Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
நேப்கின்களுக்கு இல்லாதது ஸ்டிக்கர் பொட்டுக்கும், வளையலுக்கும் எதற்கு ஜெயிட்லி சார்!
ஸ்டிக்கர் பொட்டுக்கு டேக்ஸ் ஃப்ரீ, நேப்கின்களுக்கு இன்னும் அதே டேக்ஸ். பெண்களுக்கு எது முக்கியம் என இன்னுமா இந்த அரசு தெரிந்துக் கொள்ளவில்லை.
கடந்த மே 18 அன்று, இந்திய அரசு சரக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி திருத்தங்கள் வெளியிட்டது. அதில் எந்தெந்த பொருட்களுக்கு என்னென்ன சதவிதத்தில் வரி மற்றும் இவற்றுக்கு எல்லாம் வரிவிலக்கு என்ற முழு பட்டியல் இடம் பெற்றிருந்தது.

ஸ்டிக்கர் பொட்டும், வளையல்களும்!
புதிய ஜி.எஸ்.டி திட்டப்படி அந்த வரி பட்டியலில் ஸ்டிக்கர் பொட்டுக்கும், வளையல்களுக்கும் வரி இல்லை என அறிவிக்கப்படிருந்தது.

நேப்கின்!
ஆனால், மாதாமாதம் பெண்களின் அத்தியாவசிய பொருளாக இருக்கும் நேப்கின்களுக்கு இன்னும் அதே 12% வரி நீடிப்பதாகவும் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தான் இந்திய அரசின் சிந்தனையா?
ஒருவேளை இந்திய பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு, குங்கமம், மற்றும் வளையல் வாங்குவதன் மூலம், அதற்கு பிடிக்கப்படும் வரி பணத்தை தான் தங்கள் வீட்டு வருமானத்தில் இருந்து சேமித்து வைத்து இல்லறத்தை மேம்படுத்துவார்கள் என இந்திய அரசு எண்ணுகிறதா என்ன?

முக்கிய தகவல்!
இன்றளவும் இந்தியாவில் மாதவிடாய் சுழற்சி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களில் 88% பெண்கள் நேப்கின் வாங்க முடியாது, வாங்க அணுக முடியாத சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவதிகள்!
நேப்கின் பற்றிய விழிப்புணர்வு இல்லாத, நேப்கின் பற்றி அறியாத எத்தனையோ, கிராமப்புற, நகர்களின் வெளிப்புறங்களில் வாழ்ந்து வரும் பெண்கள், பிளாஸ்டிக், பேப்பர், பழைய துணை போன்றவற்றை மாதவிடாய் காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

பாதிப்பு!
இதனால், அவர்களுக்கே தெரியாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், இனப்பெருக்க மண்டல தொற்று மற்றும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசு நேப்கின்களுக்கு வரிவிலக்கு அளித்திருக்கலாமே.

சென்ற ஒரு மாதமாக...
#LahuKaLagaan என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நேரடியாக நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லியிடம் நேப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கடந்த ஒரு மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இதற்காக சில பிரபலங்கள், காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் போன்றவர் நேரடியாகவே அவரை சந்தித்தும் பேசினர்.

இது அவசியமா?
பிரெட்க்கு கூட வரிவிலக்கு அளித்துள்ள நமது இந்திய அரசு, பெண்களின் வலிமிகுந்த நாட்களில் உதவியாக இருக்கும் நேப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்காதது ஏன்?



Click it and Unblock the Notifications
