For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

By Ashok CR
|

வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது! அதிர்ச்சியான செய்தி தானே? இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள். வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். 'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த பெயர்களை அவை பெற்றதாம்.

ஒரு சனாதன் தர்மத்தில் இருந்து தான் அனைத்து மதங்களும் உருவானது என நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். நாம் எதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பது முக்கியமல்ல; காரணம் கடைசியில் நாம் அதே கடவுளை தான் வழிபடுகிறோம். ஏற்கனவே குழப்பங்கள் நிறைந்த இந்த உலகத்தில் மதத்தின் பேரை சொல்லி மக்களை பிரிப்பது மேலும் குழப்பங்களை உண்டாக்கும்.

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

சரி மீண்டும், அந்த அதிர்ச்சியான விஷயத்திற்கு வருவோமா? வாடிகன் நகரத்திற்கும் சிவலிங்கத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் சுவாரசியமானது. உலகத்தின் இரண்டு மிகப்பெரிய மதங்களின் இந்த இரண்டு அடையாளங்களுக்கும் உள்ள அதிர வைக்கும் ஒற்றுமைகள் உங்களை அசர வைக்கும். வாடிகன் நகரத்திற்கும் சிவலங்கத்திற்கும் உள்ள அந்த வியக்கத்தக்க ஒற்றுமைகளை பார்க்கலாமா?

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிசய வைக்கும் ஒற்றுமை

அதிசய வைக்கும் ஒற்றுமை

இந்தப் படத்தை பாருங்கள். லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின் வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு தெரியும். அதன் நடைபாதை விரைக்குறியை போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின் பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று பார்க்கையில் மூன்று பட்டையும் (சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.

வாடிகன் - பேரில் என்ன உள்ளது?

வாடிகன் - பேரில் என்ன உள்ளது?

'வாடிகா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தான் வாடிகன் அதன் பெயரை பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம் என பொருளாகும். கிறிஸ்துவ மதம் தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க வைக்கிறது.

வாடிகனில் ஒரு சிவலிங்கம்

வாடிகனில் ஒரு சிவலிங்கம்

தொல்பொருள் ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில் வைத்துள்ளனர்.

P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்

P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்

கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும் இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள் தெரிவித்துள்ளார். கதோலிக் வாடிகன், காபா, ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில் சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மதம் என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய ஒரு வேத மதமாக தான் முதலில் உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார். அதனை முதலில் 'கிருஷ்ண நீதி' அல்லது 'கிருஷ்ண அறவியல்' என்று தான் முதலில் அழைத்து வந்துள்ளனர். ஆமன் என்ற வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும் வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பு

குறிப்பு

இந்த அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகளை சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டால், அது நமக்கு ஒரு முடிவை மட்டும் தான் காட்டும். மதத்தின் பெயராலோ, நம்பிக்கையின் பெயராலோ சண்டை தேவையில்லை. காரணம் அவை அனைத்தும் ஒரு கடவுளையே கடைசியில் குறிக்கிறது.

இதுப்போன்று பல சுவாரஸ்யமான தகவல்களைப் பெற தமிழ் போல்ட் ஸ்கையின் ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்பில் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Connection Between The Vatican & Shiva Linga

The striking similarities between the two symbols of the world's greatest religions is sure to make your mind blow away. Let us take a look at the shocking connection between the Vatican city and the Shiva linga.
Desktop Bottom Promotion