Latest Updates
-
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்!
முதன்மைக் கடவுளான விநாயகரின் எட்டு அவதாரங்கள்!!!
விநாயகரை வக்ரதுண்டா, லம்போதரா, கஜனன் என பல பெயர்களை கொண்டு அழைக்கின்றோம். இந்தியாவின் உள்ள பல இடங்களில், இவையனைத்தும் அவரை வழிபடும் பல்வேறு வடிவங்களாகும். விநாயகரின் வடிவங்கள் பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகிறது. விநாயக புராணத்தின் படி, விநாயகர் நான்கு வடிவங்களை கொண்டுள்ளார் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தை குறிக்கும். இருப்பினும் அவர் எட்டு வடிவங்களை கொண்டுள்ளார் என்றும், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட விசேஷம் உள்ளதென்றும் முட்கல புராணம் கூறுகிறது.
எட்டு வடிவிலான விநாயகருக்கு வெவ்வேறு விசேஷங்கள் உள்ளது. ஒவ்வொரு வடிவத்திலும் சரும நிறம், வாகனம் அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பொருட்கள் என அனைத்துமே வேறுபட்டிருக்கும். விநாயகரின் இந்த ஒவ்வொரு வடிவத்திற்கும் என்ன காரணம்? - அசுரர்கள் அல்லது நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதற்கு, விநாயகரின் இந்த எட்டு வடிவமும் ஒவ்வொரு குணங்களை எடுத்துரைக்கும். ஆனால் இந்த ஒவ்வொரு வடிவத்திற்கான அடிப்படை காரணம் ஒன்றாக தான் இருக்கும்.
விநாயகரின் அந்த எட்டு வடிவங்களை பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும் பார்க்கலாமா?

வக்ரதுண்டா
விநாயகரின் முதல் வடிவம் இது. வக்ரதுண்டா என்றால் வளைந்த தும்பிக்கை என்று அர்த்தமாகும். மட்சர்யசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை எடுத்தார் விநாயகர். மட்சர்யசுரா என்றால் மனிதர்களில் உள்ள பொறாமை குணத்தை குறிக்கும். அதனால் பொறாமையை எதிர்கொண்டு வெற்றியை ஈட்டியதை இந்த வடிவம் குறிக்கும். இந்த அவதாரத்திற்கு அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.

ஏகடண்டா
ஏகடண்டா என்றால் ஒற்றை தந்தம் என்று பொருளாகும். மடசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை விநாயகர் எடுத்தார். சக்தி மற்றும் இதர காரணங்களால் மனிதர்களின் மனதில் குடிபுகும் நஞ்சை குறிக்கும் மடசுரா. மனிதர்களின் மனதில் உள்ள நஞ்சை நீக்கி வெற்றி பெற ஏகடண்டா பிறந்தார். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

மகோதரா
விநாயகரின் மூன்றாவது வடிவம் பெரிய தொந்தியை குறிக்கும். எண்ணமயக்கத்தின் அரக்கனான மோஹசுராவை கொல்வதர்காகாவே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. அறியாமையை ஒழித்து எதிர்மறையான எண்ணங்களை அழித்திடவே இந்த வடிவம் எடுக்கப்பட்டது. இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

கஜானன்
கஜானன் என்றால் யானை முகத்தினை குறிக்கும். இந்த வடிவம் பேராசையின் அரக்கனை அழிக்கும். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

லம்போதரா
விநாயகரின் ஐந்தாவது வடிவம் இது. லம்போதர என்றால் பானை தொந்தியை கொண்டவர் ஆகும். லம்போதரா வடிவத்தில் இருக்கும் விநாயகர் கோபத்தின் அசுரனான க்ரோதாவை அழித்தார். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.

விகடா
விகடா என்றால் எப்போதும் இல்லாததை போன்ற வடிவமாகும். காம வெறி அரக்கனை அழிக்கவே இந்த அவதாரம். இந்த அவதாரத்தில் மயிலின் மீது அவர் அமர்ந்திருப்பார்.

விக்னராஜா
ஈகோவின் அரக்கனான மாமாவை அழிக்க விநாயகர் இந்த அவதாரத்தை எடுத்தார். விக்னராஜா என்றால் தங்களை நீக்குபவர் என்று பொருளாகும். இவர் சேஷா என்ற நாகத்தின் மீது அமர்ந்திருப்பார்.

தும்ரவர்ணா
இது தான் விநாயகரின் எட்டாவது அவதாரமாகும். தும்ரவர்ணா என்றால் 'புகை நிறம்' என்று அர்த்தமாகும். ஆணவ அரக்கனான அபிமனராசுவை அழிக்கவே அவர் இந்த அவதாரத்தை எடுத்தார். இந்த அவதாரம் எலியின் மீது அமர்ந்திருக்கும்.



Click it and Unblock the Notifications