Latest Updates
-
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Jupiter Venus Conjunction In Taurus 2024: ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டின் மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் இருந்து பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. ஏனெனில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே மாதத்தின் தொடக்கத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார்.
ரிஷப ராசியானது சுக்கிரனின் ராசியாகும். சுக்கிரனும், குருவும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த குரு பெயர்ச்சியானது நற்பலன்களை அளிக்கும். இதுவும் இந்த மே மாதத்தில் ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனும் இந்த ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், எதிர்பாராத அளவில் லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் ரிஷப ராசியில் நிகழும் குரு சுக்கிர சேர்க்கையால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திட்டமிட்ட வேலைகளும் பிரச்சனைகளின்றி முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாடு சென்று படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications