Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இதுவரை நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்த பிரபலங்கள்!!!
ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருது விழாவானது நடைபெறும். இந்த வருடம் கோல்டன் குளோப் விருது விழாவானது 12 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படும் விருதுகளில் கோல்டன் குளோப் விருதும் ஒன்று. இந்த விருது விழாவிற்கு பல்வேறு பெரியத் திரை மற்றும் சின்னத் திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கோல்டன் குளோப் விருது விழாவானது முதலில் 1944 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த 2014 ஆம் ஆண்டு நடைபெறும் 71 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவானது ஜனவரி 12 ஆம் தேதி பெவர்லி ஹில்டனில் நடைபெற உள்ளது.
இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: 2013 ஆஸ்கர் விருதில் கலந்து கொண்ட நடிகைகள்!!!
இந்த விருது விழாவிற்கு பல நடிகைகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் உடைகளை அணிந்து வருவார்கள். இப்போது இதுவரை நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அசத்தலாக வந்த நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

அமண்டா செய்ஃபிரைட்
இது 2013 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் அமண்டா செய்ஃபிரைட் க்ரீம் வெள்ளை கலந்த வேஸ் உடையில் வந்த போது எடுத்தது.

ஏஞ்சலினா ஜோலி
பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, 2012 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவிற்கு மிகவும் செக்ஸியாக தொடையில் டீப் கட் கொண்ட சில்க் கவுன் அணிந்து வந்திருந்தார்.

பச்சை உடையில் ஏஞ்சலினா ஜோலி
இது 2011 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு மின்னும் மரகதப் பச்சை நிற கவுனில் வந்த போது எடுத்தது.

அன்னே ஹாத்வே
இது அன்னே ஹாத்வே 2011 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் மின்னும் கோல்டன் அர்மணி ப்ரிவீ கவுனில் வந்த போது எடுத்தது.

அடர் நீல உடையில் அன்னே ஹாத்வே
அன்னே ஹாத்வேயின் மிகச்சிறந்த தோற்றத்தில் ஒன்று தான் இது. அதிலும் இந்த அடர் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் உடையானது அன்னே ஹாத்வேயின் அழகை அதிகரித்து காட்டுகிறது.

பியான்ஸ்
அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸ் 2007 ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு தங்க நிற எலீ சாப் கவுனில் மிகவும் செக்ஸியாக வந்திருந்தார்.

எம்மா ஸ்டோன்
நடிகை எம்மா ஸ்டோன் 2012 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விழாவிற்கு ஒயின் நிற லான்வின் கவுனில் வந்திருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்
இது ஜெனிபர் லாரன்ஸ் 2013 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவின் போது ஸ்ட்ராப்லெஸ் டியோர் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

ஜெனிபர் லோபஸ்
2013 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விழாவிற்கு ஜெனிபர் லோபஸ் நெக்லைன் கொண்ட லேஸ் கவுன் அணிந்து, கவர்ச்சியாக வந்திருந்தார்.

ஜெசிகா ஆல்பா
கோல்டன் குளோப் விருது விழாவிற்கு இதுவரை அழகான உடை அணிந்து வந்தவர்களுள் ஒருவர் தான் ஜெசிகா ஆல்பா. இது தான் 2013 ஆம் ஆண்டு நடந்த விருது விழாவின் போது ஜெசிகா ஆல்பா அணிந்து வந்த உடை.

கேட் ஹட்சன்
ஒவ்வொரு வருடம் நடைபெறும் கோல்டன் குளோப் விருது விழாவில் கேட் ஹட்சனைக் காண காத்திருப்போம். ஏனெனில் இவர் எப்போதுமே மிகவும் அட்டகாசமாக வருவார். அந்த வகையில் கடந்த வருடம் காலர் கொண்ட கருப்பு நிற அலெக்சாண்ட்ரா கவுனில் வந்திருந்தார். இது தான் அந்த படம்.

நிக்கோல் கிட்மேன்
நிக்கோல் 2010 ஆம் ஆண்டில் கோல்டன் குளோப் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் க்ரீம் நிற சில்க் கவுன் அணிந்து வந்திருந்தார்.

டெய்லர் ஸ்விஃப்ட்
இது நடிகை டெய்லர் ஸ்விஃப்ட் 2013 ஆம் ஆண்டின் போது அணிந்து வந்த உடை.

தபு
இந்திய நடிகையான தபு கூட 2013 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் இந்தியாவின் பாரம்பரிய உடையான புடவையில் கலக்கலாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications