For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரியவகை கோளாறால் வாயில் 232 பற்கள் கொண்டிருந்த சிறுவன்!

பல மருத்துவர்கள் இவனது தாடை வலிக்கு என்ன காரணம் என அறியாமல் திருப்பி அனுப்பு, கடைசியில் ஒருவன் என்ன பிரச்சனை என கண்டறிந்தார்...

|

மருத்துவத்தில் அதிநவீன யுக்திகள் கையாண்டு வருகிறோம் என ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும். மறுபுறம் இன்னும் எண்ணற்ற உடல்நல ஆரோக்கிய கோளாறுகள் பற்றி துளியும் அறியாத நிலையும் இருக்கிறது.

இன்னும் எண்ணற்ற கோளாறுகளுக்கு என்ன மருத்துவம் செய்வது என்றே அறியாமல், ஆய்வுகள் மட்டுமே மேற்கொண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவற்றுள் ஒன்றாக பாதிக்கப்பட்ட சிறுவன் தான் ஆஷிக். ஏதோ பல் வலி, தாடை வலி என இருந்த சிறுவனுக்கு அப்போது தெரியாது அவன் வாயில் 232 பற்கள் இருக்கின்றன என.

பல மருத்துவர்கள் இவனது தாடை வலிக்கு என்ன காரணம் என அறியாமல் திருப்பி அனுப்ப, கடைசியில் ஒருவர் என்ன பிரச்சனை என கண்டறிந்தார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறியா நிலை!

அறியா நிலை!

ஆஷிக் எனும் இந்த சிறுவன் 18 மாதங்களாக தீராத தாடை வலி கொண்டிருந்தார். தனது கிராமத்தில் இருந்து நகரம் பயணித்து பல மருத்துவர்களை கண்டார். ஆனால், யாராலும் இந்த சிறுவனுக்கு என்ன பிரச்சனை என கண்டறிய முடியவில்லை. உண்மையில், இந்த சிறுவனுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனை வேறு.

ஓடோன்டோமஸ்!

ஓடோன்டோமஸ்!

ஓடோன்டோமஸ் (Odontomas) என்ற பிரச்சனையால் தான் இந்த சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான். இது ஏனோதானோவென்று பற்கள் போன்ற கட்டிகள் வளரும் பாதிப்பு. இது மஞ்சள் நிற திசு மேற்பரப்புடன் காணப்படுகிறது. இதனால், இது பற்கள் போன்ற தோற்றமளிக்கும்.

அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை!

கடைசியாக சிறுவன் ஆஷிக்கின் பிரச்சனை அறிந்த மருத்துவர் ஒருவர், "இதை கண்டறியவே மிகவும் சிரமப்பட்டோம், பிறகு ஒவ்வொன்றாய் பிடுங்க, பிடுங்க வந்துக் கொண்டே இருந்தது. ஏதோ முத்து பற்கள் போல இருந்தன. கடைசியாக எண்ணிய போது மொத்தம் 232 பற்கள் ஆஷிக்கின் வாயில் இருந்து எடுக்கப்பட்டதை அறிந்தோம்." என கூறியிருக்கிறார்.

லக்கி பாய்!

லக்கி பாய்!

ஏதோ நல்ல வேலையாக சிறுவன் ஆஷிக்கின் வாயில் இருந்து இந்த பற்கள் போன்ற கட்டிகள் மொத்தமும் அகற்றப்பட்டுவிட்டன. ஒருவேளை அவை வளர துவங்கி இருந்தால் சிறுவனின் நிலை மிகவும் மோசம் ஆகியிருக்கும். மேலும் இதில் இருக்கும் இன்னுமொரு நன்மை, இது மீண்டும் மீண்டும் தொல்லைக் கொடுக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

UNBELIEVABLE!! Teen Who Had 232 Extra Teeth In His Mouth

He was suffering from a condition known as complex odontoma, where tooth-like growths were haphazardly arranged!
Desktop Bottom Promotion