Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாள் கிருஷ்ண ஜெயந்தி என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியில் விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தவர் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகுதான் க்ரிஷ்ணருக்கான பூஜையை செய்வார்கள்..
கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது?
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம். இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ம் தேதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.

விரதம் இருக்கும் முறை
கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையிலேயே வீட்டினை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். வின்னர் வீட்டிலும் பூஜை அறயிலும் மாவிலை, தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களினால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் அரிசிமாவினால் குழந்தையின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த ஆலிலை கிருஷ்ணனை நம் வீட்டிற்குள் அழைத்து வருவதாக நம்பிக்கை. இதை மக்கள் காலம் காலமாக செய்து வருகின்றனர்.. வீட்டில் கிருஷ்ணர் சிலை, அல்லது கிருஷ்ணர் படம் இருந்தால் அதனை சுத்தம் செய்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். பூஜைக்கு நெய்வேத்தியமாக கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலவகையான பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்து படைக்க வேண்டும்.
அப்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எப்போதும் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் நீங்கள் விரதம் இருக்க நினைத்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
கிருஷ்ண ஜெயந்தி 2024 விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை
கிருஷ்ண ஜெயந்தி அன்று பலர் நிர்ஜல விரதம் இருப்பார்கள்.. அதாவது உணவு மட்டுமல்லாமல் தண்ணீர் கூட குடிக்காமல் விரதத்தை இருப்பார்கள்.. சிலர் உணவுகளை சாப்பிடாமல் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் விரதத்தின் போது அரிசி இல்லாத சாப்பாடான ஜவ்வரிசி கஞ்சி, கிச்சடி, சப்பாத்தி மற்றும் பசு நெய்யில் சமைத்த சாதம் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
மேலும் அன்றைய தினம் முடிந்த அளவுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் செய்வது நல்லது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளனர்... அதிலும் குறிப்பாக உண்ணாவிரதம் இருக்கும் போது, தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்வது நம் வாழ்வின் சந்தோஷத்தை நிலைக்க செய்யுமாம்.. அத்துடன் விரதத்தின் போது பசுக்களுக்கு உணவளிப்பதும் உன்னதமானதாகக கருதப்படுகிறது. விரதம் இருப்பவர்களுக்கு உடல் சோர்வாகாமல் வைத்திருக்க பழங்கள் அல்லது உலர்பழங்களை உட்கொள்ளலாம். அது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் இவை ஆற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி 2024 விரதம் இருக்கும் போது செய்ய கூடாதவை..
கிருஷ்ண ஜெயந்தி அன்று வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்கப்பட்ட உணவுகளைதான் சாப்பிட வேண்டும்.. வெங்காயம் அல்லது பூண்டை பயன்படுத்தவோ சாப்பிடவோ கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.. பெரும்பாலான இந்து பண்டிகைகளின் போது பழங்கள் மற்றும் சைவ உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் கண்டிப்பாக விரதத்தின் போது இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது..
அதுமட்டுமில்லாமல் விரதத்தின் போது சிலர் அதிகமான டீ அல்லது காபி குடிப்பார்கள். ஆனால் இவை இரண்டையுமே இரண்டுமே தவிர்க்க வேண்டும்.. அதுபோலவே விரதத்தின் போது எண்ணெய் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். முழுக்க முழுக்க பழங்கள், பால் மற்றும் பழ ஜூஸ்களையே குடிப்பது சிறந்தது..



Click it and Unblock the Notifications