Latest Updates
-
1 கைப்பிடி கொடாமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
'புலி' இசை வெளியீட்டின் கிளாமரை அதிகரிக்க போட்டிப்போட்டு கலக்கலாக வந்த ஸ்ருதி மற்றும் ஹன்சிகா!
சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் படத்தின் 3 கதாநாயகிகளும் அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர். ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சும் வகையிலான உடை அணிந்து வந்திருந்தனர். அதில் குறிப்பாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி தான் போட்டிப்போடும் வகையிலான உடை அணிந்து வந்திருந்தனர்.
அதுமட்டுமின்றி, இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை ஸ்ரீதேவி அவர்களும் அழகாக புடவை அணிந்து வந்திருந்தார். மேலும் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார்.
இங்கு 'புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா போன்றோர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும், அங்கு எடுக்கப்பட்ட சில போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா டிசைன் செய்த மின்னும் லெஹெங்கா அணிந்து கவர்ச்சியாக வந்திருந்தார்.

ஸ்ருதி ஸ்டைல்
இந்த லெஹெங்காவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் அழகாக நெற்றிச்சுட்டி, நீளமான காதணிகளை அணிந்து, பொருத்தமான மேக்கப்புடன் அழகாக வந்திருந்தார்.

ஹன்சிகா
நடிகை ஹன்சிகா டிசைனர் நிவேதிதா சபூவின் ஃபியூசன் புடவை அணிந்து வந்திருந்தார். அதிலும் இவர் அடர் ப்ரௌன் நிற லெஹெங்கா புடவை அணிந்து, எம்பிராய்டரி மற்றும் ஜர்தோஷி வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

ஹன்சிகா ஸ்டைல்
ஹன்சிகா இந்த லெஹெங்கா புடவைக்கு ஏற்றவாறு பெரிய காதணி, பிரேஸ்லெட் அணிந்து, போனிடைல் போட்டு, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு வந்திருந்தார்.

நந்திதா ஸ்வேதா
நடிகை நந்திதா ஸ்வேதா லேஸ் நெக்லைன் கொண்ட நீல நிற கவுனில் வந்திருந்தார்.

நந்திதா மேக்கப்
நந்திதா இந்த உடைக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு, கொண்டை போட்டு, கை மற்றும் காதுகளுக்கு வெள்ளை நிற ஆபரணங்கள் அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரீதேவி
'புலி' படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி, மனீஷ் மல்ஹொத்ராவின் ப்ளைன் மெரூன் நிற புடவையில், பொருத்தமான மேக்கப்புடன் வந்திருந்தார்.

மனைவியுடன் விஜய்
இது தன் மனைவி சங்கீதாவின் அருகில் நடிகர் விஜய் அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
