For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்கள்!

  |

  இதில் சில திருமணத்தை காணும் போது, வடிவேலுவின் "உனக்கு இது எத்தனாவது... உன்னவிட ரெண்டு லீடிங்கு...." டயலாக் மைண்டில் ஒலித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. நடிகர் ஜெமினி எல்லாம் அந்த காலத்திலேயே நான்கு திருமணம் செய்தவர் என கூறுகிறார்கள்.

  ஆனால், அதே காலத்தில் நடிகையரும் கூட முதல் திருமண பந்தத்தில் இருந்த போதே, வேறு ஒரு நடிகருடன் ரீல் லைஃபில் மட்டுமின்றி ரியல் லைஃபிலும் டூயட் பாடியுள்ளனர். இப்படி ஒரு சிலர் நடிகர்கள் திருமணமான பெண்ணை மணந்த கதை இருக்க, மற்றொரு புறம் ஏமார்ந்து திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள்....

  1950-களில் இருந்து 2000கள் வரை என காலங்கள் கடந்தாலும் இந்த திருமணமான பெண்களை மணக்கும் முறை மட்டும் சினிமாவில் இருந்து கடந்து செல்லவே இல்லை....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  எம்.ஜி.ஆர்

  எம்.ஜி.ஆர்

  ஜானகி திரையுலகில் நுழைந்த ஆரம்பத்திலேயே நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதி பட் என்ற கன்னட கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது.

  இராஜ முக்தி என்ற படத்தில் ஜானகி கதாநாயகியாக நடித்த போது, அதே படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். ஜானகி பார்க்க தனது முதலாவது மனைவியின் சாயலில் இருப்பதால், அவர் மீது ஈர்ப்பு கொண்டார் எம்.ஜி.ஆர்.

  காதல்!

  காதல்!

  1950ல் மருதநாட்டு இளவரசி படத்தின் போதுதான் இவர்கள் இருவரும் காதலித்த துவங்கினார்கள். ஒருநாள் இவர்கள் இருவர் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் கணபதி பட்டிடம் சிக்கவே சண்டை முத்தி ஜானகி அவரை பிரிந்து எம்.ஜி.ஆரிடம் தஞ்சம் அடைந்தார்.

  ஆயினும், ஏற்கனவே எம்.ஜி.ஆர்-ன் இரண்டாவது மனைவி சதானந்தவதி உயிருடன் இருந்தார். 1962 பிப்ரவரி 25 சதானந்தவதி மரணம் அடைந்தார். இதன் பிறகு 1962 ஜூன் 14-ம் நாள் இவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டனர். மேலும், ஜானகியின் மகன் சுரேந்திரன் என்பவரையும் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார்.

  சரத் குமார்

  சரத் குமார்

  சரத் குமார் திருமணம் செய்துக் கொண்ட ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சரத் குமாருக்கும் ராதிகா இரண்டாவது மனைவி ஆவார். சரத் குமார் 1984ல் சாயா எனும்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலக்ஷ்மி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

  MOST READ: ஐந்து நாள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிட்டால் என்ன ஆகும்னு தெரியுமா?

  விவாகரத்து

  விவாகரத்து

  பிறகு ரகசிய போலீஸ், அரவிந்தன், ஜானகிராமன் போன்ற படங்களில் சரத் இணைந்து நடித்த நக்மாவுடன் இவர் உறவில் இருப்பதாக கூறி சாயா விவாகரத்து தொடர்ந்தார். இதன் பிறகு நக்மா - சரத் இடையிலான உறவு பிரிந்ததாக கூறப்படுகிறது. பின், 2000ம் ஆண்டு சாயா - சரத் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

  பின்னர் சரத் பிப்ரவரி 4, 2001ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ராகுல் என்ற ஆண் குழந்தை 2004ல் பிறந்தார்.

  பிரசாந்த்

  பிரசாந்த்

  தனது அடைமொழிக்கு ஏற்ப ஒரு காலத்தில் டாப் ஸ்டாராக இருந்தா நடிகர் பிரசாந்த். விஜய், அஜித்தை காட்டிலும் உயர்ந்த நடிகராக திகழ்ந்து வந்தார். ஆனால், ஒரே சமயத்தில் இவரது தொழில் மற்றும் இல்லறம் பல சிக்கல்களை சந்தித்து இவரை பெரும் சரிவு காண வைத்தது. நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

  தீர்ப்பு!

  தீர்ப்பு!

  ஆனால், திருமணமான சில மாதங்களில் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை இவர்களுக்கு தெரியவந்தது. இந்த காரணத்தால் நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மறுபுறம் அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை, வன்கொடுமை என வழக்கு பதிவு செய்தார்.

  நீண்ட காலம் நீதிமன்றத்தில் நீடித்த இந்த வழக்கு ஏறத்தாழ நான்கு வருட வாதத்திற்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு சாதகமாக விவாகரத்து கொடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

  லியாண்டர் பயஸ்

  லியாண்டர் பயஸ்

  இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானவர். இவர் ரியா பிள்ளை என்பவருடன் லிவ்-இன் உறவில் இருந்தார்.

  இவர் இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி ஆவார். இவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை ஒருசில வருடங்களில் இவர்கள் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு அஜ்யானா பயஸ் என்ற மகள் உள்ளார்.

  MOST READ: தினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா?

  சஞ்சய் தத்

  சஞ்சய் தத்

  சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரைத் முதல் கணவர் மிராஜ் உர் ரெஹ்மான் ஷேக் ஆவார். மான்யதாவின் இயற்பெயர் தில்நவாஸ் ஷேக் ஆகும்.

  சஞ்சய் மான்யதாவை திருமணம் செய்த போது மிராஜ் நீதிமன்றத்தில் இந்த திருமணம் செல்லாது, எங்கள் இருவருக்குமே இன்னும் விவாகரத்து ஆகவில்லை என கூறி வழக்கு தொடர்ந்தார்.

  பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து, சஞ்சய் தத் - மான்யதாவின் திருமணம் செல்லும் என கூறி தீர்ப்பு வழங்கியது.

  மிதுன் சக்ரவர்த்தி

  மிதுன் சக்ரவர்த்தி

  பாலிவுட்டின் டிஸ்கோ டான்சர் என்ற புகழப்பட்ட மீதும் யோகீதா பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். யோகீதா கிஷோர் குமாரின் மூன்றாவது மனைவி ஆவார்.

  யோகீதா - கிஷோர் 1976ல் திருமணம் செய்துக் கொண்டு, 1978ல் விவாகரத்து பெற்றவர்கள். பிறகு, மிதுனும் - யோகீதாவும் 1979ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.

  அனுபம் கெர் - கிரோன் கெர்

  அனுபம் கெர் - கிரோன் கெர்

  கிரோன் மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் கௌதம் பெரி என்பவரை திருமணம் செய்து கொண்டு 1985ல் பிரிந்தவர். அதே வருடம் இவர் அனுபம் கெரை திருமணம் செய்துக் கொண்டார். அனுபம் கிரோனின் பாலிய நண்பர் ஆவார்.

  இருவரும் நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளனர். மேலும், அனுபம் கிரோனின் முதலாம் திருமணத்தின் போது பிறந்த சிகிந்தர் என்பவரை தனது வளர்ப்பு மகனாகவும் ஏற்றுக் கொண்டார்.

  சமீர் சோனி

  சமீர் சோனி

  சமீர் சோனி முதலில் இந்திய மாடல் ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இந்த திருமணம் ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இதன் பிறகு நடிகை நீலம் கோதாரியை திருமணம் செய்துக் கொண்டார்.

  நீலம் கோதாரி இதற்கு முன் ரிஷி எனும் யூ.கேவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான இரண்டு வருடங்கள் கழித்து சமீர் மற்றும் நீலம் ஆஹ்னா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறர்கள்.

  MOST READ: நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

   ராகுல் ராய்

  ராகுல் ராய்

  சமீர் சோனியை விவாகரத்து செய்த பிறகு ராஜலக்ஷ்மி ராகுல் ராயை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களு இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள்.

  ஆயினும், இந்த திருமணத்திலும் ராஜ்லக்ஷ்மி நிலைத்திருக்கவில்லை. 2014ல் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Indian Celebrities Who Married Divorced Women!

  Indian Celebrities Who Married Divorced Women!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more