Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
டாம் அண்ட் ஜெர்ரியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!!
90'களில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் என்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் கண்டுகளித்த கார்ட்டூன் படங்களாக தான் இருக்கும். இப்போதும் வருகின்ற கார்ட்டூன் படங்களுக்கும் அப்போது வெளிவந்த கார்ட்டூன் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. இப்போது தொழில்நுட்பம் உயர்ந்திருந்தாலும். அப்போது இருந்த படைப்பாற்றலோ, படைப்புத்திறனோ இப்போது இல்லை. டாம் அண்ட் ஜெர்ரியை பார்த்திராதவர்கள் அவர்களது குழந்தை பருவத்தில் மிக முக்கியாமான கேளிக்கை பகுதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். டாம் அண்ட் ஜெர்ரிக்கு குழந்தைகள் மட்டும் தான் அடிமை என்று இல்லை. அப்போதைய ஆறிலிருந்து அறுவதுவரை பெரும்பாலானோர் அடிமைகளாக இருந்தார்கள்.
மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!
கார்ட்டூன் நெட்வர்க் தொலைக்காட்சி பிரபலமடைந்ததற்கு அப்போது வெளிவந்த டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்கூபி டூ, பவர் பஃப் கேள்ஸ், பாப்பாய் போன்ற பல கார்ட்டூன் படங்கள் தான் காரணம். இதில் டாம் அண்ட் ஜெர்ரி மிக முக்கியமாக குறிப்பட வேண்டிய கார்ட்டூன் படமாகும். எலியும் பூனையுமாக சண்டை பிடிக்கிறார்கள் என நாம் நமது வீட்டு வாண்டுகளை திட்டுவது உண்டு. இது நிஜமான எலியும் பூனையும் கதை. ஒவ்வொரு முறையும் ஜெர்ரியை கொன்றுவிட போடும் திட்டங்களும் அது டாமிற்கே எதிர்வினையை திரும்பும் செயல்களும் பார்க்கும் அனைவரையும் இந்த கார்டூனிற்கு அடிமைகளாய் மாற்றியது.
சமூக வலைத் தளங்கள் கற்றுத் தரும் 5 முக்கிய வாழ்க்கைப் பாடங்கள்!!
டாம் அண்ட் ஜெர்ரியிடம் இருந்து நாம் நிறைய வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மனதளவிலும், புத்திக்கூர்மையிலும் வலுவாக இருந்தால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு ஜெர்ரி ஒரு நல்ல உதாரணம். இது போல பல பாடங்கள் நமக்கு கற்றுக்கொடுகிறது டாம் அண்ட் ஜெர்ரி...

உருவம் ஒரு பிரச்சனை இல்லை
நமது உருவம் ஒரு பிரச்சனை இல்லை. இவ்வுலகில் சாதிக்க ஆறடி உயரம் தேவை என்று எந்த கல்வெட்டிலும், புத்தகத்திலும் பொறிக்கப்படவில்லை. ஜெர்ரியை போல உருவில் சிறியதாக இருந்தாலும் நாம் எந்த வகையிலான தடைகள் வந்தாலும் தகர்க்க முடியும். ஒவ்வொரு எபிசோடிலும் இதை தான் நமக்கு கற்றுத் தருகிறது ஜெர்ரி.

தன்னம்பிக்கை
டாம் அண்ட் ஜெர்ரியை பொறுத்த வரை உருவில் பெரியதாக இருந்தாலும் டாம் கொஞ்சம் பயமுடையது. ஜெர்ரிக்கு அந்த பயம் கிடையாது. தன்னம்பிக்கை அதிகமான ஜெர்ரி, டாம் தன்னை கொல்வதற்கு என்ன திட்டமிட்டாலும் அதை வென்று விடும் அல்லது டாமிற்கே அதை திசை திருப்பிவிடும். ஏன் இதில் வரும் புல்டாகை (Bulldog) கையாள்வதில் கூட மிக நேர்த்தியாக ஜெர்ரி நடந்துக் கொள்ளும். இவையெல்லாம் நாம் ஜெர்ரியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை.

விடா முயற்சி
எத்தனை முறை தோற்றாலும் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் என்பதை நாம் டாமிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை முறைகள் தோற்றாலும், மீண்டும் மீண்டும் தானே ஒரு புதிய முயற்சியை கண்டறிந்து அதை பிரயோகிக்க தயாராகும் துணிச்சல் மிகவும் முக்கியமானது.

எதிரியை எதிர்த்து போராடும் குணம்
டாமும் ஜெர்ரியும் எதிரிகளாக இருந்தாலும், இவர்களை குறுக்கு வழியில் அழிக்க வரும் அந்த கருப்பு பூனையை பழிவாங்க இவர்கள் இருவரும் நண்பர்களாகி போராடும் குணம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் போட்டியின் காரணமாக மூன்றாவதாய் ஒரு ஆள் வந்து நமது உழைப்பை திருடுவதை தவிர்க்க வேண்டும்.

பகிர்தல் முக்கியம்
சண்டையிடும் குணம் இருந்தாலும் டாம் அண்ட் ஜெர்ரியிடம் உணவை பகிர்தல் குணமும் இருந்திருக்கிறது. நம்மிடம் உள்ளதை பகிர்ந்துக் கொள்ளும் போது நமக்குள் இருக்கும் பகைமை குறைகிறது. இதை உணர்ந்தால் உலகில் போர் வருவதற்கான காரணங்கள் இல்லாமலேயே போய்விடும்.

சண்டையும், காதலும்
சடையிட்டுக் கொள்பவர்களுக்கு மத்தியில் தான் அன்பும் இருக்கும் என கூறுவார்கள். அது போல தான் டாமும் ஜெர்ரியும் சண்டையிட்டுக் கொண்டாலும் இறுதியில் அவர்கள் மத்தியில் இருந்த அன்பின் மிகுதி மிகவும் ஆழமானது. இது போல தான் இல்வாழ்கையும்.



Click it and Unblock the Notifications
