Latest Updates
-
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க
குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் பிரபலங்கள்!!!
குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் போது வாழும் வாழ்க்கையே வித்தியாசமானது தான். மேலும் தத்தெடுக்கும் வளர்க்கும் பெற்றோர்களுக்கு உண்மையிலேயே பெரிய மனம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், திருமணமான தம்பதிகள் தான் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பதில்லை. திருமணமாகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம்.
மேலும் குழந்தைப் பெற முடியாதவர்களுக்கு குழந்தை வேண்டுமானால், தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சிறந்த வழி. ஆனால் அனைத்து குடும்பத்தினராலும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியாது.
அந்த வகையில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, ஒருசில பிரபலங்களும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இங்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சில பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

சுஷ்மிதா சென்
மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தைப் பெற்ற சுஷ்மிதா சென், இன்று வரை திருமணமாகாமல் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இவரால் திருமணமாகாமலும் குழந்தையை வளர்க்க முடியும் என்ற எண்ணம் பலரது மனதில் தோன்றி, பலர் திருமணத்திற்கு முன்பே குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

காத்ரின்
மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்பது பொதுவானது. அதில் காத்ரின் என்ற டிவி சீரியல் நடிகையான காத்ரின், 2 பெண் குழந்தைகளை, அதுவும் வட கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த குழந்தைகளை காத்ரின் மற்றும் அவரது கணவருடன் பார்க்கும் போது உண்மையிலேயே அழகாக இருக்கும்.

ரவீனா
பாலிவுட் நடிகையான இவரும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களை நல்லபடியாக வளர்த்து, அவர்களை சிறந்த பெண்மணிகளாக உருவாக்கியுள்ளார்.

சுபாஷ்
பெண் பிரபலங்கள் மட்டுமின்றி, ஆண் பிரபலங்களுள் ஒருவரான சுபாஷ் கூட ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சலீம் கான்
கான் என்று பெயர் வைத்தவர்கள் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை அதிகம் இருக்கும். ஏனெனில் சலீம் கான் கூட, அர்பிதா கானை அவரது 2 வயதில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இன்று மூன்று கான் சகோதரர்களுக்குமே அர்பிதா கான் மிகவும் விருப்பமான தங்கையாக இருந்து வருகிறார்.

ராகுல் போஸ்
ராகுல் போஸ் ஒரு சமூக ஆர்வலர். ஏனெனில் இவர் 1, 2 அல்ல, ஆறு குழந்தைகளை, அதுவும் அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து தத்தெடுத்து வந்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் தம்பதிகள், வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications