Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
ஃபேஷன் வீக்கின் ஐந்தாம் நாளில் ஷோஸ்டாப்பராக வந்த அதிதி ராவ்!!!
மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் நிறைய பிரபலங்கள், ஒவ்வொரு டிசைனர்களுக்காகவும் ராம்ப் வாக் நடந்தனர். இன்று இந்த ஃபேஷன் வீக்கின் ஐந்தாம் நாள். இந்நாளில் ப்ரீத்தி எஸ் கபூர் எனும் டிசைனரின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த டிசைனரின் ஆடைகளுக்கு ஷோஸ்டாப்பராக பாலிவுட் நடிகை அதிதி ராவ் வந்தார்.
அதிதி ராவ் மிகவும் அழகான வடஇந்திய மணப்பெண் தோற்றத்தில் ராம்ப் வாக் நடந்தார். அதிலும் மிகவும் அழகான சில்வர் கற்கள் பதிக்கப்பட்ட மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்காவில் க்யூட்டாக இருந்தார். அதுமட்டுமின்றி, அவரது நிறத்திற்கு பொருத்தமாக இருக்கும் சிவப்பு மற்றும் பவள நிறங்கள் கலந்த லெஹெங்காவில் வந்திருந்தார்.

இந்த ஆடையைக் கூட ப்ரீத்தி எஸ் கபூர் தான் வடிவமைத்தார். இந்த லெஹெங்கா ஆடையை அணிந்த அதிதி ராவ், இந்த ஆடைக்கு பொருத்தமாக கோல்ட் கோட்டட் காதணிகளையும், முத்து மற்றும் கோல்ட் கலந்த நெற்றிச் சுட்டியையும் அணிந்து, அசல் வடஇந்திய மணப்பெண் தோற்றத்தில் இருந்தார்.
டிசைனர் ப்ரீத்தி எஸ் கபூர் கலெக்ஷன்கள் அனைத்தும் இதேப் போன்று தான் இருக்கும். இந்த டிசைனர் இவர் வடிவமைத்த ஆடைகளை வெளிப்படுத்துவதற்கு அதிதி ராவ்வை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தது மிகச் சிறப்பான செயல் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவில் அதிதி ராவ்விற்கு, ப்ரீத்தி எஸ் கபூர் வடிவமைத்த ஆடையானது பொருத்தமாக இருந்தது.



Click it and Unblock the Notifications
