இந்து மதத்தில் உள்ள 8 வகையான திருமணங்கள்!!!

By Ashok CR

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப திருமண அடிப்படைகள் மாறினாலும் கூட, நம் வாழ்க்கையில் திருமணம் இன்னமும் முக்கிய பங்கை வகிக்கிறது. அனைத்து பண்பாடுகளிலும் திருமணம் ஒரு விசேஷ இடத்தை பிடித்துள்ளது. அதுவும் இந்து பண்பாட்டில், ஒருவர் வாழ்க்கையில் அரங்கேறும் மிகவும் முக்கியமான நிகழ்வாக இது விளங்குகிறது. திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகின்றனர்.

இந்து சமயத் திருநூலின் படி, ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் கல்வியை முடித்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படியானால் ஆணும் பெண்ணும் பொறுப்புகளை எடுக்க தொடங்கும் நேரத்திலேயே அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை இது குறிக்கிறது. ஒருவரை ஒருவர் மதிக்க அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒருவரை ஒருவர் பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும். திருமணத்தை வெற்றிகரமாக மாற்றிட கணவனும் மனைவியும் சேர்ந்து பாடுபட வேண்டும்.

இந்து திருமணங்களைப் பற்றி பேசுகையில், பண்டைய கால இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான திருமணங்கள் நமக்கு சுவாரஸ்யங்களை அளிக்கும். இந்து மதத்தில் எட்டு வகையான திருமணங்கள் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சரி, அந்த எட்டு வகையான திருமணங்களை பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரம்ம விவாகம்

பிரம்ம விவாகம்

எட்டு வகையான திருமணங்களில் இதுவே உச்ச உயர்வான திருமண வகையாக விளங்குகிறது. இந்த வகையான திருமணத்தில், தங்கள் மணமகனின் குடும்பம், தங்கள் மகனுக்கு தகுந்த பெண்ணை தேடுவார்கள். அதன் பின், மணமகளின் தந்தை தகுந்த மணமகனை வீட்டிற்கு அழைப்பார். தனக்கு வரப்போகும் மருமகன் நன்கு படித்து, நல்ல பழக்க வழக்கங்களுடன் இருப்பவரா என்பதை உறுதி செய்த பிறகு, தன மகளை அவருக்கு மணம் முடித்து வைப்பார்.

தெய்வ விவாகம்

தெய்வ விவாகம்

இது ஒரு தாழ்ந்த திருமண வகையாகும். மணமகளின் குடும்பம் தங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு குறிப்பிட்ட காலம் வரை காத்திருப்பார்கள். அந்த நேரத்திற்குள் அவளுக்கு தனக்குகந்த மணமகன் அமையவில்லை என்றால் தியாகமாக கருதி அவளை சமயகுருவிற்கு மணம் முடித்து வைப்பார்கள்.

அர்ஷ விவாகம்

அர்ஷ விவாகம்

இந்த வகையான திருமணத்தில், பெண்ணை முனிவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இரண்டு மாடுகளை வாங்கிக் கொண்டு பெண்ணை மணம் முடித்து விடுவார்கள். இந்த வகையான திருமணத்தில் வணிக பரிமாற்றம் இருப்பதால், இதனை ஒரு உயர்ந்த வகை திருமணமாக கருதுவதில்லை.

ப்ரஜபத்ய விவாகம்

ப்ரஜபத்ய விவாகம்

இந்த வகையான திருமணத்தில், தன் பெண்ணுக்கு தகுந்த பையனை தேடி பெண்ணின் தந்தை செல்வார். பையனை தேடி பெண்ணின் தந்தை செல்வதால், இதுவும் கூட ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட திருமண வகையாகும்.

அசூர் விவாகம்

அசூர் விவாகம்

இந்த வகையான திருமணத்தில், மணமகனிடம் இருந்து பரிசுகளையும் பணத்தையும் பெற்றுக் கொள்ளும் பெண்ணின் குடும்பம். இந்த காரணத்தினால், பல நேரங்களில் பெண்ணுக்கு தகுந்த மணமகன் அமைவதில்லை. பெண்ணின் குடும்பம் பணம் பெறுவதால், பொருத்தமில்லாத பையனை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுவாள்.

கந்தர்வ விவாகம்

கந்தர்வ விவாகம்

நாகரீக காலத்தில் இதனை காதல் திருமணம் என்று அழைக்கிறோம். ஒரு ஆணும் பெண்ணும், அவர்கள் குடும்பம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, இரகசியமாக மணம் முடிந்து கொள்வார்கள்.

ரக்ஷாஸ் விவாகம்

ரக்ஷாஸ் விவாகம்

இந்த வகையான திருமணத்தில், மணப்பெண்ணின் குடும்பத்தோடு மணமகன் சண்டையிடுவார். பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை மணம் முடித்து கையோடு அழைத்து செல்வார்.

பிஷாஷ் விவாகம்

பிஷாஷ் விவாகம்

இந்த வகையில், மணப்பெண்ணை கவனமாக மயக்கி, அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளை மணம் முடித்துக் கொள்வார். இல்லையென்றால் அவளை மயக்கியோ அல்லது ஊனமாக்கியோ அவளை மணம் முடிப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion