Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
ஆயில் மற்றும் ஆல்கஹால் இன்ஜெக்ட் செய்து அசகாயசூரனாக மாறிய விசித்திர மனிதன்!
இங்கு உடற்கட்டை அதிகரிக்க ஆயிலை இன்ஜெக்ட் செய்து கொண்ட விசித்திர மனிதன் பற்றி கூறப்பட்டுள்ளது.
தங்கள் உடலை விரும்பாத நபர் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் தங்கள் உடல் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். தாங்கள் விரும்பும் படி உடல் இல்லை என்றால் சிலர் ஜிம் செல்வார்கள், சிலர் டயட் இருப்பார்கள்.
ஆனால், பாடிபில்டர் போன்ற உருவம் வேண்டும் என்பதற்காக யாராவது ஆயில் மற்றும் ஆல்கஹாலை இன்ஜெக்ட் செய்துக் கொள்வார்களா? இப்படி செய்தால் மரணிக்கக் கூடும் என தெரிந்தும் செகாடோ எனும் 48 வயது ஆண் இப்படி செய்துள்ளார்...

ஏளனம்!
உடல் ஒல்லியாக இருந்ததால் இவரை பலரும் கேலி செய்துள்ளனர். இவரது உடல் எடை குறைந்ததற்கு முக்கிய காரணம் இவருக்கு இருந்த போதை பழக்கம் தான்.
இதனால் ஒல்லி நாய், எலும்புக்கூடு என பல பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் ஆனார் இவர். இதனால், தன்னையும், தனது வாழ்வையும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் வல்திர் செகாடோ எனும் இந்நபர்.

உடற்பயிற்சி மையம்!
கேலி கிண்டலுக்கு ஆளான செகாடோ ஜிம் செல்ல முடிவு செய்தார். ஆனால், அதன் மூலம் கிடைத்த பலன் இவருக்கு போதியதாக இல்லை.
இதனால் ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவை இன்ஜெக்ட் செய்து உடற்கட்டை ஏற்றினார்.

அசகாயசூரன்!
எனவே, தனது உடற்கட்டு அசகாயசூரன் போல இருக்க வேண்டும் என எண்ணிய இவர் அதற்காக என்ன விலை தரவும் தயங்கவில்லை.
இதனால், ஆயில், ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்து ஹல்க் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும், இது தன்னை கொல்லும் என அறிந்தே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார் செகாடோ.

வலிமிகுந்தது!
இந்த ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்துக் கொள்வது மிகவும் வலிமிகுந்த செயலாகும். இது மிகவும் அபாயமானதும் கூட.

சின்தால் ஆயில் (Synthol)!
தனது உடற்கட்டை பெரிதாக்கிக் கொள்ள இவர் சின்தால் ஆயில் இன்ஜெக்ட் செய்துக் கொண்டார். கடந்த ஐந்து வருடங்களாக இவர் இந்த முறையை பின்பற்றி வருகிறார்.
இதனால் இவர் 55 பவுண்டுகள் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவரது பைசப் எ;அளவு 23 இன்சாக அதிகரித்துள்ளது.

பக்கவிளைவுகள்!
இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் வலிமை ஏதும் அதிகரிக்காது, தோற்றம் மட்டும் தான் பெரிதாக தெரியும். மேலும், இந்த உருவை கண்டு பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications
