Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
எலீ சாப் உடையில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்!!!
எலீ சாப் உலக அளவில் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர். இவரது ஆடைகளை பெரும்பாலும் ஹாலிவுட் பிரபலங்கள் தான் விரும்பி அணிவார்கள். அதிலும் ஹாலே பெர்ரி மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் போன்றோர் அதிகமாக இவர் வடிவமைத்த ஆடைகளைத் தான் அணிவார்கள். ஆனால் அவரது ஆடைகளை பாலிவும் பிரபலங்களும் அதிகம் தேர்ந்தெடுத்து அணிகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் சோனம் கபூர் தான் நிறைய முறை எலீ சாப் உடைகளில் வந்து தான் கலக்கினார்கள்.
அடிக்கடி எலீ சாப் வடிவமைத்த உடை என்று சொல்கிறீர்களே? அவர் வடிவமைத்த உடை என்ன அவ்வளவு சூப்பரா இருக்குமா என்ன? என்று பலர் கேட்கலாம். ஆகவே தான் இங்கு மிகவும் பிரபலமான எலீ சாப் டிசைனர் வடிவமைத்த உடையை அணிந்து வந்து கலக்கிய சில பாலிவுட் பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் இந்த கருப்பு நிற லேஸ் கவுனானது எலீ சாப் வடிவமைத்தது தான். இந்த உடையை ஐஸ்வர்யா ராய் 2013 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவின் போது அணிந்து வந்திருந்தார்.

சோனம் கபூர்
இந்த க்ரீம் நிற ஜாக்கெட் கொண்ட உடையும் எலீ சாப் உடை தான். இதனை சோனம் கபூர் கேன்ஸ் 2013 இன் போது கொடுத்த இன்டர்வியூவின் போது அணிந்திருந்தார்.

2011 இல் ஐஸ்வர்யா ராய்
2011 ஆம் ஆண்டு எலீ சாப் வெளியிட்ட வசந்த கால கலெக்ஷன்களில் ஒன்று தான், ஐஸ்வர்யா அணிந்திருக்கும் இந்த கவுன்.

கரீனா கபூர்
மஞ்சள் நிறத்தில் முழங்கால் அளவுள்ள உடையில் அழகாக காணப்படும் கரீனா கபூர் அணிந்திருக்கும் இந்த உடையும் எலீ சாப் டிசைன் செய்தது. இந்த உடையை கரீனா கபூர், ஹார்பர் பஜார் என்னும் பத்திரிக்கையின் போட்டோ சூட்டின் போது அணிந்திருந்தார்.

சோனம் கபூர்
சோனம் கபூர் அணிந்திருக்கும் முழங்கால் அளவுள்ள ஷீர் உடை, 2013 ஆம் ஆண்டு வெளிவந்த எலீ சாப்பின் வசந்த கால கலெக்ஷன்களில் ஒன்று.

சிவப்பு நிற உடையில் சோனம் கபூர்
சோனம் அணிந்திருக்கும் இந்த சிவப்பு நிற சூட் கூட எலீ சாப் வடிவமைத்ததே.

நேவி ப்ளூ கவுன்
பாலிவுட் நடிகைகளிலேயே எலீ சாப்பின் உடையை அதிகம் விரும்பும் ஒரு நடிகை என்றால் அது சோனம் கபூர் தான். ஏனெனில் இந்த நீளமான நேவி ப்ளூ கவுனும், இந்த டிசைனர் வடிவமைத்தது தான்.

வெள்ளை நிற உடையில் சோனம் கபூர்
சோனம் அணிந்திருக்கும் எலீ சாப் வடிவமைத்த இந்த வெள்ளை நிற லேஸ் கவுன் உடை உண்மையிலேயே மிகவும் அழகாக உள்ளது தானே!

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி கூட எலீ சாப் உடையை அணிந்ததும், இளமைத் தோற்றத்தில் ஜொலிக்கிறார்.

மீண்டும் சோனம் கபூர்
சோனம் கபூருக்கு எலீ சாப் வடிவமைக்கும் உடையில் சிவப்பு நிற உடை தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, எப்போதும் சிவப்பு நிற உடையையே தேர்ந்தெடுக்கிறார்.



Click it and Unblock the Notifications
