For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா நல்ல நாடுதாங்க... இந்த 3 விஷயத்த விட்டு தள்ளி இருந்தாலே போதும் - ஹீரோ அட்வைஸ்!

ஃபேஸ்புக்னாலதா எல்லாம் பிரச்சனையும், அதைவிட்டு தள்ளி இருங்க - பிரபல நடிகர் பளீர் பேச்சு!

|

நடிகர் ரன்தீப் ஹூடா. பாலிவுட்டின் விக்ரம் என கூறலாம். நடிப்புக்காக உடலை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக் கொள்வார். இவர் சமீபத்தில் நம்மை சுற்றி நடந்துக் கொண்டிருப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும் பல பரபரப்பான செய்திகள் மிகைப்படுத்தி காண்பிக்கப்படுபவை.

இந்தியா உண்மையில் உலகிலேயே மக்கள் வாழ ஒரு சிறந்த நாடு என்பதை எடுத்துக் காட்டும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அப்பதிவில் செய்தி சேனல், விவாதங்கள், சமூக தளங்களை விட்டு ஒதுங்கி இருந்தாலே உண்மை நிலை நாம் அறிந்துக் கொள்ளலாம் என கூறியிருந்தார்.

அந்த பதிவு ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் லைக் செய்திருந்தனர், 28 ஆயிரம் பேர் பகிர்ந்திருந்தனர். மூன்றாயிரம் பேர் தங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்திருந்தனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முஸ்லிம்...

முஸ்லிம்...

நீங்கள் முஸ்லீமாக இருந்தால்... ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த நாட்டில் திடீரென பாதுகாப்பற்றது போல் உணர்கிறீர்களா...

தலித்...

தலித்...

நீங்கள் தலித்தாக இருந்தால்... உங்கள் வாழ்வில் ஒவ்வொரு பொழுதிலும் அவமானப்படுத்தப் படுவதாக எண்ணுகிறீர்களா?

இந்து...

இந்து...

நீங்கள் இந்துவாக இருந்தால்... பசுக்கள் திடீரென நாடு முழுவதும் படுகொலை செய்யப்படுவதாக கருதுகிறீர்களா?

ஜெயின்...

ஜெயின்...

நீங்கள் ஜெயினாக இருந்தால்... உங்கள் ஆன்மீக சமய பற்று சமரசம் செய்துக் கொள்ளப்படுவதாக நினைக்கிறீர்களா?

பஞ்சாபி...

பஞ்சாபி...

நீங்கள் ஒரு பஞ்சாபியாக இருந்தால்... அனைவரும் போதைக்கு அடிமைப்பட்டு இருப்பதாக நினைத்து வருத்தப்படுகிறீர்களா...

சமூக வலைத்தளங்கள்!

இவற்றுக்கு எல்லாம் சமூக வலைதளங்கள் தான் காரணம். நியூஸ் சேனல்கள் பார்க்காதீர்கள். விவாதங்களை விட்டு ஒதுங்கி இருங்கள். பிரச்சனைகலின் அளவு என்ன? உங்களை சுற்றி இருக்கும் உண்மை நிலவரம் என்ன என்பதை நீங்கள் முழுமையாக அறிய முடியும்.

உங்களை சுற்றி...

உங்களை சுற்றி...

உங்களை சுற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல ஜாதி, சமயங்களை சேர்ந்த உற்றார், அக்கம் பக்கத்தினரை பார்த்தாலே போதுமானது. அதன் பிறகு நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது உலகிலேயே ஒரு சிறந்த நாடு என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Randeep Hooda Advices People to 'Stay Away From Total Media' In his Facebook Post!

Randeep Hooda Advices People to 'Stay Away From Total Media' In his Facebook Post!
Desktop Bottom Promotion