அப்பாவை கொன்ற கொலையாளியை தண்டிக்க ஐ.ஏ.எஸ் ஆன வீர மங்கை!

Posted By:
Subscribe to Boldsky

இது கிஞ்சல் சிங் எனும் வீர மங்கையின் கதை. படிக்க சினிமா போல இருந்தாலும், இது தான் நடந்த உண்மை. கிஞ்சல் சிங்கின் தந்தை கொலை செய்யப்பட்டார். அப்போது கிஞ்சல் சிங் சிறு குழந்தை, அவரது தங்கை தாயின் வயிற்றில் கருவுற்று வளர்ந்து வந்தார்.

1982ம் ஆண்டு தான் கிஞ்சல் சிங்கின் தந்தை கொலை செய்யப்பட்டார். இவரது தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. அவருடன் பணிபுரிந்து வந்த அதிகாரியே சுட்டுக் கொன்றார். இது உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆறு மாதம்!

ஆறு மாதம்!

கிஞ்சல் அப்போது வெறும் ஆறுமாத குழந்தை. அவரது தாய் கர்பிணியாக இருந்தார். சுட்டுக் கொல்லும் போது கிஞ்சலின் தந்தை மற்றும் டி.எஸ்.பியான அவர் கூறிய வார்த்தை, "என்னை கொன்று விடாதே எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்."

படிப்பு!

படிப்பு!

கிஞ்சல் மற்றும் அவரது சகோதரி தங்கள் படிப்பிற்காக நிறைய தியாகங்கள் செய்துள்ளனர். கிஞ்சல் டெல்லியின் ஸ்ரீ ராம் கல்லூரியில் பயின்றார். முதல் செமஸ்டர் படித்துக் கொண்டிருக்கும் போது தான், தனது தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறிய விரைவில் இறந்துவிடுவார் எனும் செய்து அவருக்கு தெரிய வந்தது.

விபா தேவி!

விபா தேவி!

கிஞ்சல் தனது தாய்க்கு, நான் மற்றும் தங்கை இருவரும் கண்டிப்பாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெறுவேன் என சத்தியம் செய்தார். மீண்டும் தேர்வு எழுத டெல்லி திரும்பிய இரண்டாவது நாளில் அவரது தாயார் மரணமடைந்தார். கிஞ்சல் டெல்லி பல்கலைகழகத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.

அக்கா, தங்கை!

அக்கா, தங்கை!

தாய் இறந்த பிறகு, அக்கா, தங்கை இருவரும் டெல்லியில் தஞ்சம் அடைந்தனர். விடுமுறை, விழா நாட்கள் என எந்நாளும் எங்கும் செல்லாமல், படிப்பே கதி என இருவரும் படித்தனர். ஒருவருக்கு ஒருவர் பெரிய உறுதுணையாக இருந்தனர். கிஞ்சல் ஐ.ஏ.எஸ் ஆகவும், ப்ரஞ்சல் சிங் ஐ.ஆர்.எஸ் ஆகவும் தேர்வு பெற்றனர்.

தண்டனை!

தண்டனை!

உத்திரப்பிரதேச நீதிமன்றம் கே.பி சிங் கொலை வழக்கில் 31 வருடங்கள் கழித்து ஜூன் 5, 2013ல் தண்டனை கொடுத்தது. கிஞ்சல் சிங்கின் அப்பாவின் கொலை வழக்கில் தொடர்பு இருந்த 18 போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

கிஞ்சல் சிங்கின் வாழ்க்கை எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real-life Stories: Kinjal Singh Who Became An IAS Officer To Punish Her Dad's Killer!

Real-life Stories: Kinjal Singh Who Became An IAS Officer To Punish Her Dad's Killer!
Story first published: Friday, August 4, 2017, 17:50 [IST]