Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பப்பரப்பன்னு முதுகை காட்டி வந்த சமந்தா!!!
சமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டின் ஏஎன்ஆர் விருது விழாவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் டிசைனர் அனிதா டாங்ரே டிசைன் செய்த நீல நிற லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் போடப்பட்டிருந்த எம்பிராய்டரியால் ஆபரணங்கள் அணியவே தேவையில்லை. அந்த அளவில் கிராண்ட் லுக்கை இந்த லெஹெங்காவில் உள்ள எம்பிராய்டரி வெளிக்காட்டியது.
மேலும் இந்த உடையின் ஹைலைட் முதுகு அப்படியே தெரியுமாறு இருப்பது தான். இதனால் இந்த உடை சற்று செக்ஸி லுக்கையும் கொடுத்தது. அதுமட்டுமின்றி சமந்தா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் அற்புதம். சரி, இப்போது ஏஎன்ஆர் விருது விழாவிற்கு சமந்தா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

லெஹெங்காவில் சமந்தா
இது தான் நடிகை சமந்தா அணிந்து வந்த அனிதா டாங்ரே டிசைனர் வடிவமைத்த நீல நிற லெஹெங்கா.

லெஹெங்காவின் பின்புறம்
சமந்தா அணிந்து வந்த லெஹெங்காவின் பின்புறமானது அப்படியே முதுகை வெளிப்படையாக காட்டும்படி இருந்தது. இதனால் அவர் சற்று செக்ஸியாக காணப்பட்டார்.

ஆபரணங்களே அவசியம் இல்லை
லெஹெங்காவின் மேலாடையில் அழகான எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பதால், அதுவே ஆபரணம் அணிந்திருப்பது போன்ற லுக்கைக் கொடுத்தது.

அழகான ஹேர் ஸ்டைல்
சமந்தா நீல நிற லெஹெங்காவிற்கு மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைல் அற்புதமாக அவரை வெளிக்காட்டியது.

சமந்தாவின் மேக்கப்
சமந்தா கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டிருப்பதுடன், உதட்டிற்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

சமந்தாவின் டாட்டூ
சமந்தா அணிந்து வந்த லெஹெங்காவில் முதுகு நன்கு வெளிப்படுவதால், அவர் கழுத்தில் ஓம் டாட்டூவை குத்தியுள்ளார். இதனால் அவரது முதுகு இன்னும் அழகாக காணப்பட்டது.

சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜுனன்
இது நடிகர் சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜுனன் உடன் சமந்தா சேர்ந்து கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications