Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டிசைனரின் திருமண நிகழ்ச்சிக்கு சிக்கென்று வந்த ஐஸ் மற்றும் தமன்னா!
சமீபத்தில் பிரபல டிசைனர் நிஷ்கா லுல்லா, திருமணத்திற்கு முன் பிரபலங்களுக்கு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு எண்ணற்ற நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அதில் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா பாட்டியா போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த பார்ட்டிக்கு இருவருமே அட்டகாசமான உடையில் சிக்கென்று வந்திருந்தனர். அதில் தமன்னா பாட்டில் பச்சை நிற ஜம்ப்சூட்டும், ஐஸ்வர்யா ராய் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த உடையிலும் வந்திருந்தனர்.
இங்கு நிஷ்கா லுல்லாவின் திருமண பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் மற்றும் தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பாட்டில் க்ரீன் நிற ஜம்ப்சூட்
இது தான் தமன்னா அணிந்து வந்த டிசைனர் சப்யசாச்சி டிசைன் செய்த பாட்டில் க்ரீன் நிற ஜம்ப்சூட். இந்த ஜம்ப்சூட்டிற்கு தமன்னா சிவப்பு நிற பெல்ட் அணிந்து வந்தது அற்புதமான தோற்றத்தை வழங்கியது.

பொருத்தமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த ஜம்ப்சூட்டிற்கு பொருத்தமாக பீச் நிற லிப் கிளாஸ், ஐ லைனர் போட்டு, அழகான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார். இது மணமகள் நிஷ்கா லுல்லாவுடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

அனுஷ்கா சர்மாவா? தமன்னாவா?
சில நாட்களுக்கு முன் துபாயில் நடந்த நிகழ்ச்சக்கு விராத் கோலியின் காதலியான நடிகை அனுஷ்கா சர்மா இதேப்போன்ற ஜம்ப்சூட்டை அணிந்து வந்திருந்தார். இதற்கு அனுஷ்கா கருப்பு நிற பெல்ட்டை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இவர்களுள் யாருக்கு இந்த உடை பொருத்தமாக உள்ளது என்று சொல்லுங்களேன்...

சிவப்பு மற்றும் கருப்பு கலந்த உடை
இது தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த சிவப்பு மற்றும் கருப்பு கலந்த உடை. என்ன தான் ஐஸ் ஓல்டு ஆனாலும், இந்த உடையில் உண்மையிலேயே சிக்கென்று உள்ளார் தானே!

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
இந்த உடைக்கு ஐஸ்வர்யா எப்போதும் போன்று உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு ஐ லைனர் போட்டு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
