For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து வீறுகொண்டு எழுந்த இளம்பெண் - (ச)மூகத்தில் பொளேர்!

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் நிலை குறித்து தனது ஓவியம் மூலம் சமூகத்தின் முகத்தில் பொளேர் என அடித்த இளம் பெண்.

|

எப்போதுமே வார்த்தைகளை விட, செயல்பாடு தான் அதிகம் பேச வேண்டும் என்பார்கள். அதற்கு தான் வீரியமும் அதிகம். 19வயதே ஆன ஒரு இளம் பெண், தனது கலையின் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்மா க்ரேன்சர்!

எம்மா க்ரேன்சர்!

நெப்ராஸ்கா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கலை வகுப்பு மாணவி எம்மா க்ரேன்சர். இவர் கைகளை கொண்டு ஓவியம் வரைவதில் திறமை உடையவர்.

வுமன்ஸ் மார்ச்!

வுமன்ஸ் மார்ச்!

வாஷிங்டன் டி.சியில் பெண்கள் நடத்திய வுமன்ஸ் மார்ச்-ல் இருந்து நேராக வீடு திரும்பிய இவர் ஒரு ஆர்ட் வரைந்துள்ளார். அது தான் சமீபத்திய இன்டர்நெட் வைரல் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. அதை இவர் ட்விட்டரில் பதிவும் செய்திருந்தார்.

தீண்டல்களை வரைந்தார்!

தீண்டல்களை வரைந்தார்!

விரல்களால் ஓவியம் வரையும் திறன் கொண்ட எம்மா. அதே விரல்களின் தீண்டல்களால் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமையை உடலிலேயே வரைந்து சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலத்தை அப்பட்டமாக வெளிபடுத்தினார்.

நீதி வேண்டும்!

நீதி வேண்டும்!

இவர் வேண்டுவது எல்லாம் பெண்களுக்கான நீதி தான். இவர் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இடம்பெறம் ஒவ்வொரு ஆணின் தீண்டுதல் எவ்வாறாக இருக்கிறது என ஒரு மேப் போன்று அந்த ஆர்ட் வரைந்திருந்தார்.

யார் யார்?

யார் யார்?

அந்த ஆர்ட்-ஐ படம் எடுத்து, அதில் யார் யார் எப்படி எப்படி ஒரு பெண்ணை பார்க்கின்றனர். எந்தெந்த உறவு, எப்படி, எப்படி ஒரு பெண்ணை நெருங்குகிறது என காட்டியிருந்தார்.

எம்மா கூறுவது என்ன?

எம்மா கூறுவது என்ன?

ஒரு பெண் மீதான தீண்டுதல்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வரவே இதை நான் வரைந்தேன் என எம்மா கூறுகிறார். இது போன்ற ஒரு கருத்தை, தன் மூலமாகவே சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவருவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A 19-year-old Girl Ingenuously Exposed and Brought to Life Through Artwork

A 19-year-old Girl Ingenuously Exposed and Brought to Life Through Artwork
Story first published: Saturday, February 4, 2017, 12:39 [IST]
Desktop Bottom Promotion