Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
குரு சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இன்னும் 10 நாட்களில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்
Jupiter Venus Made Kendra Trikona Rajyog: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் தலைவனாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்விலும் நிச்சயம் தெரியும்.
தற்போது சுக்கிரன் மேஷ ராசியில் உள்ளார். இந்நிலையில் மே 19 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதே சமயம் ரிஷப ராசியில் தேவர்களின் குருவான குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணைந்து கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது மிகவும் நல்ல பலன்களை வழங்கும். திருமணமாகாதவர்கள் இந்த யோகத்தால் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் பல துறைகளில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
பணியிடத்தில் உங்கள் வேலை சிறப்பாக நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலையைப் பெறலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். முக்கியமாக இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது சிறப்பாக இருக்கும். இதுவரை பண பிரச்சனை, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவார்கள். இதனால் மகிழ்ச்சி பெருகும். சிலரக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களால் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்ய முடியும். முக்கியமாக உங்களின் இலக்கை எளிதில் அடைவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் வெற்றிகள் குவியும். எந்த ஒரு வேலையை செய்யத் தொடங்கினாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால், உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். மேலும் நீங்கள் புதிய யோசனைகளை வழங்கலாம். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications