For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு வாழ்க்கையில் எதிர்ப்பும் தடங்கலும் இருக்கிறதா? உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்!!

உங்களுக்கு வாழ்வில் இருக்கும் எதிர்ப்புகளுக்கும் தடங்களையும் சுக்கு நூறாக போக்கச் செய்ய முன்னுதாரணமாக இருக்கும் இதிகாச தெய்வங்களைப் பற்றிய கதைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

வாழ்க்கையில் சிறந்த மனிதர்கள் எல்லாம் தங்கள் இலட்சியம், குறிக்கோளை அடைய நிறைய எதிர்ப்புகளை சந்தித்து தான் எழுந்துள்ளனர். உங்கள் இலக்குகளுக்கு எதிராக ஒரு மனிதர் வரலாம், விபத்து ஏற்படலாம், ஏன் நீங்களே காரணமாகலாம் அல்லது இயற்கையின் விளையாட்டாக கூட இருக்கலாம் யார் கண்டது இதையெல்லாம் கடந்து இவ்வுலகில் நாம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.

நடைமுறையில் கூட நீங்கள் அனுபவிக்கும் நிறைய வெற்றிகள், தடைகள், தோல்விகள் இல்லாமல் கடந்து சென்று இருக்க முடியாது. ஒரு மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சி அல்லது வெற்றி இலக்கியங்கள் எல்லாம் அவர்களின் விடாமுயற்சி, தடைகள் இவைகளை கடந்து ஜெயித்த அவர்களின் உருவமாகத் தான் திகழ்கிறது.

இயேசு :

கிருஸ்துவ மதத்தில் கூட இயேசு கிறிஸ்துக்கு எதிராக யூதர்கள் துரோகம் இழைத்தார்கள். ஆனால் அவர் தனக்கு வந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் தனது குறிக்கோளை அடைய தன்னுடைய வாழ்க்கையையே கொடுத்து மற்றவர்களுக்கு உதவினார்.

The Importance Of Opposition And Life Reverses

ஹரி தாஸ் தாகூர் :

ஹரிதாஸ் தாகூர் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஒரு துறவி, அவர் புனிதத்தை கெடுக்கும் வகையில் அவரின் மீது பொறாமை கொண்ட ஜமீன்தார் சூழ்ச்சியால் 21 தடவை ஒரு அழகான பெண்ணை கொண்டு இடையூறு ஏற்படுத்தினார். ஆனால் ஹரிதாஸ் தன் இலக்கை மட்டுமே நினைத்து தனது ஞானத்தால் அதைக் கடந்து இந்த உலகில் புனிதன் என்ற புகழையும் பெற்றார்.

பிரகலனாதன் :

ஏன் இரணிய கசிபு, பிரகலாதன் கதை தெரியுமா? அதில் கூட எல்லா மக்களையும் கொடுமைபடுத்தி ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடின இரணுயகசிபு கடைசியில் தன் மகனுக்கே இடையூறு ஏற்படுத்தினான். அவன் மகன் பிரகலாதனோ விடா முயற்சியாய் துதித்த நாமத்தின் பயனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே தோன்றி இரணிய கசிபுவை கொன்று இந்த உலகத்தை காப்பாற்றவில்லையா.

கிருஷ்ணதாஸ் :

கிருஷ்ணதாஸ் கவிராஜாவுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியுமா? இவர் தான் சைதன்ய சரிதமித்ரா ஆசிரியர் ஆவார். ஒரு நாள் இவர் தனது வீட்டிலிருந்து வரும் வழியில் வருண பகவான் இந்திரனால் பெரும் மழை பேரழிவு ஏற்பட்டது. அப்பொழுது அவரின் பக்தியின் விடாமுயற்சியால் ஸ்ரீ கிருஷ்ணன் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து எல்லாரையும் காப்பாற்றினார்.

பிரபுபதா :

பிரபுபதா கதையை நினைத்து கொள்ளுங்கள். அவருக்கு ஜெலதுதா பெயர் கொண்ட கப்பலில் இலவசமாக அமெரிக்கா போக வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பணம் இல்லை, பேச நண்பர்கள் இல்லை, உடல் நிலை சரியில்லை இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மேல் தீராத நம்பிக்கையை கொண்டு இருந்தார்.

அவரின் நம்பிக்கையையே அவருக்கு அமெரிக்க பிரச்சாரங்களில் வெற்றி கிடைக்கச் செய்தது. அவர் சொல்வது ஒன்று தான் வாழ்க்கையில் சிரமங்களும் கஷ்டங்களும் வரத் தான் செய்யும் அதைக் கடந்து சென்று வெற்றி காண்பதே புத்திசாலித்தனம் என்கிறார்.

இதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்பட உங்கள் கஷ்டங்கள் தான் உங்களை வளர்க்கும் வாய்ப்பு. அதை நீங்கள் கடவுள் நம்பிக்கை மூலமும் பெறலாம். வாழ்க்கையில் ஒரு சமயத்தில் உங்க மனசு சொல்லும் எதிர் வரும் பிரச்சினைகளை எதிர் கொண்டு சமாளிக்க வேண்டுமென்று, இதுவே பக்தி வழியில் எடுத்து கொண்டால் நமது பிரச்சினைகளும் வேதனைகளும் கடவுளால் குறைக்கப்படும்.

கவலையை சமாளிக்க இறைவனை நாடுங்கள்:

நாம் கோபமாக இருந்தாலோ அல்லது உதவியில்லாமல் தவித்தாலோ உங்கள் கஷ்டங்களை சமாளிக்க இறைவனின் பிராத்திக்க சைதன்ய மகாபிரபு பின்பற்றிய 3 வது பிரிவு ஷிகடஅஸ்டகம் படித்தால் போதும் உங்கள் எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், பணிவு, ஆன்மீக தேடல் போன்றவற்றிற்கான பதில்களை கொடுக்கிறது.

நமது பக்தி அன்பு, மற்றவருக்கு உதவும் மனப்பான்மை போன்றவற்றை கொண்டு இருந்தால் கண்டிப்பாக நீங்கள் உங்கள் வாழ்வில் எதிர்ப்புகளை எதிர்த்து மேலே வரலாம் அதற்கான பரிசுகள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும்.

உங்களது பக்தி சரியான பயிற்சியாக இல்லாமல் இருந்தால் பரவாயில்லை நீங்களும் அந்த பாதையில் தான் இருக்கிறீர்கள். நீங்களே இருட்டில் இருக்காதீர்கள் வெளிச்சத்திற்கு வந்து உங்கள் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையில் எந்த விஷயங்களை எடுத்து கொண்டு உற்று நோக்கி செயல்பட போறீங்கள் என்பது தான் கேள்வி.

உங்கள் சந்தோஷம் மற்றும் விரக்தி மனநிலையை அறிந்து செயல்படுங்கள். பக்தியின் மூலம் மூலம் பெறும் உங்கள் நேர்மறை எண்ணங்களை நாளுக்கு நாள் வளர்த்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

English summary

The Importance Of Opposition And Life Reverses

The Importance Of Opposition And Life Reverses
Desktop Bottom Promotion