For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2013 இல் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிய பிரபலங்களின் தருணங்கள்!!!

By Babu
|

அனைவருக்குமே இவ்வுலகில் பிரபலமாவதற்கு ஆசை இருக்கும். ஆனால் அப்படி உலகில் பிரபலமாகிவிட்டால், நாம் செய்யும் சிறு விஷயங்கள் கூட காட்டுத்தீ போன்று பெரிய விஷயம் போல மக்கள் மத்தியில் பரவும். அது கூட பரவாயில்லை, ஆனால் நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய தருணம் பரவாமல் இருப்பது நல்லது என்று நினைக்கும் விஷயங்கள் பரவினால், அது இன்னும் கஷ்டமாகிவிடும்.

உங்களுக்கு இதுப்போன்று வேறு எதாவது படிக்க வேண்டுமானால்: டிசைனர் நந்திதா மஹ்தானி உடையில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்!!!

அப்படித் தான் ஒருசில பிரபலங்களுக்கு 2013 ஆம் ஆண்டு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடைபெற்றன. அவர்கள் அனைவரும் உலகில் மிகவும் பிரபலமானவர்கள். இங்கு அப்படி 2013 ஆம் ஆண்டில் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிய சில பிரபலங்களின் தருணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ்

ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லாரன்ஸ் 2013 ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற சந்தோஷத்துடன் படியில் ஏறும் போது, கால் நழுவி விழுந்துவிட்டார். இதைப் பார்த்த அங்குள்ளோர் அனைவருமே பதறிவிட்டனர். நிச்சயம் இது இவரது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணமாகத் தான் இருக்கும்.

ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபர் ஒரு உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் பிரேசிலில் ஒரு கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று பாட்டிலால் தாக்கப்பட்டார். இது இவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதால், அங்கிருந்து சென்றுவிட்டார்.

லேடி காகா

லேடி காகா

லேடி காகாவை பற்றி தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இவர் எப்போதுமே வினோதமாக ஏதாவது ஒரு விசித்திரமான உடையில் வந்து அனைவரையும் கவர்ந்து வருவார். அப்படி இருக்கையில் ஆடையில்லாமல் ஆர்ட்பாப் என்னும் ஒரு குறும்படத்தில் நடித்துவிட்டார். இதனால் இவர் தற்போது மக்கள் மத்தியில் இன்னும் வித்தியாசமான ஆளாக காணப்படுகிறார்.

கேட் மிடில்டன்

கேட் மிடில்டன்

சமீபத்தில் லண்டனில் கேட் மிடில்டன் ஒரு தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். அது என்னவென்றால், அவர் கையில் பூங்கொத்து வைத்துக் கொண்டு, குட்டை பாவாடை அணிந்து, ஹை ஹீல்ஸ் போட்டு நடந்து வந்த போது, கால்கள் லேசாக நழுவியதில், அவரது பாவாடை தூக்கிவிட்டது.

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ்

இவர் ஒரு பாடகி. இவர் தனது குழந்தைகளுடன் சாக்கர்ஸ் விளையாட அழைத்து வந்த போது, அவர் அணிந்திருந்த குட்டையான ஆடையானது தூக்கி, பின்புறம் நன்கு வெளியே தெரிந்துவிட்டது. இது ஒருமுறையல்ல இரண்டு முறை நடந்துள்ளது. இது நிச்சயம் இவருக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

டினா ஃபே

டினா ஃபே

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான 43 வயது நடிகையான டினா ஃபே, 2013 ஆம் ஆண்டு நடந்த எம்மிஸ் விருது விழாவின் போது, நினைத்து பார்க்காத அளவில் ஒன்று நடந்து விட்டது. அது என்னவென்றால், டினா ஃபே நீல நிற லோ நெக் கொண்ட உடையை அணிந்து, மேடை ஏறி விருது வாங்க செல்லும் போது, எதிர்பாராதவாறு அவரது மார்பகங்கள் உடையை மீறி வெளியே வந்துவிட்டது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சிக்கும், தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிவிட்டார்.

பியான்ஸ்

பியான்ஸ்

உண்மையிலேயே பிரபல பாப் பாடகி பியான்ஸ் வலியுடனான தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். எப்படியெனில், அவர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது, அங்குள்ள பேனிற்கு அருகில் சென்றுள்ளார். அப்போது அவரது நீளமான கூந்தலானது பேனில் மாட்டிக் கொண்டுவிட்டது. எப்படியோ, அவரை பத்திரமாக காப்பாற்றிவிட்டனர்.

ஆன் ஹாத்வே

ஆன் ஹாத்வே

மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகையான ஆன் ஹாத்வேயும் தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். அவர் விழா ஒன்றிற்கு கருப்பு நிற டீப் கட் கொண்ட உடையை அணிந்து வந்து, காரில் இருந்து இறங்கும் போது, அவரது உடையானது தூக்கி உள்ளாடையானது நன்கு வெளியே தெரிந்து விட்டது.

ஜெனிபர் கார்னர்

ஜெனிபர் கார்னர்

ஜெனிபர் லாரன்ஸ் மட்டும் தான் ஆஸ்கரில் கால் நழுவி விழுந்தார் என்று பார்த்தால், ஜெனிபர் கார்னரும் நழுவி விழ இருந்தார். அவர் ப்ரில் கொண்ட கவுன் அணிந்து வந்த போது, திடீரென்று அவரது சறுக்க, இருப்பினும் எப்படியோ பேலன்ஸ் செய்து தம்மை காப்பாற்றிக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Embarrassing Celebrity Moments Of 2013

The life of a celebrity is not simple. Even the big names of Bollywood and Hollywood goes through some embarrassing moments which can be difficult to deal with at the moment. Here are some of the most embarrassing celebrity moments of 2013.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more