Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
குரோதி தமிழ் புத்தாண்டு அன்று இந்த பொருட்களை வாங்குனா.. ஆண்டு முழுவதும் பண பிரச்சனையே வராதாம்...
Krodhi Tamil New Year 2024: குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. அனைவரும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். ஏனெனில் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கைகளையும், புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. இப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் சித்திரை கனி அல்லது கனி காணும் வழக்கம் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சித்திரை கனி என்பது வேறொன்றும் அல்ல, சித்திரை பிறப்பதற்கு முதல் நாள் இரவு ஒரு தட்டில் முக்கனிகளுடன் 7 விதமான கனிகளை வைத்து, நாணயங்கள், தங்கம், வெள்ளி, பூக்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றை வைத்து அழகாக அடுக்கி, அதற்கு எதிரே ஒரு கண்ணாடியை வைத்து விட்டு, மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த கண்ணாடியின் வழியாக இந்த தட்டை பார்ப்பதன் மூலம், அந்த புத்தாண்டு மங்களகரமானதாக இருக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் சிலர் தமிழ் புத்தாண்டு அன்று, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க வீட்டில் பூஜைகளை செய்வார்கள். மேலும் ஒரு நல்ல நாளில் ஒருசில பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படும். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு நாளில் பின்வரும் பொருட்களை வாங்கினால், லட்சுமி தேவியின் அருளால், அந்த ஆண்டு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
துளசி செடி
இந்து மதத்தில் துளசி செடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புனிதமான செடியாகும். இந்த துளசி செடியை வீட்டில் வைத்திருந்தால், லட்சுமி தேவியே நம் வீட்டில் குடியிருப்பதற்கு சமம். ஏனெனில் துளசி செடி செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வாசம் செய்யும் செடியாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட துளசி செடியை தமிழ் புத்தாண்டு நாளில் வாங்கி வீட்டில் வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, பண வரவும் அதிகரிக்கும்.
வலம்புரி சங்கு
வலம்புரி சங்கு என்பது லட்சுமி தேவியின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் இந்த சங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சங்கு வீட்டில் இருந்தால், லட்சுமி தேவி வீட்டில் குடியிருப்பதற்கு சமம். இப்படிப்பட்ட மங்களகரமான சங்கு உங்கள் வீட்டில் இல்லாவிட்டால், தமிழ் புத்தாண்டு அன்று வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இதனால் இந்த ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைத்து, பண பிரச்சனைகளும் நீங்கும்.
மயில் இறகு
தமிழ் புத்தாண்டு அன்று வீட்டிற்கு மயில் தோகையை வாங்கி வருவது மிகவும் நல்லது. மயில் இறகு பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும். இந்த மயில் இறகை நல்ல நாளில் வீட்டிற்கு வாங்கி வந்தால், வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தேங்காய்
தமிழ் புத்தாண்டு அன்று ஒரு சிறிய தேங்காயை வாங்கி வந்து, வீட்டின் பூஜை அறையில் வைப்பது நல்லது. இப்படி செய்வதன் மூலம், நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
உலோக ஆமை
உலோக ஆமை அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த அதிர்ஷ்ட ஆமையை தமிழ் புத்தாண்டு நாளில் வாங்கி வந்து வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் குறையும். அதே சமயம் இதை அலுவலகம் அல்லது கடைகளில் வைத்தால், நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.



Click it and Unblock the Notifications