Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தாயன்பை விட இந்த உலகில் சிறந்தது ஏதும் இல்லை என்பதை விளக்கும் புகைப்பட தொகுப்பு!
தாயன்பை விட இந்த உலகில் சிறந்தது ஏதும் இல்லை என்பதை விளக்கும் புகைப்பட தொகுப்பு!
அம்மா இருக்கும் வரை அவரது அருமை, பெருமை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவரது பிரிவின் போது தான், அவரது முக்கியத்துவம் என்ன என்பதை நாம் உணர முடியும்.
இது அம்மாவை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், அம்மாவை மருத்துவமனையின் அனுமதித்த அனுபவம் உடையவர்கள், அம்மாவை இழந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
இந்த உலகில் விலை உயர்ந்தது என்ன? ஐ-போன், வைரம், பிளேட்டினம், மார்ஸ்-க்கு அனுப்பும் ராக்கெட்..., இதில் ஏதும் இல்லை. மனிதரின் அன்பு, அதிலும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நாம் என்றும் நன்றாக இருக்க வேண்டும் என கருதும் தாயின் அன்பு.
தாய் அன்பு இவ்வளவு பெரியதா...? பெற்ற குழந்தைக்காக தாய் இதெல்லாம் செய்வாளா...? என வியக்க வைக்கும் உயிரோட்டம் கொண்ட புகைப்படத் தொகுப்பு...

மத்திய பிரதேஷம்!
மத்திய பிரதேஷம் மாநிலத்தில் டாமோ என்ற ரயில்வே டிராக் பகுதியில் இளம் தாய் ஒருவர் இறந்து கிடந்தார். தாய் இறந்தது கூட அறியாமல் பசியில் அழுதபடி மாரில் பால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது இந்த குழந்தை.
இளம் பெண் மரணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு ஆளாகினர். கடைசியில் போலீஸ் அக்குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Image Credit:darpanmagazine.com

ஓடிஸா!
ஓடிஷாவின் பலசூர் மாவட்டத்தில் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த படத்தை யுனிசெப் உலகம் முழுதும் பரப்பியது. 2006ல் நடந்த இந்த நிகழ்வின் போது அந்த தாய் முகம் வரை வெள்ள நீர் உயர்ந்த போதும் தனது குழந்தையை தலைக்கு மேல் தூக்கி வைத்து நடந்து வந்த காட்சி இந்த உலகில் தாயின் அன்பை காட்டிலும் உயர்ந்தது எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக அமைந்தது.
Image Credit: dailyasianage.com

பரவிய தீ...
வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு தீயும் புகையும் அதிகரித்தது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துவிடுமோ என அஞ்சிய தாய், நெருப்பு சூழந்ததை கூட பொருட்படுத்தாமல், குழந்தையை ஜன்னலுக்கு வெளியே பிடித்தவாறு போராடினார். இதனால் குழந்தை எளிதாக சுவாசிக்க முடியும் என அவர் கருதினார். இந்த படத்தை, பக்கத்து வீட்டு பெண் எடுத்து பகிர்ந்தார். அப்போது அந்த குழந்தையின் வயது வெறும் 7 மாதங்கள் தான்.
Image Credit: nydailynews.com

ஜேமி ஆக்!
ஜேமி ஆக்கின் கதை மிகவும் நெகிழ்ச்சியானது. 2010ம் ஆண்டு குறைப்பிரசவத்தில் இரட்டையர் பெற்றெடுத்தார் ஆக். ஆனால், மருத்துவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே உயிர் மிஞ்சுவார் என கூறிவிட்டனர்.
பிறந்து இறந்த குழந்தையை ஜேமி ஆக் மற்றும் டேவிட் ஆக் கட்டியணைத்த படி படுத்திருந்தனர். இறந்ததாக கருதப்பட்ட இரண்டாம் குழந்தை திடீரென கண்விழித்து தாயை பார்த்த நொடியில் மருத்துவர்களே வியப்பின் உச்சிக்கு சென்றனர்.
Image Credit: Johnson's Baby U.S.

அழுகை!
தனது குழந்தை அழும் போது தாய் சிரிக்கும் ஒரே தருணம், பிரசவிக்கும் தருணம் தான். அதிக சப்தத்துடன் அழும் குழந்தையை கண்டு தாய் புன்னகைக்கும் அழகிய காட்சி.
Image Credit: kidspot.com.au

பொம்மைகள்!
தெரேசா ருசன் எனும் இந்த பெண்மணி குழந்தைகள் இழந்த தம்பதிகளுக்கு குழந்தை பொம்மைகள் செய்து தந்து வருகிறார். இதுவரை இவர் 250-க்கும் மேற்ப்பட்ட பொம்மைகள் செய்துக் கொடுத்துள்ளார். இதில் சிறப்பு என்னவெனில், இறந்த குழந்தைகளை போலவே காட்சியிளிக்கும் படி இவர் பொம்மைகள் செய்து தருகிறார்.
Image Credit: mirror.co.uk

லிண்டா!
பிறக்கும் போதே கைகள் இன்றி பிறந்தவர் லிண்டா பானன். இதை ஆங்கிலத்தில் ஹால்ட்-ஆரம் சின்றோம் என கூறுகிறார்கள். இவருக்கு பிறந்த மகனும் இதே குறைபாட்டுடன் பிறந்தான்.
ஆனாலும், எல்லா தாய்களையும் போல, தனது மகனுக்கு அனைத்து வேலைகளிலும் உதவி செய்து வருகிறார் லிண்டா. இவர் நீச்சல் அடிப்பார், எழுல்துவார், கிட்டாரும் வாசிப்பார்.
இப்போது சொல்லுங்கள்... இந்த உலகில் தாயன்பை விட சிறந்தது, வேறேதும் உண்டா...?
Image Credit: Barcroft TV / Youtube



Click it and Unblock the Notifications