For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலை கனம், ஆட்டிட்டியூட்....ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

"தல" கனத்தோட ஆடக் கூடாது நாசூக்காக மெர்சலில் பேசிய விஜய்!

|

கொஞ்சம், கொஞ்சமாக நடிகர் ரஜினியை போலவே, தான் பங்கேற்கும் நிகழ்வுகளில் குட்டி நீதி கதைகள் சொல்லி மக்களை ஈர்க்கிறார் நடிகர் விஜய்.

பேச்சில் முதிர்ச்சியும், அறிவுரைகளும் நிறைந்தே காணப்படுகின்றன. அவ்வகையில் நேற்று நடந்த மெர்சல் இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் பல கருத்துக்கள் கூறி இருந்தார்.

அதில், ஜெனரலாக ஜெனரல் ஆடியன்சிற்கு விஜய் கூறிய சில நல்ல கருத்துக்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறுதி, அணுகுமுறை!

உறுதி, அணுகுமுறை!

ஒரு மனிதனிடம் எதுவுமே இல்லாத போது இருக்கும் உறுதியும், எல்லாமே இருக்கும் போது அவனிடம் வெளிப்படும் அணுகுமுறையும் தான் அவன் எப்படிப்பட்டவன் என தீர்மானிக்கிறது என ஆங்கிலத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார் விஜய்.

விடா முயற்சி, மன உறுதி இருந்தால், குடிசையில் இருந்து கோபுரம் ஏறிவிடலாம். ஆனால், கோடிகள் இருந்தும் மன உறுதி இல்லை எனில், கோபுரமே கூட இடிந்து விழுந்து மண் மேடாகிவிடும்.

ஒரு மனிதனின் வெற்றி, பணத்திலோ, செல்வாக்கிலோ, அவனை சுற்றி இருக்கும் சக்தி வாய்ந்த மக்களை சார்ந்தோ இல்லை. மன உறுதியில் தான் இருக்கிறது.

பழகுதல்!

பழகுதல்!

பணம், புகழ், ஆதிக்கம் நம்மிடம் அதிகரிக்க, அதிகரிக்க நாம் பணிவாக நடந்துக் கொள்ள வேண்டும். அது சிவனாக இருந்தாலும் சரி, சிவனடியாரராக இருந்தாலும் சரி. தலைகனத்துடன் திரிந்தால், நிச்சயம், ஒருநாள் கனம் தாங்காமல் தலை குனிந்து நடக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இதுவே கனத்தை இறக்கிவைத்துவிட்டு நடந்தால், தலையை மட்டுமல்ல, நெஞ்சையும் நிமிர்த்தி நடக்கலாம்.

ஒருவரது அணுகுமுறை தான் அவரது அடையாளமாக மாறும். ஆட்டிட்டியூட் இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அந்த ஆட்டிட்டியூட் மற்றவரை ஈர்க்கும் படி, பின்பற்றும் படி அமைத்துக் கொண்டால் இறந்த பிறகும் கூட மற்றவர் மனதில் வாழலாம்.

எதிர்மறை எண்ணங்கள்!

எதிர்மறை எண்ணங்கள்!

திணை விதைத்தவன், திணை அறுப்பான், வினை விதைத்தவன், வினை அறுப்பான் என்பார்கள். இன்னும் சொல்லப் போனால் நமது மனதின் எண்ணங்களானது நியூட்டனின் மூன்றாம் விதியை போன்றது.

நீங்கள் எந்த ஒரு எண்ணத்தை அதிகமாக உங்களை சார்ந்து அல்லது மற்றவரை சார்ந்து எண்ணுகிறீர்களோ, அது ஆழ்மனதில் அதிகமாக பதியும்.

அந்த பதிவானது, உங்கள் வாழ்விலேயே வரும் நாட்களில் பிரதிபலிக்கும். எனவே, நீங்கள் மற்றவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், எதிர்காலத்தில் நீங்களும் தன்னைப்போல நன்றாக இருப்பீர்கள்.

மேலும், ஒருவர் நீங்கள் வீழ வேண்டும் என்று நினைத்தால் கூட, அதற்கு பதில் அளிக்காமல், அவர்களை ஒதுக்கி, ஒதுங்கி சென்றுவிடுங்கள்.

சுவாரஸ்யங்கள்!

சுவாரஸ்யங்கள்!

விஜய் கூறியது போலவே, எல்லாருக்கும் நம்மை பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும். உதாரணத்திற்கு, நீங்கள் இனிப்பு சாப்பிட்ட பிறகு பால் அல்லது ஜூஸ் குடித்தால் அதன் சுவை அறிய முடியாது. காரம் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட்டால் அதன் சுவை அதிகமாக தெரியும்.

அப்படி தான் வெற்றி, தோல்வி, புகழ்ச்சி, இகழ்ச்சி போன்றவை. தோல்வி சந்தித்தால் தான் வெற்றியின் முழு சுவை உணர முடியும்.

எனவே, ஒரு உங்களை வெறுக்கிறார் என கவலைப்பட வேண்டாம். ஒருவர் நம்மை வெறுக்கும் போது தான், நம்மை சுற்றி உண்மையாக எத்தனை பேர் விரும்புகிறார்கள் என அறிந்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Wonderful Inspiration Message From Actor Vijay!

A Wonderful Inspiration Message From Actor Vijay!
Desktop Bottom Promotion