மாடல் அழகிகள் எப்போதும் சிக்கென்று இருக்க பஞ்சுருண்டைகளை சாப்பிடுவார்கள் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ளும் மாடல் அழகிகளைப் பார்க்கும் போது, எப்படி தான் இவர்கள் தங்களது உடலை சிக்கென்று வைத்துக் கொள்கிறார்களோ என்று நம்மில் பலரும் நினைப்போம். ஆனால் எப்போதும் சிக்கென்று இருக்க அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். இதற்காக மிகவும் கடுமையான டயட் மற்றும் வித்திரமான பழக்கங்களை எல்லாம் அவர்கள் பின்பற்றுவார்கள்.

சமீபத்திய ரிபோர்ட் ஒன்றில், மாடல் அழகிகளைப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. அது மாடல் அழகிகள் ஆரஞ்சு ஜூஸில் நனைத்த பஞ்சுருண்டையை சாப்பிடுகிறார்களாம். இக்கட்டுரையில் சில மாடல் அழகிகள் பின்பற்றும் விசித்திரமான டயட் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் குறித்த உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜீரோ சைஸ்

ஜீரோ சைஸ்

மாடல் அழகிகளைப் பார்த்தால், அவர்கள் உடலின் மேல் பகுதி சிறியதாகவும், இடுப்பு பகுதி அகலமாகவும் இருக்கும். இப்படியொரு உடலமைப்பைப் பெறுவதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வதோடு, உடல் எடையையும் குறைப்பார்கள். போக போக ஜீரோ சைஸ் உடலமைப்பைப் பெற முயற்சிப்பார்கள். தற்போதைய மாடலிங் உலகில் ஜீரோ சைஸ் கூட அதிகமாம். பொதுவாக ஜீரோ சைஸ் உடலைப் பெறுவதே எளிதானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங் ஏஜென்சிகள்

மாடலிங் ஏஜென்சிகள்

மாடலிங்கில் நுழையும் போது, ஆடையின்றி போஸ் கொடுக்க வேண்டியது கட்டாயம் என்று சொல்லாத மாடலிங் ஏஜென்சிகள், போக போக இளம் மாடல் அழகிகளிடம் மேலாடை இன்றி போட்டோசூட்டிற்கு கேட்பார்களாம். மாடல் அழகிகளும் மாடலிங் உலகில் வெற்றி பெற, இறுதியில் ஆடையின்றி போஸ்களைக் கொடுக்க ஒப்புக் கொள்வார்களாம்.

பாலியல் சித்ரவதை

பாலியல் சித்ரவதை

மாடலிங் உலகில் நுழையும் பெரும்பாலான மாடல் அழகிகளும் பாலியல் சித்ரவதைகளை கட்டாயம் சந்திப்பார்களாம். ஒருசிலர் தான் இம்மாதிரியான தொல்லைகளை சந்தித்தது இல்லையாம்.

பஞ்சுருண்டை டயட்

பஞ்சுருண்டை டயட்

தற்போதைய மாடல் அழகிகள் பின்பற்றும் ஒரு லேட்டஸ்ட் ட்ரெண்ட் தான் பஞ்சுருண்டை டயட். இதனை மதிய வேளையில் உணவின் போது ஆரஞ்சு ஜூஸில் நனைத்த பஞ்சுருண்டையையும் சாப்பிடுவார்களாம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, குறைவான அளவில் உணவை உட்கொள்ள செய்யுமாம்.

வெளியே எடுத்துவிடுவார்கள்

வெளியே எடுத்துவிடுவார்கள்

மாடல் அழகிகள் ஒருவேளை சற்று அதிகமாக சாப்பிட்டுவிட்டால், வலுக்கட்டாயமாக விழுங்கிய அந்த பஞ்சுருண்டையை வெளியே எடுப்பார்களாம். இதனால் அதிகமாக சாப்பிட்ட உணவை உடல் ஏற்றுக் கொள்ளாதாம்.

போதைப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால்

போதைப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால்

இறுதியில் பெரும்பாலான மாடல் அழகிகள் எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டுமென்பதற்காக போதைப் பொருட்கள் மற்றும் மதுவிற்கு அடிமையாகி விடுவார்களாம்.

மாடல் அழகியாக இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Models Eat Cotton Balls To Stay Thin

The secret diet of models has been finally revealed! They dip cotton balls in orange juice and have them. Find out about this bizarre practice!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter