Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கார்த்திகை தீபத்தன்று இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணி நீரில் தீபம் ஏற்றுங்க.. எண்ணெய் அதிகமா தேவைப்படாது...
Karthigai Deepam 2024: தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடக்கூடிய பண்டிகைகளுள் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த கார்த்திகை தீபத்தன்று மக்கள் தங்கள் வீடுகளை அகல்விளக்குகளை ஏற்றி அழகாக அலங்கரிப்பார்கள். இதைப் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப பண்டிகையானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீப திருநாளானது டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த கார்த்திகை தீப நாளை முன்னிட்டு, இந்துக்கள் தங்கள் வீட்டு வாலில் தொடர்ந்து மூன்று நாட்கள் தீபம் ஏற்றுவார்கள். இந்த மூன்று நாட்களும் ஒவ்வொரு வீட்டு வாசலும் அழகாக தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்க்கவே கொள்ளை அழகாக காட்சியளிக்கும்.

பொதுவாக கார்த்திகை தீப நாளில் அகல் விளக்குகளை ஏற்றுவதால் லிட்டர் கணக்கில் எண்ணெய் காலியாகும். ஆனால் எண்ணெய் அதிகம் செலவாகாமல், தண்ணீர் கொண்டே சூப்பராக விளக்கு ஏற்றலாம் என்பது தெரியுமா? என்னது நீரில் விளக்கு ஏற்ற முடியுமா என்று கேட்கலாம்.
உண்மையிலேயே நீரில் விளக்கை ஏற்ற முடியும். அந்த ட்ரிக் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நீரில் எப்படி விளக்கை ஏற்றுவது என்பதைக் காண்போம். இது தவிர, கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றுபவர்களுக்கான சில டிப்ஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
* சிறிய கண்ணாடி டம்ளர் அல்லது சிறிய கண்ணாடி பௌல் - தேவையான அளவு
* பிளாஸ்டிக் பாட்டில் மூடி (எத்தனை விளக்கு வேண்டுமோ அத்தனை மூடியை எடுக்கவும்)
* பஞ்சு திரி
* தண்ணீர்
* மஞ்சள் தூள்
* விளக்கேற்றும் எண்ணெய்
* ரோஜாப்பூ இதழ்கள்
செய்முறை:
* முதலில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால்வாசி நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* அடுத்து ஒரு பாட்டில் மூடியை எடுத்து, அதன் நடுவே திரி நுழையும் அளவில் ஒரு சிறிய துளையிட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் திரியை எண்ணெயில் நனைத்து, பின் அதை துளையில் நுழைத்து, நீர் நிரப்பிய டம்ளரில் கவிழ்த்து மிதக்க வைக்க வேண்டும்.
* பிறகு அந்த மூடியைச் சுற்றி ரோஜாப்பூ இதழ்களைப் பரப்பிவிட்டால், விளக்கு ரெடி. இதுப்போன்று எத்தனை விளக்கு தேவையோ அத்தனை விளக்குகளை தயாரித்து கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றி மகிழுங்கள்.
அகல் விளக்கில் கார்த்திகை தீபம் ஏற்றுபவர்களுக்கான சில டிப்ஸ்...
* கார்த்திகை தீபத்தன்று புதிய அகல் விளக்கில் விளக்கேற்றுவதாக இருந்தால், அகல்விளக்குகளை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்து பின் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்யும் போது எண்ணெய் அதிகம் உறிஞ்சாது மற்றும் வழியாது.
* அகல்விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்கும் போது, கைகளில் மஞ்சள் குங்குமம் சாயம் ஒட்டாமல் இருக்க, பட்ஸ் பயன்படுத்துங்கள். இதனால் அழகாக விளக்கில் மஞ்சள் குங்குமத்தை வைக்கலாம்.
* அகல்விளக்கு வைக்கும் இடத்தில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க, விளக்கின் அடிப்பகுதியில் நெயில் பாலிஷை தடவி உலர்த்தி, பின் பயன்படுத்துங்கள். இப்படி செய்யும் போது, விளக்கின் அடியில் எண்ணெய் கசியாமல் இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications