Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
2025 இறுதியில் இயற்கை பேரழிவு ஏற்படும்.. ஏற்கனவே கணித்த பாபா வாங்கா.. அப்ப அதான் ஜப்பான் சுனாமியோ!
Baba Vanga 2025 Predictions Japan Tsunami: சமீபத்தில் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இதைப் பார்க்கும் போது 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
ஏனெனில் பல்கேரிய பாபா வாங்காவும், ஜப்பான் பாபா வாங்காவும் ஜப்பானில் ஒரு பயங்கர பேரழிவு ஏற்படும் என்று ஏற்கனவே கணித்திருந்தனர். அதுவும் ஜப்பானின் பாபா வாங்கா 2025-ல் மிகப்பெரிய அலை எழும் என்று கூறியிருந்தார்.

அதே வேளையில் பல்கேரிய பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பயங்கர இயற்கை பேரழிவு ஏற்படும் என்று குறிப்பில் கணித்து குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ப இலங்கையில் டிட்வா புயல் மற்றும் தற்போது ஜப்பானில் பயங்கர நிலநடுக்கத்டன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஜப்பான் பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
ஜப்பான் பாபா வாங்கா என்று அழைக்கப்படும் ரியோ டாட்சுகி, "தி ஃபியூச்சர் தட் ஐ சா" என்ற புத்தகத்தை 1999 ஆம் ஆண்டு எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள பல கணிப்புகள் இதுவரை நடத்துள்ளன. அதில் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோய் பரவலைப் பற்றி கணித்திருந்தார். அதற்கேற்ப 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 என்னும் மர்மமான வைரஸ் ஒன்று மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்து, பேரழிவை ஏற்படுத்தியது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய சுனாமி ஏற்படும் என்று ரியோ டாட்சுகி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப தற்போது ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் கடலோரப் பகுதிகளில் 20-70 சென்டிமீட்டர் வரை சுனாமியைத் தூண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பல்கேரிய பாபா வாங்காவின் கணிப்பு
2025 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிகழ்வுகள் நடக்கும் போதும் பல்கேரிய பாபா வாங்காவின் கணிப்புகளும் ட்ரெண்ட்டாகும். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் முக்கிய கணிப்புகளுள் ஒன்று தான் ஆண்டின் இறுதியில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்பது. அதற்கேற்ப ஜப்பானில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையையும் ஜப்பான் அரசு விடுத்துள்ளது.
ஆனால் குறைந்த உயரத்தில் தான் கடல் அலைகள் எழும்பின. இதனால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும், அடுத்த 2-3 நாட்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பயங்கர நிலநடுக்கத்தால் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர் மற்றும் பல சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன.
எதுவாயினும் பாபா வாங்கா கூறியது போன்று பெரிய அளவில் சேதம் ஏற்படாவிட்டாலும், இயற்கையானது லேசான ஆட்டத்தைக் காட்டியுள்ளது. அதோடு அடுத்த 2-3 நாட்களுக்கு பூகம்பம் வர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கூறியிருப்பது, எங்கு உண்மையில் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











