தீக்கிரையான பிறகும் வாழ்வாதாரம் இழந்த ராணுவ வீரர்களுக்கு வாழ்வளிக்கும் ரியல் ஹீரோ!

Posted By:
Subscribe to Boldsky

திரையில் மக்களை காப்பாற்றுபவர்களை தான் நாம் ஹீரோவாக பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும், தனது நாட்டிற்காகவும், அந்நாட்டு மக்களுக்காகவும் தாய் மண் மீது கொண்ட பற்றினால் எதற்கும் அஞ்சாது, உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்கள் தான் ரியல் ஹீரோ.

துப்பாக்கி படத்தில் காண்பிப்பது போல, எத்தனையோ போரில் குண்டடி பட்டு உடல் ஊனமான நிலையில் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கடைசி வரை நம் கண்களுக்கு புலப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் ஏராளம்.

இதோ, விபத்தில் 40% உடலை இழந்த பிறகும், தன்னை போலவே கஷ்டப்படும் வீரர்களுக்கு வாழ்வளித்து காப்பற்றி வரும் ரியல் ஹீரோவின் கதை தான் இது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாபி!

பாபி!

பாபி எனும் இந்த ராணுவ வீரர் சாலை ஓரத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தில் தனது நான்கு தோழர்களையும், தனது உடலில் 38% பகுதியையும் இழந்தார். இரண்டு வார கோமா நிலைக்கு பிறகு மீண்டு வந்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று புது உயிர் பெற்று வந்துள்ளார் பாபி. இந்த குண்டு வெடிப்பில் பாபி அவரதுகையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

காபி குடித்தது மட்டும் தான்....

காபி குடித்தது மட்டும் தான்....

அந்த நாளில் நான் காபி குடித்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது என்கிறார் பாபி ஹென்லைன். அன்று நான் தான் முதன்மை வாகனத்தில் சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது பல நாட்கள் கழித்து செய்திகள் வாயிலாக தான் அறிந்துள்ளார் பாபி ஹென்லைன்.

தைரியம்!

தைரியம்!

மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் முடிந்த பிறகு. காயங்களை கடந்து வந்து மீண்டும் பழைய தைரியம் பெற சில காலம் எடுத்துக் கொண்டதாகவும். ராணுவத்தில் விலகி வேறு வேலையில் பணியாற்றுவது மிக கடினமானது. அதை நான் அறிவேன் என்றும் பாபி கூறுகிறார்.

பாதை மாறியது....

பாதை மாறியது....

மற்றவர்களுக்கு உதவுவது சிறந்த குணம். அதிலும், உணவளித்து உதவுவது அன்பு கலந்த ஒன்று. எனவே, இந்த வேலையை தேர்வு செய்திருக்கிறார் பாபி.

கொரியன்!

கொரியன்!

இந்த பணியில் கொரியன் போரில் ஈடுபட்டு காயமைடந்த தனது நட்பு வட்டாரத்தில் வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்து உணவகம் ஒன்றை திறந்து பணியாற்ற போவது தான் தனது திட்டம் என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wounded War Veteran Opens Restaurant to Help Other Veterans by Employing Them

Wounded War Veteran Opens Restaurant to Help Other Veterans by Employing Them,
Story first published: Tuesday, November 22, 2016, 17:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter