உங்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் அசத்தல் ஆசிரியர்கள்!

ஆசிரியர் தினச் சிறப்பாக பல பிரபலங்களும் அவர்களின் ஆசிரியர்களும்.

எந்த எதிர்ப்பார்புகளுமின்றி நம்மை நல்வழிப்படுத்துபவர்களை எப்படி பாராட்டினால் தகும்? தங்களிடம் வரும் ஒவ்வொரு குழந்தையையுமே தன்னுடைய அன்பால், கண்டிப்பால், கோபத்தால் , நுணுக்கமான பயிற்சிகளால் நம்மை செதுக்கிடும் ஆசிரியர்களை நினைவு கூற வேண்டிய தினம் இன்று.

இன்று நம்மிடையே மிகவும் பிரபலமானவர்களாக இருப்பவர்கள், ஆரம்பத்தில் ஒரு ஆசிரியருக்கு மணவராக தங்களை பட்டைத் தீட்டிக் கொண்டிருப்பார்கள். இன்றைய பிரபலங்களை கூறாக்கிய சில அற்புத ஆசிரியர்களை பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு இது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராஜ்குமார் ஷர்மா :

ராஜ்குமார் ஷர்மா :

விராட் கோலியின் ஆரம்ப கால கிரிக்கெட் கோச். மூன்று வயதாக இருக்கும் போது தன்னுடைய அண்ணனுடன் சேர்ந்து கிரிக்கெட் பேட் தூக்கி விளையாடிய கோலி தனக்கு ஒன்பது வயதாகும் போது ராஜ்குமார் ஷர்மாவிடம் பயிற்சியில் சேர்ந்தார்.

மிகத்தீவிரமாக பயிற்சியில் ஈடுபடும் கோலியை பயிற்சி நேரம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக ராஜ்குமார் தான் வீட்டிற்கு அனுப்பி வைப்பாராம்.

கடந்த ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜ்குமாருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கி கௌரவித்தார்.

Image Courtesy

கே.பாலச்சந்தர் :

கே.பாலச்சந்தர் :

கே. பால்ச்சந்தர் உண்மையிலேயே ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சிகரம் என்று புகழப்படும் கே. பாலச்சந்தர் தஞ்சாவூர் அடுத்த நன்னிலம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

பட்டம் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவரின் தந்தை கனவு கண்டுகொண்டு இருக்க அரசு வேலையை விட சிறந்தது ஆசிரியர் பணி என்று சொல்லி முத்துப் பேட்டையில் சில காலம் ஆசிரியராக இருந்தார். அப்போது பகுதி நேரமாக நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்தார்.

பின்நாட்களில் முத்திரை பதித்த பல படங்களை சினிமாவிற்கு அளித்ததோடு இன்றைய பல திரைப்பிரபலங்களையும் அன்றைக்கு அறிமுகப்படுத்தினார்.

இவர் அறிமுகப்படுத்திய திரைப்பிரபலங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

Image Courtesy

சவேரியம்மாள் :

சவேரியம்மாள் :

இவரை விட இவரது மகனின் பெயரைச் சொன்னால் உங்களுக்கு சட்டென நினைவுக்கு வந்திடும். சகாயம் ஐ.ஏ.எஸ்., மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது தன்னுடைய நேர்மையான அணுகுமுறையால் பலரது கவனத்தை ஈர்த்தவர்.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற இவரது கொள்கையால் இளைஞர்களிடையே பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய தாய் தான் முதல் ஆசிரியாரக இருப்பார். இப்படி சகாயம் அவர்களின் தாயாகவும் முதல் ஆசானாகவும் விளங்கியவர் சவேரியம்மாள்.

சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது தோட்டத்தில் சிதறிக்கிடந்த பழங்களை சிறுவர்கள் எடுத்துக் கொண்டு ஓடினர். அவர்களோடு விளையாடிய சகாயமும் எடுத்துக் கொண்டு ஓடினார்.

வாழ்க்கைப் பாடம் :

வாழ்க்கைப் பாடம் :

அதைப் பார்த்த, அவரது தாய் மற்றவர்களின் பொருள் கீழே கிடந்தால் அது நமக்கானது அல்ல இப்படி பிறரின் பொருட்களை எடுத்து வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

சகாயமோ, தான் எடுத்ததை யாரும் பார்க்கவில்லை என்னைப் போலவே நிறைய சிறுவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்று விவாதம் செய்தார்.

இப்போது சவேரியம்மாள் சொன்ன பதில் தான் சகாயம் மனதில் ஆளப்பதிந்தது. தன் முடிவுகளை அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ள வைத்திடும் வாக்கியமாகவும் அது அமைந்துவிட்டது.

எல்லாரும் செய்வதால் ஒரு தப்பு சரியாகிவிடாது என்றார் சவேரியம்மாள்.

தயானந்த சரஸ்வதி :

தயானந்த சரஸ்வதி :

1930ம் ஆண்டு தமிழகத்தின் மஞ்சக்குடியில் பிறந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. சிறுவயது முதலே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுப்பாட்டுடன் இருந்தார். சுவாமி சின்மயானந்தாவின் கோட்பாடுகளால் ஈர்கப்பட்ட இவர் அவருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார்.

1962 ஆம் ஆண்டு சன்னியாசம் பெற்று வேதங்களை கற்றுக் கொடுக்க சாந்திபனி சதானலயா என்ற அமைப்பை நிறுவினார். நாட்டில் உள்ள அனைத்து துறவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஆச்சர்யா சபாவை நிறுவினார்.

இவர் பிரதமர் மோடியின் ஆன்மீக குரு ஆவார்.

Image Courtesy

தன் ராஜ் :

தன் ராஜ் :

எக்கச்சக்கமானோரின் மன வலியை தீர்க்கும் மருந்தாக இருப்பது பாடல்கள். இன்றைக்கு பலரது விருப்பத்துறையாக இருப்பதும் இசைத்துறை தான். யாருடைய இசை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் ஏ.ஆர்.ரகுமான் என்றோ அல்லது இளையராஜா என்றோ தான் இருக்கும்.

இவர்களின் ஆசிரியர். இசைக்கே இசையை கற்றுக் கொடுத்தவர் இந்த தன் ராஜ் மாஸ்டர். திரை இசைக்கான அடிப்படை பயிற்சி , வெஸ்டர்ன் கிளாசிகல் இரண்டையும் தன்ராஜ் மாஸ்டரிடம் கற்றுக் கொண்டார்கள்.

இளையராஜா,ஏ.ஆர். ரகுமானைத் தவிர்த்து கங்கை அமரன், தேவா, வித்யாசாகர் என இவரின் சீடர்கள் பட்டியல் நீலம். பல இசை அரசர்களை உருவாக்கிய தன்ராஜ் ஒரு படத்திற்கு கூட இசை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

மெகபூப் அலி :

மெகபூப் அலி :

அம்மாவும் அப்பாவும் தேசிய அளவிலான கைப்பந்து வீரர்கள். அப்பாவுக்கு அர்ஜுனா விருது என்று ஸ்போர்ட்ஸ் குடும்பத்தில் பிறந்தவர் பி.வி. சிந்து.

2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிவாவில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். என்னதான் விளையாட்டு வீரர்களான பெற்றோராக இருந்தாலும் பி.வி. சிந்துவின் முதல் குரு மெகபூப் அலி.

சிந்துவைத்தவிர செய்னா நேவால், ஜ்வாலா கட்டா, ஸ்ருதி குரியன் என ஏராளமான சாதனையாளர்களுக்கு பின்னால் நிற்கிறார் மெகபூப் அலி.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion