Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
குரு-ராகு சேர்க்கை முடிவு: அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Jupiter Rahu Conjunction End On October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே தெரியும்.
அந்த வகையில் தேவகுருவான குரு பகவான் தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் அந்த ராசியில் தான் நிழல் கிரகமான ராகுவும் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் ராகு மற்றும் குருவின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மேஷ ராசியில் இருந்து குருபகவானின் ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறார். இதனால் ராகு-குரு சேர்க்கை அக்டோபர் 30 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
ஆகவே இதுவரை குரு ராகு சேர்க்கையால் தொழிலில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், அக்டோபர் 30 முதல் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். சொல்லப்போனால், அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 30 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக திடீர் பண ஆதாயம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 முதல் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், அக்டோபர் முதல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். தங்க வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இதுவரை தங்கள் வாழ்க்கையில் தடைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்திருந்தால், அக்டோபர் 30 முதல் அப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கை சூப்பராக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications