Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
Women's Day 2025: பெண்கள் பாதுகாப்பாக வாழும் உலகின் டாப் 10 நாடுகள்... இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
International Women's Day 2025: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் சூழலில் அனைத்து பெண்களுக்கும் எங்களின் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்து வந்தது. துரதிர்ஷ்டவசமாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துதான் வருகிறது, ஆனால் அது எந்த அளவிற்கு உள்ளது என்பதை பொறுத்துதான் அது பெண்கள் வாழ தகுதியான நாடா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. சமீபத்தில் 177 நாடுகளின் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் பெண்கள் வாழ பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் இருக்கும் பெண்களுக்கான சிறந்த நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டென்மார்க்
டென்மார்க் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக முதலிடத்தில் உள்ளது. 177 நாடுகளில் முதல் இடத்தில் உள்ள இந்த நாடு, பெண்களுக்கு நீதி மற்றும் வங்கிக் கணக்கு கிடைப்பதிலும், பாலின சமத்துவத்தை கடைபிடிப்பதிலும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்து
டென்மார்க்கைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இருப்பதைத் தவிர, இந்த நாடு பாலின சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதில் சிறப்பாகி செயல்படுகிறது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை குறிப்பாக ஊக்குவிக்கும் அதன் வெளியுறவுக் கொள்கையால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்
ஸ்வீடன் பாலின சமத்துவத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ளது, இந்த நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விரிவான சட்டங்கள் உள்ளன. ஸ்வீடன் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஸ்வீடனில் 1980 முதல் ஸ்வீடனில் பாலின பாகுபாடு சட்டவிரோதமானது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தை தீவிரமாக ஊக்குவிக்கவும், துன்புறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இங்கு பல சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பின்லாந்து
பின்லாந்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இது அடிப்படையில் பெண்கள் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் சமமான அணுகலை நடைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பான நாடாக பெண்களுக்கு உள்ளது. மேலும் 1906 ஆம் ஆண்டிலேயே அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமையையும் தேர்தலில் நிற்கும் உரிமையையும் விரிவுபடுத்திய உலகின் முதல் நாடு பின்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
லக்சம்பர்க்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்வதில் லக்சம்பர்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2015 இல் நிறுவப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவ அமைச்சகத்தில் பாலின சமத்துவத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. இந்த அமைப்பின் ஸ்தாபனம், பாலின சமத்துவத்தை மட்டுமே பொறுப்பாகக் கொண்ட அமைச்சகத்தைக் கொண்ட ஒரே ஐரோப்பிய ஒன்றிய நாடாக லக்சம்பர்க்கைக் கொண்டுவருகிறது. கூடுதலாக, கிராண்ட் டச்சியின் அரசியல் கட்டமைப்புகளில் பாலின சமத்துவத்தை செயல்படுத்துவது அமைச்சகத்தின் பொறுப்புகளில் ஒன்றாகும்.
ஐஸ்லாந்து
குறைந்த குற்ற விகிதம் மற்றும் பாலின் சமத்துவத்திற்கான தீவிர மரியாதை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஐஸ்லாந்து பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. பெண் உரிமைகளை பாதுகாப்பதிலும், அவர்களை முன்னேற்றுவதிலும் ஐஸ்லாந்து தொடர்ந்த சிறப்பாக செயலாற்றி வருகிறது, இது அரசியலில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் தெளிவாக தெரிகிறது.
நார்வே
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான வலுவான நலத்திட்டண்களின் செயல்பாடு ஆகியவை நார்வேயை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாற்றுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் அதிகாரமளிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை நார்வே அரசாங்கம் உறுதி செய்கிறது.
ஆஸ்திரியா
உலகிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரியா எட்டாவது இடத்தில் உள்ளது. இங்கு பெண்களின் சீரான முன்னேற்றம் உறுதிசெய்யப்படுகிறது. மேலும், ஆஸ்திரிய மேம்பாட்டு நிறுவனம் அதன் அனைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளிலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எப்போதும் ஆதரிக்கிறது. இங்கு அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமைகள் உள்ளது.
நெதர்லாந்து
நெதர்லாந்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதற்கு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருந்தாலும், அந்த நாடு பெண்களின் உரிமைகள் குறித்த முற்போக்கான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளது. பெண்களின் நிலையை மேம்படுத்த ஐ.நா. வகுத்துள்ள தீர்மானமான பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தீர்மானம் 1325-யை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. பெண்களின் அரசியல் மற்றும் பொருளாதார பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாலின சமத்துவத்தை அடைவதற்கும் நெதர்லாந்து தொடர்ந்து உழைத்து வருகிறது.
நியூசிலாந்து
நியூசிலாந்து பெண்களை வன்முறை மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கும் வலுவான சட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதன் அரசாங்கமும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படுகிறது. நியூசிலாந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 19 அன்று வாக்குரிமை தினத்தைக் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து பெண்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும் நியூசிலாந்தின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் போராடிய பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க மக்கள் வாக்குரிமை தினத்தை நினைவுகூர்கின்றனர்.
இந்தியா
அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த பட்டியலில் இந்தியா 148 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால்தான் இந்திய பட்டியலில் இந்தியா பரிதாபமான இடத்தில் உள்ளது. வரும் காலத்தில் பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களும், அடக்கு முறைகளும் நிச்சயம் குறையும் என்று இந்த மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.



Click it and Unblock the Notifications
