Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
40,000 பேர் மட்டுமே வாழும் ஒரு ஏர்போர்ட் கூட இல்லாத நாடு எப்படி உலகின் பணக்கார நாடாக மாறியது தெரியுமா?
நம் உலகில் மொத்தம் 195 ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் அளவிலும், மக்கள் தொகையிலும் வேறுபட்டாலும் அதற்கென தனிப்பட்ட வரலாறும், நாணயமும், கொடியும் மற்றும் அரசியலமைப்பு இருக்கும். ஒரு நாட்டின் வெற்றி பெரும்பாலும் அதன் இராணுவ வலிமை, எல்லை விரிவாக்கம் அல்லது பொருளாதார சுதந்திரத்தால் அளவிடப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற எந்த வரைமுறைகளுக்குள்ளும் வராத, அதேசமயம் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாடு பற்றி உங்களுக்கு தெரியுமா? சிறிய ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் வளர்ந்த நாடுகளுக்கான அனைத்து அளவீடுகளையும் மாற்றியுள்ளது. இந்த நாட்டில் மிகவும் குறைவான வளங்கள் இருந்த போதிலும், உலகின் மிகவும் நிலையான மற்றும் செல்வந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மைதான். இந்த நாட்டுக்கென்று தனிப்பட்ட நாணயம் இல்லை, மேலும் இந்த பணக்கார நாட்டில் ஒரு சர்வதேச விமான நிலையம் கூட இல்லை, ஆனால் இந்த நாட்டின் தனிநபர் வருமானம் உலகிலேயே மிகவும் அதிகமான ஒன்றாகும். லிச்சென்ஸ்டீனின் வெற்றியின் ரகசியம் என்பது அது எல்லாவற்றையும் உருவாக்கியது அல்ல, ஆனால் அது தன்னிடம் இருந்ததை சிறப்பாகப் பயன்படுத்தியதுதான்.
லிச்சென்ஸ்டீன் உத்தி
பெரும்பாலான நாடுகள் தங்கள் இறையாண்மையின் சின்னங்களான நாணயம், மொழி மற்றும் தேசிய விமான நிறுவனம்போன்றவற்றை கவனமாகப் பாதுகாக்கின்றன. ஆனால் லிச்சென்ஸ்டீன் தனித்துவமான பாதையை எடுத்துள்ளது. அதன் அண்டை நாடாக சுவிட்ஸர்லாந்து இருப்பதால் அது ஒரு தனித்துவமான முடிவை எடுத்துள்ளது. அதன் சொந்த நாணயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அந்த நாடு சுவிஸ் பிராங்கை ஏற்றுக்கொண்டது, இது லிச்சென்ஸ்டீனுக்கு வலுவான மற்றும் நிலையான பொருளாதார கட்டமைப்பை வழங்குகிறது.
இந்த நடவடிக்கை லிச்சென்ஸ்டீனை அதிக செலவை ஏற்படுத்தும் மத்திய வங்கியின் தேவையிலிருந்தும், நாணய மேலாண்மையின் சுமையிலிருந்தும் காப்பாற்றியது. இதேபோல், ஒரு விமான நிலையத்தை கட்டுவதற்கு பதிலாக, அது சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவின் போக்குவரத்து நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமித்துள்ளது.
லிச்சென்ஸ்டீனின் உண்மையான பலம் என்ன?
லிச்சென்ஸ்டீனை ஒரு பணக்கார ஐரோப்பிய நாடு என்று கூறும்போது பொதுவாக திரைப்படங்களில் வரும் சமூக விரோத செயல்கள்தான் நினைவிற்கு வரும். ஆனால் லிச்சென்ஸ்டீனின் உண்மையான பலம் தொழில் மற்றும் புதுமைகளில் உள்ளது. பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ-டிரில்கள் முதல் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் துல்லியமான தொழில்நுட்பத்தில் லிச்சென்ஸ்டீன் முக்கியமான இடத்தில் உள்ளது.
கட்டுமான உபகரணங்களில் உலகளாவிய தலைவராக இருக்கும் Hilti, லிச்சென்ஸ்டீனின் தொழில்துறை வலிமையின் ஒரு முக்கிய அடையாளமாகும். இங்கு பல பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதால், இங்கு மக்கள் தொகையை விட அதிகமான பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதன் விளைவாக, வேலையின்மை என்ற பிரச்சினையை இங்கு கிடையாது, மேலும் குடிமக்களின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடன் சுமை மற்றும் குற்றம் இல்லாத நாடு
லீச்சென்ஸ்டீன் பொருளாதாரரீதியாக மட்டும் வளமான நாடு இல்லை, சமூகரீதியாகவும் நிலையானதாகவும் உள்ளது. இந்த நாட்டிற்கு கடன் பிரச்சினை இல்லை, மேலும் அரசாங்கம் உபரி வருமானத்தை ஈட்டுகிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒட்டுநாட்டிலும் ஒரு சில கைதிகள் மட்டுமே உள்ளனர். இது செல்வத்தின் அடையாளம் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு மற்றும் அமைதியின் அடையாளமாகும்.



Click it and Unblock the Notifications
