெண் ஒருசில வீடுகளுக்கு வீட்டு வேலை செய்ய சென்று வந்துள்ளார். அங்கே அந்த பெண் சில வகைகளில் தவறான தீண்டுதல் மற்றும் ஆபாச வார்த்தைகள் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறாள். ஆனாலும், தனது குடும்ப சூழல் மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, வேலையை விட முடியாமல் தவித்து வந்துள்ளாள்.

  எல்லை மீறிய ஆண்!

  எல்லை மீறிய ஆண்!

  ஒரு கட்டத்தில், அந்த பெண் தனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு தான் இதை எல்லாம் தாங்கிக் கொள்கிறாள் என அறிந்த அந்த வீட்டில் இருந்த ஆண், அவளை கற்பழித்தான். மேலும், அந்த பெண்ணை வற்புறுத்தி ஆபாசப் படத்தையும் பார்க்கக் செய்துள்ளான்.

  தொடர்கதை!

  தொடர்கதை!

  அந்த கொடிய நிகழ்வுக்கு பிறகு ஓரிரு முறை இந்த கற்பழிக்கு சம்பவம் தொடர்கதையாக நடந்து வந்திருக்கிறது. ஒருமுறை, தனது மகன் பாலியல் ரீதியாக அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுப்பதை நேரில் கண்ட அவனது தந்தை, மகனை தட்டிக் கேட்காமல், தண்டிக்காமல், தானும் சேர்ந்து அந்த பெண்ணை கற்பளித்துள்ளான்.

  தாயிடம்!

  தாயிடம்!

  ஒரு கட்டத்தில் இந்த கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத அந்த அபலைப் பெண், தாயிடம் கதறி அழுது நடந்த மொத்த விஷயத்தையும் கூறி இருக்கிறாள். உடனே, தாயும், பாதிக்கப்பட்ட பெண்ணும் காவல் நிலையம் சென்று அந்த கொடூர அப்பா - மகன் மீது புகார் அளித்தனர்.

  டெக்ஸ்டைல் தொழில்!

  டெக்ஸ்டைல் தொழில்!

  காவலர்கள் புகாரின் பெயரில் விசாரணை துவங்கிய போதுதான், அந்த அப்பா - மகன் இருவரும் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண் பஞ்சாப் மாநிலத்தில் மன்சா எனும் பகுதியை சேர்ந்த மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகளாவார்.

  கைது!?

  கைது!?

  செவ்வாய் அன்று மனசா காவல் நிலையத்தில் இந்த வழக்கு குறித்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்ஸ்பெக்டர் கடந்த சில மாத காலமாக அப்பா - மகன் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆத்மா சிங் (அப்பா) மற்றும் அமன்தீப் (மகன்) இருவரையும் கூடிய விரைவில் கைது செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: life women india
  English summary

  Both Father and Son Raped a Minor Girl for Long Time.

  Both Father and Son Raped a Minor Girl for Long Time. She was Helpless Because Her Financial Situation was Too Bad. And She is Daughter of Late Ex MLA.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more