என் கணவர் எப்படி இருந்தால் உனக்கு என்ன? நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பெண்!

Posted By: Staff
Subscribe to Boldsky

கணவர் அழகாக இல்லை, இவர்கள் பொருத்தமான ஜோடி இல்லை என அழகை சுட்டிக்காட்டி பிரிய கூறிய நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அசத்தல் மனைவி பற்றிய கட்டுரை தான் இது.

டெங்ஸ் சான் பெட்ரோவை கலியுக கண்ணகி என்றே கூறலாம். அந்த கண்ணகி கணவனுக்கு நடந்து அநீதியை எதிர்த்தாள். சான் பெட்ரோ, தன் கணவனின் அழகி சுட்டிக் காட்டி ஏளனமாக பேசிய நெட்டிசன்களை வறுத்தெடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்படம் பகிர்ந்தார்!

புகைப்படம் பகிர்ந்தார்!

சான் பெட்ரோ, தனது கணவருடன் இருக்கும் படம் ஒன்றை சமூக தளம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அங்கு வெடித்தது மனிதர்களின் கீழ் தனமான மனோபாவம்.

சரியான ஜோடியா?

சரியான ஜோடியா?

நம்மவர்கள் கண்களுக்கு கவர்ச்சி மட்டும் எதிரியும். முகத்தின் அழகை மட்டுமே காண்பவர்களுக்கு அகத்தின் அழகு தெரியாது. மாநிறம் கொண்ட சான் பெட்ரோவின் கணவரை கண்டு நீங்கள் சரியான ஜோடி இல்லை என கூறியுள்ளனர்.

உலகம் முழுக்க இதே மனோபாவம்...

உலகம் முழுக்க இதே மனோபாவம்...

நம்ம ஊர்களில் திருமணத்திற்கு யாரும் மனதார வாழ்த்த செல்லவே மாட்டார்கள். வயிறார மொய் வைத்த பணத்திற்கு சாப்பிட வேண்டும். மற்றவர் உடைகள் பற்றி விமர்சிக்க வேண்டும். மாப்பிள்ளை, மணமகள் ஜோடி பொருத்தம் பற்றி குறை பேச வேண்டும்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

இதையே தான் நெட்டிசன்களும் ஆன்லைனில் செய்துள்ளனர். சான் பெட்ரோ பதிவு செய்த படத்திற்கு கீழே, நீங்கள் பொருத்தமான ஜோடி இல்லை, பேசாமல் பிரிந்துவிடுங்கள் என பல கமெண்ட்டுகள் பதிவு செய்து ஏளனம் செய்துள்ளனர்.

வெகுண்டெழுந்த சான் பெட்ரோ!

வெகுண்டெழுந்த சான் பெட்ரோ!

இந்த கமெண்ட்டுகளை கண்ட சான் பெட்ரோ., மேலும் சில செல்ஃபீ படங்களை தனது கணவருடன் எடுத்து அதை உடனே பதிவு செய்தார். தாங்கள் இருவரும் நல்ல உறவில் தான் இருக்கிறோம்.

கணவன், மனைவி உறவிற்கு அழகு தேவையில்லை, குணமே தேவை என கூறும்படி, ஏளனம் செய்த நெட்டிசன்களுக்கு தகுந்த பதிகலடி கொடுக்கும் வகையில் அவர் படங்களை பதிவு செய்திருந்தார்.

புத்தி வேண்டும்!

புத்தி வேண்டும்!

அழகும், உடல் வடிவமும் நிலையற்ற ஒன்று. இன்று இருப்பது, நாளை இருக்காது. நிலைத்த நல்ல உறவில் சேர அழகும், உடல் வடிவமும் காண்பதற்கு முன்னர் நல்ல குணமும், பண்பும் இருக்கிறதா? என்று யோசித்து வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் நல்லதே நடக்கும் எந்நாளும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Odd Couple is Breaking Sterotypes!

This Odd Couple is Breaking Sterotypes!