Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாத கவர்ச்சிகரமான நடிகைகள்!!!
பொதுவாகவே இந்திய பெண்கள் உலக பெண்களோடு ஒப்பிடும் போது மிக அழகானவர்கள், திறமையானவர்கள். அதிலும் நம் நாடு நடிகைகள் பற்றி சொல்லவா வேண்டும். என்னதான் அழகாக இருந்தாலும். நம் நாட்டு திரைத்துறையில் எழுதப்படாத சட்டம், திருமணம் ஆகிவிட்டால் ஓரம் கட்டப்படுவது. அப்படி இருந்தும் சினிமாவில் சாதித்துக் கொண்டு இருக்கும் அழகிய கவர்ச்சிகரமான நடிகைகள் பலர் நமது ஊரில் இருகின்றனர்.
வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாத கவர்ச்சிகரமான நடிகைகள். இந்த கட்டுரையின் மூலம் அவர்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாற்பதை சுற்றிக் கொண்டிருக்கும் போதும் நாடி நரம்பினை பின்னி எடுக்கும் நடிகைகள்.....

ஐஸ்வர்யா ராய்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கொடிகட்டி பறந்த உலக அழகி. அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னரும் கூட அழகாக திகழ்கிறார். தற்போது தனது இரண்டாவது சுற்றை தொடங்க தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா ராய்

சுஷ்மிதா சென்
பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆனால், இவர் பல வருடங்களுக்கு முன்பே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்

ஸ்ரீ தேவி
கமல், ரஜினியிலிருந்து பாலிவுட் வரை இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் அனைவருடனும் கைக் கோர்த்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இன்றும் இளமை போங்க காட்சியளிக்கிறார்.

குஷ்பு
பொதுவாக பெலிந்த உடல் உடையவர்கள் தான் அழகு என்பதை உடைத்தெறிந்தவர், இன்றும் குஷ்புவின் புன்னகை பல ஆண்களை ஆட்டிப் படைக்கிறது

கரிஷ்மா கபூர்
நாற்பதில் நடைப்போட்டுக்கொண்டிருக்கும் கரிஷ்மா கபூரின் கரீஷ்மா இன்றளவும் குறையவில்லை.

அமலா
நாகார்ஜுனாவின் காதல் மனைவியான அமலாவின் மகன் தற்போது நாயகனாக ஆகிவிட்டார். ஆனாலும், இன்றும் அழகு குறையாமல் இளமையுடன் திகழ்கிறார் அமலா

ரம்யா கிரிஷ்ணன்
வெள்ளித்திரையில் இருந்து சின்ன திரைக்கு வந்துவிட்ட போதிலும், சிக்கென்று இருப்பது இவரது நாற்பதை மறைத்துவிடுகிறது,

மீனா
ரஜினியுடன் குழந்தையாக கைகோர்த்து, நாயகியாக நடனமாடி, அடுத்து தாயக நடிக்கும் வாய்ப்பு வந்தால் கூட மீனா குழந்தை முகம் மாறாமல் தான் காட்சியளிப்பார் போல.

கஜோல்
இந்திய இளைஞர்களின் நாடித்துடிப்பை தொண்ணூறுகளில் பல நூறு மடங்கு உயர்த்தியவர். இன்றும் அழகு ராணியாக இருக்கிறார்.

ஷோபனா
பெண் நடன சூறாவளி. நடிகை பத்மினியின் உறவுக்கார பெண். நடனத்திலும், நடிப்பிலும் மட்டுமல்லாமல் அழகிலும் கூட வயதானாலும் பத்மினியை போலவே இருக்கிறார் ஷோபனா

ஷில்பா ஷெட்டி
இவருக்கு வயது நாற்பது என்றால் நம்பவே முடியாது. இன்றும் என்றும் பதினாறு போலவே கொடியிடையுடன் துள்ளி திரிகிறார் ஷில்பா ஷெட்டி.

ப்ரீத்தி ஜிந்தா
பாலிவுட்டில் ஆடிய ஆட்டம் போதாதென இந்த அழகு பதுமை இருபோது ஐ.பி.எல்.லிலும் ஆடி வருகிறது.

தபு
நடிப்பில் தேசியவிருது வரை எட்டி பிடித்த தபு, இன்றும் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேனில் கண்டதை போலவே அழகாக இருக்கிறார். கொஞ்சம் செக்ஸியும் கூட.

ராணி முக்கர்ஜீ
இன்றுவரை இந்த ராணி சினிமாவில் ராணி வேடம் தான் கட்டி வருகிறார். "குச் குச் ஹோத்தா ஹே" மூலம் பிரபலம் அடைந்தவர் ராணி முக்கர்ஜி

சிம்ரன்
ஸ்லிம் அழகி சிம்ரன், தாயான பின்பும் கூட இடையின் எடை கூடாது பேணி வருகிறார். இடை எடை குறைந்தால் கூட அழகின் எடை குறையாது இருக்கிறார் சிம்ரன்.

