Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இந்தியாவில் கடைசியாக சுதந்திரம் பெற்ற மாநிலம் எது தெரியுமா? 1961 வரை இந்த மாநிலத்துக்கு சுதந்திரம் கிடைக்கல..!
Independence Day 2025: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 79-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு என்பது உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. ஆங்கிலேயர்களின் 200 ஆண்டுகால காலனித்துவ ஆட்சிக்கு முடிவு கட்டி இந்தியா அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது உலகின் மிகவும் முக்கியமான குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
1947-ல் ஆகஸ்ட் 15 அன்று இந்தியா பிரிட்டிஷ் இராஜ்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றபோதும், ஒரு மாநிலம் மட்டும் சுதந்திரம் அடையாமல் இருந்தது. அதுதான் இந்திய இளைஞர்களின் கனவு மாநிலமான கோவா. இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் கோவா சுதந்திரமடையாமல் இருந்தது, ஏனெனில் அது போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இந்தியாவின் சில பகுதிகளை முதன்முதலில் காலனித்துவப்படுத்தியவர்களில் போர்த்துகீசியர்கள்தான், இந்தியாவை விட்டு கடைசியாக வெளியேறியவர்களும் போர்த்துகீசியர்கள்தான்.

கோவா எப்போது சுதந்திரம் அடைந்தது?
இறுதியாக இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 19, 1961 அன்று கோவா போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டது. ஆயுதமேந்திய கெரில்லாக்கள், சத்தியாக்கிரகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள் கூட கோவாவின் சுதந்திரத்திற்காக தீவிரமாக போராடினர்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் பிற மாநிலங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், கோவா காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும், நாட்டின் சில பகுதிகள் அந்நிய ஆட்சியின் கீழ் இருந்தன. இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியைக் கைவிட்டனர், ஆனால் போர்ச்சுகல் அதன் கடலோரப் பகுதியான கோவாவின் மீதான இந்தியாவின் உரிமைகோரலைத் தொடர்ந்து எதிர்த்தது.
கோவாவில் நடத்தப்பட்ட அத்துமீறல்கள்
1540-ல், இந்துக்கள் மற்றும் கோவா கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்பட்டதாலும், கோவாவின் மாநில மொழியான கொங்கனி மொழி ஒடுக்கப்பட்டதாலும், கோவாவின் மோசமான காலகட்டம் தொடங்கியது. அவர்கள் இந்து கோயில்களை அழித்து, இந்து திருமண சடங்குகளுக்கு தடைகளை விதித்தனர். மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இந்துக்களுக்கு 15 ஆண்டுகள் நில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மக்களுக்கு பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை மற்றும் பத்திரிகை உரிமை மறுக்கப்பட்டது.
கோவாவின் சுதந்திரப் போராட்டம்
ஜூன் 18, 1946, இந்தியாவில் போர்த்துகீசிய ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பப்புள்ளியாக இருந்தது. டாக்டர் ராம் மனோகர் லோஹியா, கோவா கல்வியாளரும் எழுத்தாளருமான டாக்டர் ஜூலியாவோ மெனசஸை பம்பாயில் சந்தித்தார், பிறகு இருவரும் கோவாவில் ஜூலியாவோ-ன் வீட்டில் சந்தித்தனர். அங்கு இரு தலைவர்களும் அந்தக் காலகட்டத்தில் கோவாவில் நிலவிய சூழ்நிலையைப் பற்றி விவாதித்து, போர்த்துகீசிய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீற முடிவு செய்தனர். 435 ஆண்டுகள் பழமையான போர்த்துகீசிய ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் ஒத்துழையாமை இயக்கம் இதுதான்.
லோஹியா கைது செய்யப்பட்டு இயக்கம் அடக்கப்பட்டாலும், அது கோவா மக்களுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது. மக்கள் சந்திக்கவும், போராடவும், திட்டம் வகுக்கத் தொடங்கினர். புரட்சியாளர்களுடன் புனேவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் நானா கஜ்ரேக்கர், பம்பாயைச் சேர்ந்த இசையமைப்பாளர் சுதிர் பட்கே மற்றும் பலர் இருந்தனர். அவர்கள் ஆசாத் கோமந்தக் தளம் (AGD) உடன் இணைந்து ஐக்கிய விடுதலை முன்னணி என்ற ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினர்.
பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரும் கோவாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்தார். போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியை விடுவிப்பதற்காக புரட்சியாளர்கள் ஆயுதங்களை வாங்க பணம் திரட்ட உதவும் வகையில் புனேவில் ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் நிகழ்ச்சி நடத்தினார்.
இந்தியா ஏன் இராணுவத் தாக்குதல் நடத்தவில்லை?
இந்தியா அப்போதுதான் சுதந்திரமடைந்து புதிய அரசாங்கத்தை நிறுவியிருந்தது. மேலும் போர்ச்சுகல் North Atlantic Treaty Organisation(NATO)-வின் இருந்ததால் இந்தியா NATO உறுப்பு நாட்டின் மீது போர் தொடுக்க முடியாத நிலை நிலவியது. ஆனால் 1961 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆப்ரோ-ஆசிய மாநாட்டில், கோவா மீதான இந்தியாவின் நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 1961 நவம்பரில், போர்த்துகீசியர்கள் இந்திய நீராவி கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இந்தியாவைத் தூண்டினர், ஒரு மீனவரைக் கொன்றனர், மேலும் அவர்கள் கிராமவாசிகளை வெளியே இழுத்து பிணைக்கைதிகளாகப் பிடிக்க முயன்றனர்.
இந்தியாவின் தாக்குதல்
அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன், ஜவஹர்லால் நேருவிடம் நமது படைபலத்தைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார். எனவே 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் முழு வான் மற்றும் கடற்படை பலத்துடன் 30,000 இந்திய படைவீரர்கள் போருக்கு அனுப்பப்பட்டனர், மேலும் 48 மணி நேரத்திற்குள், கோவா போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டது. இறுதியாக 1961, டிசம்பர் 19 ஆம் தேதி கோவா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆண்டதோறும் இந்த நாள் கோவாவின் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications
