Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
முழுமையான பெண்ணாக மாறிய ஹாலிவுட் நடிகர் - ஆச்சரியம்!!!
திரையுலகில் பல நடிகர்கள், நமது கமல்ஹாசனை போல திரைப்படங்களுக்காக பெண் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்கள். நம் நாடு மட்டுமின்றி, ஆங்கில திரைப்படங்களிலும் கூட இது போன்ற செயல்கள் நடந்திருகின்றன. அப்படிப்பட்ட ஆங்கில படமான மிஸ்ஸஸ். டவுட் ஃபயர் (Mrs.Doubtfire), என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் நம்ம ஊர் "அவ்வை சண்முகி".
அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!
ஆனால், பிரபல ஆங்கில நடிகர் ப்ரூஸ் ஜென்னர் (Bruce Jenner) நிஜமாகவே உடல் ரீதியாக பெண்ணாக மாறியிருக்கிறார். இவர் திடீரென இப்படி பெண்ணாக மாறியிருப்பது பல்வேறு தரப்பு மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இனி, முழுதாக ப்ரூஸ் ஜென்னர் பெண்ணாக மாறியதைப் பற்றிப் பார்க்கலாம்....

ப்ரூஸ் ஜென்னர்
ப்ரூஸ் ஜென்னர் ஆரம்பத்தில் ஓர் தடகள வீரராக தான் இருந்தார். கடந்த 1976ஆம் நடந்த கோடைக் கால தடகளப் போட்டிகளில் இவர் தங்கப் பதக்கம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

நடிகராக பிரவேசம்
தடகள வீரராக இருந்த ப்ரூஸ் ஜென்னர், அதே காலகட்டத்தில், பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவரது பல தொலைகாட்சி தொடர்கள் அங்கு மிக பிரபலம் ஆகும்.

குழந்தைகள்
இவர் க்றிஸ் ஜென்னர் என்பவரை திருமணம் செய்து 24 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இவரது குழந்தைகளும் தொலைகாட்சிகளில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து
திடீரென இவருக்கும் இவரது மனைவி க்றிஸ் ஜென்னருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.

ஜென்னர் பரபரப்பு அறிவிப்பு
திடீரென ஜென்னர் ஓர் நாள், தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தான் பெண்ணாக மாறி வருவதாக ஜென்னர் பரபரப்பு பேட்டி ஒன்றினை எளித்தார்.

கதாப்பாத்திரங்கள் முற்றுபெற்றன
தான் ஆண் வேடமிட்டு நடித்து வந்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடித்து முடித்துவிட்டார் ப்ரூஸ் ஜென்னர். இப்போது முழுமையாக பெண்ணாக மாறியிருக்கிறார்.

பெயர் மாற்றம்
ஆணாக இருந்த போது ப்ரூஸ் ஜென்னர் என்றிருந்த தனது பெயரை, கெயிட்லின் ஜென்னர் (Caitlyn Jenner) என தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

பிரபல நாளிதழ் அட்டைப்படத்தில்
கெயிட்லின் ஜென்னராக மாறிய ப்ரூஸ் ஜென்னரின் (பெண்ணாக மாறிய பிறகு) பிரபல ஆங்கில நாளிதழ் வானிட்டி ஃபேரின் (Vanity Fair) அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

விக்கிபீடியாவில் பெயர் மாற்றம்
இதுமட்டுமின்றி, இவரது விக்கிபீடியாபக்கத்திலும் கூட இவரது பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஆண் என்ற குறியீடுகள் மற்றும் வார்த்தைகள் மாற்றப்பட்டு இப்போது பெண்ணாக குறிப்பிடப்பட்டு வருகிறார்.

65 வயது
இவரது வயது இப்போது 65 என்பது குறிப்பிடத்தக்கது. (காசு, பணம் இருந்தா காக்கா கூட வெள்ளை ஆயிடும்'னு சொல்லுவாங்க.. ஆம்பளைங்க, பொண்ணா கூட மாறலாம் போல.., மன்னிக்கவும் கிழவன் குமரியாக...)



Click it and Unblock the Notifications
