Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் செல்வம் பெருகுமாம்..!
Krishna Janmashtami 2023: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது செப்டம்பர் 06 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி திதியானது செப்டம்பர் 06 ஆம் தேதி மாலை 3.37 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 07 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு முடிவடைகிறது. கிருஷ்ண ஜெயந்தியானது இரவு நேரத்தில் கொண்டாடப்படுவது தான் நல்லது. ஏனெனில் கிருஷ்ணர் இரவு நேரத்தில் தான் பிறந்தார்.

ஆகவே கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை வேளையில் பூஜைகளை செய்வதே நல்லது. குழந்தை வரம் வேண்டுமென நினைப்பவர்கள், கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டால், கிருஷ்ணரின் அருளால் அழகான குட்டி கிருஷ்ணன் வீட்டில் பிறப்பான்.
அதோடு இந்நாளில் ஒருசில பொருட்களை வாங்கினால், கிருஷ்ணரின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் எந்த பொருட்களை வாங்குவது நல்லது என்பதைக் காண்போம்.
1. புல்லாங்குழல்
கிருஷ்ண பகவானுக்கு புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். அதனால் எப்போதும் கையில் புல்லாங்குழலை வைத்திருப்பார். அந்த புல்லாங்குழலை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்குவது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் எப்போதும் பணம் நிறைந்திருக்கும் மற்றும் திருமணமான தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும்.
2. கங்கை நீர்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டில் கங்கை நீரை வாங்கி, அதை வீடு முழுவதும் தெளிக்கலாம். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படுவதோடு, நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால், வீட்டில் செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
3. காமதேனு பசு
கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அஷ்டமி திதியில் பிறந்ததார். இந்த நாளில் காமதேனு பசுவை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது. அதுவும் வெள்ளி மற்றும் பித்தளையால் ஆன காமதேனு பசுவையை வாங்கினால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
4. லட்டு சாப்பிடும் கிருஷ்ணர் போட்டோ
பல ஆண்டுகளாக குழந்தை பிறக்காமல் தவிப்பவர்கள், கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து, லட்டு சாப்பிடும் கிருஷ்ணரின் போட்டோவை வாங்கி வீட்டில் வையுங்கள். அதுவும் அந்த போட்டோவை படுக்கை அறையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் கிருஷ்ணரின் அருளால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
5. சந்தனம்
கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்க வேண்டிய மற்றொரு மங்களகரமான பொருள் தான் சந்தனம். நல்ல வாசனை நிறைந்த சந்தனம் கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும். அந்த சந்தனத்தை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. சந்தனம் பூசுவதால் கோபம் குறையும் மற்றும் மனம் அமைதியாக இருக்கும்.
6 மயில் இறகு
பண பிரச்சனைகளை சந்திப்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் மயில் இறகுகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டின் தெற்கு திசையில் வைத்தால், அது வீட்டில் பணம் அதிகம் சேர வழிவகை செய்வதோடு, நீண்ட நாட்களாக கைக்கு வர வேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications