தொலைந்து போன சரஸ்வதி நதி: புராணமா... நிஜமா...?

By Ashok CR

புனித நதிகளின் கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் இந்த உலகத்தில் உள்ள மிக புனிதமாக நதிகளாக கருதப்படுகிறது. கங்கா மற்றும் யமுனா நதிகளின் கதைகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தொலைந்து போன சரஸ்வதி நதிக்கு பின்னால் இருக்கும் கதையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதனால் தொலைந்து போன நீளமான சரஸ்வதி நதியை பற்றியும், அது எப்படி பூமியை விட்டு மறைந்து போனது என்பதை பற்றியும் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.

சுவாரஸ்யமான வேறு: அகோரிகள் யார்?

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இமயமலையில் இருந்து பலம் பொருந்திய நதிகள் கீழே வழிந்தோடிய போது, தற்போது பாலைவனமாக இருக்கும் இடங்கள் பச்சை பசுமையுடன் வளமையாக இருந்துள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். விவசாயம் மற்றும் உயிர் வாழ்வதற்கும் அளவுக்கு அதிகமான நீரை அளித்த நதிகளில் ஒன்று தான் சரஸ்வதி. ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, திடீரென இந்த சரஸ்வதி நதி வற்றி போனது. இந்த வட்டாரத்தில் பாய்ந்தோடிய பல நதிகளும் தன் இயல்பை மீறி வற்றியது. அதனால் மேற்கு ராஜஸ்தான் பகுதியே பயனற்ற பாலைவனமாக மாறியது.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

இண்டஸ் நதியை விட மிகப்பெரிய நதியாக இருந்திருக்கிறது சரஸ்வதி நதி. இந்த வட்டாரத்தில் வாழ்ந்த மக்களின் உயிர் நாடியாக விளங்கியது இந்த நதி என பண்டைய கால வேதங்கள் புகழ்ந்து பாடியுள்ளது. அலகாபாத் பிரயாக்கில் மூன்று புனிதமான நதிகள் சங்கமமாகிறது. அதில் ஒன்று தான் சரஸ்வதி நதி. ஆனால் தற்போது இருந்த தடமே தெரியாமல் இந்த பலம் பொருந்திய நதி காணாமல் போனது ஏன் என தெரியுமா? இந்தியாவில் பலருக்கும் தெரியாத மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.

சரஸ்வதி நதி பற்றியும், அதன் மறைவை பற்றியுமான விஷயங்களை பார்க்கலாமா? இந்த நதி உண்மையா அல்லது புராணமா என்பதை எடுத்துக் கொள்வது உங்களை பொருத்தது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரஸ்வதி: மறைந்திருக்கும் நதி

சரஸ்வதி: மறைந்திருக்கும் நதி

இன்னும் இந்த பூமியில் சரஸ்வதி நதி உள்ளது. ஆனால் பூமிக்கு அடியில் மறைந்திருக்கிறது என பரவலாக நம்பப்படுகிறது. இந்த தொலைந்த நதியின் தடத்தை கண்டுபிடித்த சில அறிஞர்கள், தார் பாலைவனத்தின் மணலுக்கு அடியில் வறண்ட நிலையில் உள்ளது என கூறுகின்றனர். தார் பாலைவனத்தில் 3500 வருட பழமையான தொன்மை வாய்ந்த மிகப்பெரிய பாதை ஒன்று உள்ளது. இது ஒரு வரைந்த நதியாகும். உண்மையான சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் ஓடி, அலகாபாத்தில் உள்ள பிரயாக் என்ற இடத்தில் கங்கா மற்றும் யமுனாவுடன் இணைந்கிறது என புராணங்கள் கூறுகிறது. இருப்பினும் தொல்பொருள் ஆராய்ச்சியோ செயற்கைக் கோல் படங்களோ சரஸ்வதி நதி அலகாபாத்தை நோக்கி கிழக்கு பக்கமாக சென்றதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

சரஸ்வதி: படைத்தவனிடம் இருந்து தன்னை தானே மறைத்து கொண்ட கடவுள்

சரஸ்வதி: படைத்தவனிடம் இருந்து தன்னை தானே மறைத்து கொண்ட கடவுள்

சரஸ்வதியை நதி என மட்டுமல்லாமல் கடவுளாகவும் குறிப்பிடுகிறோம். பிரம்ம தேவனின் மனதில் இருந்து உருவானவர் இவர். அவரை படைத்த பிறகு, அவர் மீது காதலில் விழுந்திருக்கிறார் பிரம்ம தேவன். ஆனால் அதற்கு விருப்பமில்லாத சரஸ்வதி தேவி தன்னை தானே மறைத்து கொண்டார். மேலும் பாதுகாப்பான இருப்பிடம் தேடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார். அதனால் தான் என்னவோ சரஸ்வதி நதி, மறைந்த நதியாக கருதப்படுகிறது. பிரம்மனிடம் இருந்து ஓடி வந்த போது, பூமியில் ஓய்வு எடுத்த அந்த நேரம் மட்டுமே இந்த நதி காணப்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

அறிவுச்சுடர்

அறிவுச்சுடர்

மனித இனம் வளர்ந்து வருகையில் அறிவின் தேவை புரியத் தொடங்கியது என மற்றொரு புராணம் கூறுகிறது. வானளாவிய அறிவை அனைத்து உயிரினங்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை முனிவர்கள் எடுத்துக் கொண்டனர். வானளாவிய அறிவை பூமிக்கு மாற்ற ஒரு வழி தேவைப்பட்டது. இந்த அறிவை தக்க வைத்துக் கொள்ள நெருப்பு மட்டுமே ஒரே வழியாக கருதப்பட்டது. காரணம் அறிவை கொண்டிருக்கும் அனைத்து குணங்களும் அதில் இருந்தது. அதனால் பூமியில் உள்ள முனிவர்களிடம் வானளாவிய அறிவுச் சுடரை எடுத்துச் செல்லுமாறு சரஸ்வதி தேவியிடம் பிரம்ம தேவன் கேட்டுக்கொண்டார். நெருப்பை கட்டுப்படுத்தும் ஒரே பொருள் தண்ணீர். அதனால் அறிவுச் சுடரை கொண்டு வந்த சரஸ்வதி தேவி நதியாக பூமியில் தடம் பதித்தார்.

சரஸ்வதியின் வெப்பமான நீர்

சரஸ்வதியின் வெப்பமான நீர்

நெருப்பை சுமந்திருந்ததால், சரஸ்வதி மெல்ல ஆவியாய் போனது. தன் கையில் இருந்த அறிவுச் சுடரை உடனடியாக முனிவர்களிடம் கொடுத்து, கொதித்து கொண்டிருந்த தன் உடலை குளிர்விக்க பனிமலைக்கு விரைந்தார். அவர் கொண்டிருந்த தண்ணீர், நெருப்பின் வெப்பத்தை வைத்திருக்க உதவியது. வெப்பத்தின் காரணமாக நதி மெல்ல ஆவியாக தொடங்கியது. வெப்பமான நீரை சரஸ்வதி கொண்டிருந்தார் என புவியியல் வல்லுநர்களும் பரிந்துரைத்துள்ளனர்.

பலம் பொருந்திய நதி எப்படி இறந்தது?

பலம் பொருந்திய நதி எப்படி இறந்தது?

நதி மறைந்ததற்கு அதன் முக்கிய துணைச்சிரை நாளம் தொலைந்ததே காரணமாக அமைந்தது. வானிலை மாற்றம், நீண்ட கால பஞ்சம், பூமியின் பிளவுகள் வழியாக நீரின் கசிந்தொழுகுதல் போன்ற காரணத்தினாலும் இந்த பலம் பொருந்திய நதி மறைந்து போனதாக நம்பப்படுகிறது. வேத காலத்தின் போது சட்லஜ் மற்றும் யமுனா நதிகள் தான் சரஸ்வதி நதியின் முக்கிய துணைச்சிரை நாளமாக விளங்கியது. 6000 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை வட்டாரத்தில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் சட்லஜ் நதியை திசை திருப்பி இண்டஸ் நதியுடன் இணைத்தது. அதே போல் யமுனா நதி கங்கை நதியுடன் இணைந்து, கங்கா-யமுனா சமதளத்தை உருவாக்கியது. அதன் முக்கிய நீர் வளங்களை அது இழந்ததால், சரஸ்வதி நதி வற்றி போனது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion