2015 ஐஐஎஃப்ஏ-விற்கு அழகான தோரணையில் சென்ற தென்னிந்திய நடிகைகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

மலேசியாவில் நடக்கும் 2015 ஐஐஎஃப்ஏ விருது விழாவின் பச்சை நிற கம்பளத்தில் ஒய்யார நடை போட பல தென்னிந்திய நடிகைகளும் கலந்து கொண்டனர். அதில் நடிகை அமலா பால் தனது கணவர் மற்றும் தம்பியுடன் மலேசியாவிற்கு சென்றிருந்தார். அதுமட்டுமின்றி, நடிகை காஜல், ஜெனிலியா, ஸ்ரேயா சரண் போன்றோரும் கலந்து கொண்டனர்.

2015 ஐஐஎஃப்ஏ ராக்ஸ் விழாவிற்கு க்யூட்டான உடையில் ஜோடியுடன் வந்த ஜெனிலியா!

இவர்கள் அனைவருமே அற்புதமான உடை அணிந்து பச்சை கம்பளத்தில் ஒய்யார நடை நடந்தனர். நம் ஸ்ரேயா எப்போதும் போன்று செக்ஸியான மற்றும் ஸ்டைலான புடவையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். அமலா பால் மற்றும் ஜெனிலியா இரண்டு முறை பச்சை கம்பளத்தில் நடந்தனர். காஜல் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த உடையில் வந்திருந்தார்.

சரி, இப்போது மலேசியாவில் நடைபெறும் ஐஐஎஃப்ஏ-வில் கலந்து கொண்ட தென்னிந்திய நடிகைகளின் போட்டோக்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவருடன் அமலா பால்

கணவருடன் அமலா பால்

இது மலேசியாவில் கணவருடன் வெளியே சுற்றும் போது எடுத்த செல்ஃபீ போட்டோ.

தம்பியுடன் அமலா பால்

தம்பியுடன் அமலா பால்

இது தம்பி மற்றும் கணவருடன் சேர்ந்து எடுத்த செல்ஃபீ போட்டோ.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

அமலா பால் பச்சை நிற கம்பளத்தில் நடக்கும் போது கவுரவ் குப்தா டிசைன் செய்த வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட உடையில் வந்திருந்தார்.

அமலாவின் மேக்கப் மற்றும் ஆபரணங்கள்

அமலாவின் மேக்கப் மற்றும் ஆபரணங்கள்

அமலா பால் இந்த வெள்ளை நிற உடைக்கு சற்று அதிகமான மேக்கப் போட்டு, கழுத்திற்கு எதுவும் அணியாமல் காதுகளுக்கு நீளமான தங்க காதணி அணிந்து வந்திருந்தார்.

ஜடின் வர்மா உடையில் அமலா

ஜடின் வர்மா உடையில் அமலா

இது மற்றொரு முறை பச்சை கம்பளத்தில் நடக்கும் போது ஜடின் வர்மா டிசைன் செய்த ஊதா நிற கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

அமலாவின் மேக்கப்

அமலாவின் மேக்கப்

அமலா பால் இந்த ஊதா நிற உடைக்கு பொருத்தமாக உதட்டிற்கு ஊதா நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை பளிச்சென்று வெளிக்காட்டியது. மேலும் கை விரல்களுக்கு நீல நிற நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தார்.

சந்தன நிற உடையில் ஜெனிலியா

சந்தன நிற உடையில் ஜெனிலியா

இது ஜெனிலியா அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் சந்தன நிற கவுன். இந்த கவுனில் ஜெனிலியா தேவதை போன்று காணப்பட்டார்.

கணவருடன் ஜெனிலியா

கணவருடன் ஜெனிலியா

இது ஐஐஎஃப்ஏ-வில் கணவர் ரித்தேஷ் உடன் சேர்ந்து ஜெனிலியா கொடுத்த போஸ். மேலும் ஜெனிலியா இந்த சந்தன நிற உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இது தான் காஜல் அகர்வால் அணிந்து வந்த கருப்பு மற்றும் வெள்ளை கலந்த மோனோகுரோம் கவுன். இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல், இவரை அற்புதமான தோற்றத்தில் காட்டியது.

புடவையில் ஸ்ரேயா

புடவையில் ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட மெரூன் நிற வித்தியாசமான கவுரவ் குப்தா புடவையில் வந்திருந்தார்.

ஸ்ரேயாவின் ஸ்டைல்

ஸ்ரேயாவின் ஸ்டைல்

ஸ்ரேயா கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, போனிடைல் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி, காதுகளுக்கு வெள்ளை நிற முத்து கம்மல் அணிந்து செக்ஸியான தோற்றத்தை மேற்கொண்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At IIFA 2015 Green Carpet

Here are some of the celebrities at IIFA Rocks 2015 Green Carpet. Take a look...
Subscribe Newsletter