நக்மா
நடிகை ஜோதிகாவின் அக்கா தான் நக்மா. அக்கா, தங்கை இருவருமே அழகில் குறைச்சல் இல்லாதவர்கள். ஏனோ இன்று வரை இந்த அழகு கன்னியாகவே இருக்கிறார் நக்மா, இவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

ஜோதிகா
சூர்யாவை காதல் கரம் பிடித்த ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கு தாயான போதும் கூட இன்னும் குழந்தை முகத்தோடு தான் இருக்கிறார். தற்போது தனது இரண்டாம் சுற்றை துவங்கி இருக்கிறார்.

வித்யா பாலன்
நடிப்பில் பாலிவுட்டை கிரங்கடித்தவரும் இவர்தான் கலந்கவைத்தவரும் இவர்தான். கவர்ச்சி, கலை இரண்டையும் சேர்ந்து செய்த சிலை வித்யா பாலன்.

பூமிகா
சில்லுனு ஒரு காதலில் அனைவரையும் சிலுர்க்க வைத்த பூமிகா. இன்னும் அழகில் பலரை சிலுர்க்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்.

ரம்பா
இந்த அழகிய லைலாவை, இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும். தொடை அழகில் மட்டும் மிஞ்சவே முடியாது.

பிபாஷா பாசு
சச்சினில் விஜயை திக்குமுக்காட வைத்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தவர், பாலிவுட்டில் ஜான் ஆபிரகாம் வரை விட்டுவைக்கவில்லை.

மஞ்சு வாரியார்
மலையாள நடிகர் திலீப்பின் அழகு மனைவி. இருபதிலேயே திருமணம் செய்துக்கொண்டாலும். இன்று வரை தனது அழகை இருபதாகவே பேணி வருகிறார் மஞ்சு

லாரா தத்தா
இந்திய இளைஞர்கள் மட்டுமல்ல இவரது அழகிற்கு அடிமையாகி இவரையே திருமணம் செய்துக்கொண்டார் இந்திய விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி

ஷாலினி அஜித்
இந்திய நடிகர்களில் காதல் கதைகளில் அழகான காதலர்கள் என இவர்களை குறிப்பிடலாம். "தல" போல எவரால் அழகாக இருக்க முடியும்.

மாதுரி தீக்ஷித்
இந்திய சாலைகளில் ஓடிய மாருதியை விட அதிகமாய் இந்திய ஆண்களின் மனதில் ஓடியிருக்கிறார் இந்த மாருதி.

மோகினி
தொண்ணூறுகளில் தென்னிந்தியாவில் ஆண்களை தன்வசம் படுத்டிவைத்திருந்த நடிகைகளில் மோகினியும் ஒருவர். அதுவும் அவரது கண்கள் தான்
இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது என கூறினால் அது மிகையாகாது.

ப்ரீதா
இந்த அழகு பதுமையிடம் ஆக்ஷன் படம் காட்டியே தாலி கட்டி மனைவி ஆக்கிக்கொண்டார் இயக்குனர் ஹரி.

சங்கீதா
சிக்குலட்டு சிக்குலட்டு சின்ன குருவி என பாடி ஆடிய இந்த சங்கீதா, இன்றும் சிக்கென அழகாக தான் இருக்கிறார்.

சித்தாரா
புது புது அர்த்தங்களில் புதியதாய் தோன்றியவர். இன்னும் அழகு பொலிவுடன் காட்சியளிக்கிறார் சித்தாரா.

சோனாலி பிந்த்ரே
காதலர் தினத்தில் குணாலுடன் அறிமுகமாகிய சோனாலி, இன்றும் காதல் கொள்ளும் அழுகுடன் சிலிர்க்க வைக்கிறார்.

ரோஜா
இன்றும் ரோஜா, ரோஜா போலவே இருக்கிறார். இதற்கு மேல் என்ன கூற!!

நதியா
இவர் தனது இரண்டாம் சுற்றில் தான் நடித்து வருகிறார் என்றால் பலரால் நம்ப முடியாது. மும்பையில் செட்டிலாகி வந்திருந்தாலும். தமிழ் முகம் மாறாத அழகி.

ரேகா
இவரை;g பற்றி கூற வேண்டும் எனில், வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல.

ஹேமா மாலினி
கோலிவுட் பிறந்தவீடாக , பாலிவுட் புகுந்த வீடாக அனைத்து ரசிகர்களின் மனத்திலும் பூந்து விளையாடிய சிறந்த நடிகை மட்டும் அல்ல அழகியும் கூட.

மனிஷா கொய்ராலா
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட், டெலிபோன் மணிபோல் இவரது அழகு இன்றும் இனிமையாகவே இருக்கிறது.



Click it and Unblock the Notifications