Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
போலீசாருக்கான 'உமங் 2015' கேளிக்கை நிகழ்ச்சிக்கு வந்த பாலிவுட் நடிகைகள்!!!
சமீபத்தில் மும்பை அந்தேரியில் போலீசாருக்கான 'உமங் 2015' என்ற கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நடிகைகள் மிகவும் அழகாக வந்து, அங்குள்ளோர் அவர்களை வாயை திறந்து பார்க்கும் படி வந்திருந்தனர். அதில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தபு, நேகா தூபியா, மாதூரி தீட்சித் போன்றோர் புடவையிலும், மற்றவர்கள் ஃபேஷனான உடையிலும் வந்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட நடிகைகள் அணிந்து வந்த சில உடைகள் மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்ததாகும். இங்கு 'உமங் 2015' நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பாலிவுட் நடிகைகள் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி கருப்பு மற்றும் கோல்டன் நிறம் கலந்த குர்தா அணிந்து வந்திருந்தார். இந்த உடையை வடிவமைத்தவர் மசபா குப்தா ஆவார்.

கிருதி சனான்
நடிகை கிருதி டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா புடவையில் க்யூட்டாக வந்திருந்தார்.

தியா மிர்சா
நடிகை தியா மிர்சா டிசைனர் ரித்து குமார் வடிவமைத்த கோல்டன் நிற புடவையில் வந்திருந்தார்.

சுஷ்மிதா சென்
நடிகை சுஷ்மிதா சென் மனீஷ் மல்ஹொத்ரா சூட்டில் அட்டகாசமாக வந்திருந்தார்.

நேகா தூபியா
நடிகை நேகா தூபியாக கருப்பு மற்றும் சில்வர் கலந்த புடவையில் வந்திருந்தார். மேலும் இந்த புடவைக்கு இவர் வித்தியாசமாக சட்டை போன்ற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் கிரே நிற ஸ்வெட்டர் மற்றும் லெதர் ஸ்கர்ட் அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா
நடிகை சோனாக்ஷி சின்ஹா டீப் நெக் கொண்ட பிங்க் நிற கவுனை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

தபு
அபு ஜனி சந்தீப் கோஷ்லா என்னும் டிசைனர் டிசைன் செய்த பலவண்ண புடவையை நடிகை தபு அணிந்து வந்திருந்தார்.

கஜோல்
நடிகை கஜோல் ஷெஹ்லா கானின் பூப்போட்ட மேக்ஸி ஸ்கர்ட் மற்றும் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா க்யூட்டாக டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் புடவையில் பாரம்பரிய தோற்றத்துடன் வந்திருந்தார்.

பிபாசா பாசு
நடிகை பிபாசா பாசு கருப்பு நிற ஜென்னி ரெய் கவுன் அணிந்து அழகாக பொம்மை போன்று வந்திருந்தார்.

பரீனித்தி சோப்ரா
நடிகை பரீனித்தி சோப்ரா நீத்தா லுல்லா டாப்ஸ் அணிந்து கருப்பு நிற டெனிம் மற்றும் ப்ரௌன் நிற பூட்ஸ் அணிந்து வந்திருந்தார்.

தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே பாயல் சிங்கால் என்னும் டிசைனர் டிசைன் செய்த அழகான கவுனில் செம அட்டகாசமாக வந்திருந்தார்.

கத்ரீனா கைஃப்
நடிகை கத்ரீனா கைஃப் அழகான பச்சை நிற சப்யசாச்சி அனார்கலியில் வந்திருந்தார்.

மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் வெள்ளை நிற பார்டர் கொண்ட அபு ஜகி சந்தீப் கோஷ்லா புடவையில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
