ப்ளாக் அண்ட் ஒயிட்டில் அழகு தேவதை ஸ்ருதிஹாசன்!!!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் இந்தியில் 'தேவர்' என்னும் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் சிறப்புத் திரைக்காட்சியின் போது, அப்படத்தில் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன் வந்திருந்தார். அதிலும் அழகான கருப்பு மற்றும் வெள்ளை கலந்த மோனோகுரோம் உடையில் வந்திருந்தார். பொதுவாக ஸ்ருதிஹாசன் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அங்குள்ளோரின் கண்கள் அவர் மீது இருக்குமாறு அழகான உடையில் வருவார்.

Shruti Haasan's Incredible Monochrome Style

அப்படித் தான் இந்த சிறப்புத் திரைக்காட்சியின் போது, ஸ்ருதிஹாசன் அட்டகாசமாக வந்திருந்தார். அதில் அவர் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நீளமான உடை அணிந்து, கருப்பு நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கேசுவலாக வந்திருந்தார்.

Shruti Haasan's Incredible Monochrome Style

மேலும் அவர் அணிந்து வந்த உடையின் கீழே பட்டையாக கோடுகள் போட்டு இருந்ததோடு, பக்கவாட்டில் முழங்கால் அளவில் இடைவெளி இருந்தது. இதனால் இந்த உடை ஸ்டைலாகவும், அவரை சற்று க்யூட்டாகவும் வெளிக்காட்டியது.

Shruti Haasan's Incredible Monochrome Style

அதிலும் ஸ்ருதிஹாசன் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டை அற்புதமாக இருந்தது. அளவாக மேக்கப் போட்டு வந்ததால், அவரது லுக் அழகாக இருந்தது. மேலும் இவர் கால்களுக்கு கருப்பு நிற பூட்ஸ் அணிந்து வந்திருந்தார்.

English summary

Shruti Haasan's Incredible Monochrome Style

Shruti Haasan looked sensational in a monochrome attire. She captivated the hearts of many at the Tevar promotions.
Story first published: Monday, January 19, 2015, 16:58 [IST]