மாதவிடாய் காரணத்தால் உடலுறவுக்கு மறுத்த புதுமனைவி கழுத்து எலும்பை உடைத்த கொடூரன்!

Posted By:
Subscribe to Boldsky

கராச்சியில் இருக்கும் அப்பாஸி ஷாகீத் மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் மாணவர் பகிர்ந்த உண்மை சம்பவம் இது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ரேடியோலாஜி துறையில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார் இந்த மருத்துவ மாணவர்.

A Newlywed Bride On Period Said No To Her Husband For Sex

கையில் மருதாணி மறையாத நிலையில், திருமணத்திற்கு செய்த மேக்கப் கலையாத நிலையில் முகத்தில் காயங்களோடும், கை, கால்களில் சிராய்ப்புகளோடும் அவரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கண்களில் கண்ணீர் ததும்பிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் அருகில் ஒரு ஆண் நின்றுக் கொண்டிருந்தார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்த ஆணிடம் அந்த மருத்துவ மாணவர் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, அந்த ஆணிடம் இருந்து ஒன்றும் நடக்கவில்லை, கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. உடன் இருந்தவர் அந்த பெண்ணின் சகோதரர் என்ற தகவலும் கிடைத்தது.

"என்ன நடந்தது என்ற உண்மையை கூறும் மனநிலையில் அந்த பெண்ணின் சகோதரர் இல்லை என்பது மட்டும் உணர முடிந்தது..."

அந்த பெண்ணிடம் கேட்டறிந்தேன்...

அந்த பெண்ணிடம் கேட்டறிந்தேன்...

பிறகு அந்த பெண்ணிடமே கேட்டறிய துணிந்து பேச துவங்கினார் அந்த மருத்துவ மாணவர்...

"உங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்டு முடிக்கும் முன்னரே அந்த பெண்ணின் கண்களில் கண்ணீர் இன்னும் அதிகமாக வெளிவர துவங்கியது. சிறய மௌனத்திற்கு பிறகு, "என் கணவர் என்னை கற்பழித்துவிட்டார், என்னை கடுமையாக தாக்கினார்.." என்று நடந்ததை கூறினார்.

நேற்றிரவு திருமணம்...

நேற்றிரவு திருமணம்...

அந்த பெண் கூறியது...

" நேற்றிரவு தான் எனக்கு திருமணம் நடந்தது. என் கணவர் உடலுறவில் ஈடுபட அணுகினார். ஆனால், நான் உடல்நலத்துடன் இல்லை. இன்று மாதவிடாய் என கூறினேன். அதற்கு அவர், இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல என்று கூறி உடலுறவில் ஈடுபட அழைத்தார்."

தடுத்ததற்கு அடி, உதை!

தடுத்ததற்கு அடி, உதை!

"நான் அதற்கு தடுத்தேன். முடியாது என்றேன். உடனே கோபம் அடைந்த என கணவர் என்னை தாக்க துவங்கினார். அதன் பிறகு என்னை கற்பழித்தார். அதன் பிறகும் தொடர்ந்து பெல்ட் கொண்டு என்னை அடித்து துன்புறுத்தினார். நான் அழுது கெஞ்சி கேட்டும் கூட அவர் என்னை அடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் என கழுத்து எலும்பு உடைந்தது."

மருத்துவ ரிபோர்ட்!

மருத்துவ ரிபோர்ட்!

மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணின் கணவர் தாக்கியதில், அந்த பெண்ணின் கழுத்து பட்ட எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவர் குழந்தை போல அழுதுக் கொண்டிருந்தார். வலியால் துடித்தார். அவர் முகம் முழுவதும் கோபம் நிறைந்திருந்தது.

எப்.ஐ.ஆர்!

எப்.ஐ.ஆர்!

இந்த சம்பவத்தை கேட்ட மருத்துவ மாணவர் உடனே கணவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கூறினார். ஆனால், இடையே தடுத்த அந்த பெண்ணின் சகோதரர். தனது சகோதரி செய்தது தான் குற்றம் என்பது போல பேசியது அந்த மருத்துவ மாணவரை அதிர்ச்சி அடைய செய்தது.

யாருக்கும் உரிமை இல்லை!

யாருக்கும் உரிமை இல்லை!

ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுப்பட அழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.இஸ்லாம் மதமும் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட அனுமதிப்பது இல்லை என கோபமாக பதிலளித்துள்ளார்.

46.9%

46.9%

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பரஸ்பர ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளும் கற்பழிப்புக்கு 46.9% பெண்கள் ஆளாவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக குரல் எழுப்பக் கூட முடியாத நிலையில் பெண்கள் கொடுமைகள் அனுபவித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Newlywed Bride On Period Said No To Her Husband For Sex

A Newlywed Bride On Period Said No To Her Husband For Sex!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter