Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
திருப்பதி கோயிலின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில் தவிர பல்வேறு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தினமும் ஏழுமலையானுக்கு சுமார் 4 கோடி ரூபாயை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.
2023-24 ஆம் ஆண்டிற்கான திருப்பதி திருமலை ஸ்ரீவாரி தேவஸ்தானத்தின் சொத்து விவரங்களை பகிர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஏழுமலையானின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அப்படியானால் திருமலை ஸ்ரீவாரி சொத்து எவ்வளவு? இது பற்றிய விவரம் இதோ...

திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதிலும் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுவாமிக்கு ஏராளமான பிரசாதங்களை வழங்குவது வழக்கம். தினந்தோறும் காணிக்கையாக எண்ணற்ற தங்கம் ஏழுமலையானின் கருவூலத்தைச் சென்றடைகிறது. மேலும், ஆயிரக்கணக்கான கிலோ தங்கமும், ஆயிரக்கணக்கான கோடிகளும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதனால் திருப்பதி ஏழுமலையான் பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எனவே திருமலை ஸ்ரீவாரி சொத்து எவ்வளவு என்று இண்டஹ் பதிவில் தெரிந்துக் கொளலாம்.
கலியுக திருமலை வெங்கடேஸ்வர சுவாமியின் வருமானம் ஆண்டுதோறும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 1,161 கோடி நிலையான வைப்புகளைச் செய்துள்ளது. இதுவரை செய்த மிக அதிக ரொக்க டெபாசிட் தொகை இதுவாகும். மேலும், 2023-24 ஆம் ஆண்டில், 1,031 கிலோ தங்க வைப்பு மற்றும் மொத்த தங்க இருப்பு 11,329 கிலோ பங்களிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வட்டி வருமானம் டிடிடிக்கு கிடைத்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் 100 கோடிக்கும் அதிகமான உண்டியல் காணிக்கை நன்கொடையாக வருகிறது. மேலும் கடந்த ஆண்டு அதாவது கொரோனாவுக்குப் பிறகு ஏழுமலையானின் சன்னிதானத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டும் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த ஆண்டை விட இம்முறை திருப்பதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வங்கிகளில் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு அதிக தொகையை நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி வைத்துள்ளது. மேலும் தேவஸ்தானத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 963 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில் கல்யாண மண்டபங்கள், கோவில்கள் ஆகிவையும் அடங்கும். இதுப்போன்ற வகைகளில் ஒட்டுமொத்தமாக தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மார்க்கெட் மதிப்பின்படி பார்த்தால் இந்த தொகை சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் திருப்பதி மலைக்கு விலை மதிப்பீடு செய்ய இயலாது என்பது ஆகும். இது தவிர தேவஸ்தானத்திடம் சுமார் இரண்டரை டன் அளவிற்கு மிகவும் புராதாணமான தங்க ஆபரணங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பழங்காலத்து வைர, வைடூரியங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த பழமையான ஆபரணங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு இன்றைய மார்க்கெட் விலையை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications