சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்த ஓர் அதிசயம்! Wonder Women #001

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டது.இத்தனை ஆண்டுகள் கழித்து ஓர் வரலாற்று நிகழ்வு நடந்திருக்கிறது. என்ன தெரியுமா? இத்தனை ஆண்டுகளில் இந்திய கப்பற்படையில் விமானியாக எந்த ஒரு பெண்ணும் இருந்ததில்லை. ஆனால் சமீபத்தில் அந்த வரலாறு உடைந்தது. ஆம், சுபாங்கி ஸ்வரூப் என்ற பெண் இந்தியாவின் முதல் நேவி பைலட்டாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம் :

அறிமுகம் :

இவர் உத்திர பிரதேசத்தில் இருக்கக்கூடிய பரேலியில் பிறந்திருக்கிறார். விஐடி யில் பயோடெக்னாலஜி இன்ஜினியரிங் முடித்த இவர், டேக்வாண்டோ என்னும் தற்காப்பு கலையிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

Image Courtesy

அப்பா :

அப்பா :

சுபாங்கிக்கு அப்பா தான் ரோல் மாடல். ஆம், அப்பா தற்போது கப்பற்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓர் அதிகாரி. அப்பாவைப் பார்த்தே வளர்ந்த சுபாங்கிக்கு தானும் கப்பற்படையில் இணைந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்பது பெரு விருப்பமாக இருந்திருக்கிறது.

Image Courtesy

மூன்று பேர் :

மூன்று பேர் :

சுபாங்கி மட்டுமல்ல அவருடன் சேர்ந்து இன்னும் மூன்று பெண்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்க் ஏர் டிராஃபிக் அப்சர்வென்ஸிற்காகவும் அதனை கன்ட்ரோல் செய்யவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் .

இவர்கள், கப்பலில் இருக்கக்கூடிய தொலை தொடர்பு சாதனங்களுக்கும் மற்றும் ஆயுதங்களுக்கும் இவர்களே பொறுப்பு.

Image Courtesy

யார் அந்த மூன்று பேர் ? :

யார் அந்த மூன்று பேர் ? :

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபாங்கியுடன் தேர்வு செய்யப்பட்டவர்கள். டெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா மற்றும் கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா. இவர்களை Naval Armament Inspectorate தேர்வு செய்திருக்கிறது.

இவர்கள் கேரளாவின் கண்ணூர் மாநிலத்தில் இருக்கும் எழிமலா நேவல் அகாடமியில் இணைந்திருக்கிறார்கள்.

இதுவரை இதற்கும் எந்த பெண் பணியாளரும் வந்ததில்லை.

Image Courtesy

பயிற்சி :

பயிற்சி :

தற்போது சுபாங்கிக்கு ஹைதிராபாத்தில் இருக்கக்கூடிய ஏர் ஃபோர்ஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது. சுமார் ஒரு வருடம் பயிற்சிக்காலம் முடிந்ததும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சுபாங்கி பயிற்சி பெறுகிற ஹைதிராபாத் பயிற்சி மையத்தில் தான் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படையில் இருக்கும் விமானிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

Image Courtesy

பயிற்சி முடிந்த பிறகு :

பயிற்சி முடிந்த பிறகு :

சுபாங்கி பயிற்சி முடிந்த பிறகு maritime reconnaissance stream.ல் விமானியாக பணியாற்றுவார். அத்துடன் சுபாங்கி தான் ஐஎன்எஸ் கருடாவிற்கு தலைமைப் பொறுப்பு.

Image Courtesy

போர் விமானங்கள் :

போர் விமானங்கள் :

சில மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் ஆவனி சதுர்வேதி,பாவனா காந்த்,மோகனா சிங் ஆகிய பெண்கள் பறக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்தே கப்பற்படையிலும் சோதனை அடிப்படையில் போர் விமானங்களை ஓட்டுவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது.

Image Courtesy

என்ன சொல்கிறார் சுபாங்கி :

என்ன சொல்கிறார் சுபாங்கி :

சுதந்திர இந்தியாவில் எழுபது ஆண்டுகள் கழித்து விமானப்படையில் ஜெட் விமானத்தில் பைலட்டாக பணியாற்றும் வாய்ப்பு குறித்து கேட்டபோத, இது ஒரு சிறந்த வாய்ப்பு மட்டுமல்ல இத்துடன் பெரிய பொறுப்பும் இருக்கிறது என்கிறார் சுபாங்கி.

Image Courtesy

பெண்கள் முன் வர வேண்டும் :

பெண்கள் முன் வர வேண்டும் :

பெண்கள் எப்போதும் ஒரு கம்ஃபோர்ட் ஜோனில் தான் இருப்பார்கள் என்று பிறர் நினைப்பதை உடைக்க வேண்டும். எந்த சூழல் வந்தாலும் எதிர்த்து போராடுவோம் என்று காட்ட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.

பெண்கள் பலரும் கப்பற்படையில் இணைந்து பணியாற்ற முன் வர வேண்டும் என்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A women Made History to Became first Indian Navy Pilot

A women Made History to Became first Indian Navy Pilot