Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
The Man With 1000 Kids: விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ள இவர் அதனை மறுப்பது ஏன் தெரியுமா
The Man with 1000 Kids என்ற ஆவணப்படம் நான்கு தம்பதிகள் மற்றும் ஒரு சிங்கிள் பெண்ணின் கதையைச் சொல்கிறது, அவர்கள் விந்து தானம் செய்பவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்டார் என்பதை படிப்படியாகக் கண்டுபிடித்துள்ளார்கள். Jonathan Jacob Meijer என்ற டச்சு இசைக்கலைஞர், தன்னை விந்தணுக் கொடையாளராக பயன்படுத்தியவர்களிடம், ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே உதவி செய்ததாக நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம் கூறுகிறது.

ஆனால் நெதர்லாந்தில் உள்ள பெற்றோர்கள் விந்தணு தானம் செய்பவர்களின் உதவியுடன் கருவுற்ற தங்கள் குழந்தைகள் மிகவும் வினோதமாக ஒரே மாதிரியாக இருப்பதைக் கவனிக்கும்போது, அது உண்மையல்ல என்பது தெளிவாகிறது. அவர் உலகம் முழுவதும் விந்தணு தானம் செய்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. ஒரே விந்தணுவைப் பயன்படுத்தி வெவ்வேறு குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது, எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து குடும்பங்கள் விரைவாக அச்சப்படுகின்றனர்.
மெய்ஜரைப் பயன்படுத்திய ஒரு ஜோடியில் ஒருவரான ஜான் இதுபற்றி கூறுகையில், "நாங்கள் நினைத்தோம், எதிர்காலத்தில் இந்தக் குழந்தைகள் சந்தித்து, ஒரு வேளை தொடர்பு கொண்டால் அல்லது காதலில் விழுந்தால், அப்படி நடக்காது என்று கூற முடியுமா?' உண்மையான பீதி தொடங்கிய தருணம் அதுதான். அப்போதுதான் இந்த விஷயத்தின் உண்மையான ஆபத்தை நாங்கள் உணர்ந்தோம்.
ஏப்ரல் 2023 இல், Meijer 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது சொந்த நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றத்தால் கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பின் படி, இனி ஒவ்வொரு மீறலுக்கும், அவர் மீண்டும் நன்கொடை அளித்தால், €100,000 (ரூ. 90.41 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அடையாளம் இல்லாத விந்தணு தானம் செய்யும் ஒருவர் Netflix நிகழ்ச்சியில், மெய்ஜர் மற்றும் லியோன் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் "Longing for a Child" என்ற இணையதளத்தை நடத்தி முடிந்தவரை பல குழந்தைகளுக்கு தந்தையாக முயற்சி செய்ததாகக் கூறினார். அந்த அடையாளம் தெரியாத நன்கொடையாளர், குழந்தை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க மெய்ஜர் மற்றும் லியோன் அவர்களின் விந்தணு மாதிரிகளை "sperm roulette" விளையாடுவதற்காகக் கலந்ததாகக் கூறினார். பிசினஸ் இன்சைடருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், இணையதளத்தை இயக்குவதை மெய்ஜர் மறுத்தார்.
"நான் ஒருபோதும் ஒரு வலைத்தளத்தை நடத்தவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனது நிதி திரட்டலின் முதல் சில ஆண்டுகளில் (2008-2014) இந்த இணையதளத்தில் எனது விளம்பரம் இருந்தது," என்று அவர் எழுதினார். "லியோன் என்ன செய்தார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியவில்லை, நான் அவரை என் வாழ்க்கையில் 4-5 முறை மட்டுமே சந்தித்து உள்ளேன், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்."
Meijer மேலும், Netflix பற்றி குறிப்பிடுகையில், "நான் என் மீது சுமத்தப்பட்டுள்ளஅவதூறுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பேன், இது உண்மையிலேயே பைத்தியக்காரத்தனம்! விந்தணு கலப்படத்திற்கு மட்டுமின்றி வேறு சில கோரிக்கைகளுக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
கருத்துக்கான பிஸ்னஸ் இன்சைடரின் கோரிக்கைக்கு Netflix பதிலளிக்கவில்லை. Meijer வேலை நிமித்தமாக நிறைய பயணம் மேற்கொள்வதாக ஆவணப்படம் விவரிக்கிறது, அதனால்தான், அவரது விந்தணு மாதிரிகளைப் பயன்படுத்தி எத்தனை குழந்தைகள் கருத்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்த சில தாய்மார்கள் அவருடன் நேரில் பேச முடியவில்லை.
அவரது யூடியூப் சேனலில், ஆன்மீகம், பாரம்பரிய மனைவிகள், இறைச்சி உணவுகள் மற்றும் The Man with 1000 Kids ஆவணப்படம் மீதான அவரது எதிர்வினை போன்ற பல்வேறு தலைப்புகளில் தனது எண்ணங்களைப் பற்றிய வீடியோக்களை அவர் தொடர்ந்து வெளியிடுகிறார். மே 5 அன்று, தான்சானியாவில் இருந்து ஒரு வீடியோவைப் பதிவேற்றினார், அதில் அவர் நெதர்லாந்தை விட்டு வெளியேற முடிவு செய்ததாக விளக்கினார், ஏனெனில் நெதர்லாந்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது மற்றும் அவர் இயற்கையுடன் நெருக்கமாக இருக்க விரும்பினார்.
ஜூலை 3 அன்று பதிவேற்றப்பட்ட அவரது கடைசி வீடியோவில், Jonathan Jacob Meijer ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சான்சிபார் கடற்கரையில் இருந்தார். 2019 ஆம் ஆண்டில் கிளினிக்குகளுக்கு நன்கொடை அளிப்பதை நிறுத்தும் வரை விந்தணு தானம் செய்பவராக "50,000 மணி நேரத்திற்கும் மேலாக" செலவிட்டதாக அவர் விளக்கினார்.



Click it and Unblock the Notifications












