பலூன் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பலூன் என்றதுமே சிறுவர்களுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும், அதை பார்க்கையில் சந்தோஷம் தரக் கூடிய ஒரு விளையாட்டு மற்றும் ஒரு அலங்கார பொருளாகும்.

பொதுவாக பலூன் என்பது குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் சிறந்த மலிவான விலையில் கிடைக்க கூடிய ஒரு விளையாட்டு பொருளாகும். மேலும் தற்போது பல விழாக்களிலும் பயன் படுத்தப்படும் ஒரு அலங்கார பொருளாகவும் அஃது இருக்கின்றது. பலூன் பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் கிடைக்கின்றது.

Facts about Balloon that you did not know

பலூன் என்பது பொதுவாக இரப்பர் அல்லது அலுமினிய பிளாஸ்டிக் போன்ற மூலக் கூறுகளால் உருவாக்கப் படுகிறது. மேலும் அவற்றை பெரிதாக்க காற்று மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. அவை நாம் முன்பு சொன்னது போல, சிறுவர்கள் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருளாகவும், விழாக்களுக்கு அலங்கார பொருளாகவும் மற்றும் மக்களை கவர்கிற சில விளம்பரங்களுக்காகவும் பல்வேறு வகையில் பயன் படுகின்றன.

அவற்றின் அளவுகள் பொதுவாக 10 முதல் 30 சென்டிமீட்டர் வரை வேறுபடுகின்றன. ஆனால் அளவோ அல்லது வடிவமென்பதோ இப்படித் தான் இருக்க வேண்டும் என ஒரு அவசியமும் இல்லை. அவை தேவைக்கு ஏற்ப எந்த அளவிலும் அல்லது வடிவத்திலும் தயாரிக்க முடியும்.

பொதுவாக பலூன்கள் நவீன கண்டுபிடிப்பு போல நமக்கு தோன்றலாம், ஆனால் அவை பல நூற்றாண்டுகள் முன்பில் இருந்தே இருந்திருக்கின்றன. 14 ம் நூற்றாண்டின் ஓவியங்கள் சில வற்றில், உறைந்த பன்றியின் நீர்க் குழாயில் இருந்து தயாரிக்கப்பட்ட பலூன்களை சித்தரிக்கும் காட்சியமைப்புகள் உள்ளன. "கலிலியோ" தமது ஒரு பரிசோதனைக்கு பன்றியின் நீர்க் குழாயை பயன்படுத்தினார், அதில் அவர் காற்று எடையின் அளவை அளவிட முயன்றார்.

Facts about Balloon that you did not know

"மைக்கேல் ஃபாரடே", 1824 இல் முதல் ரப்பர் பலூனை கண்டுபிடித்தார். அவர் லண்டனில் உள்ள "ராயல் இன்ஸ்டிடியூட்டில்" தமது ஹைட்ரஜன் பரிசோதனையில் அவற்றைப் பயன்படுத்தினார். இரப்பர் பலூனை ஒரு வருடம் கழித்து அதாவது 1825 ம் ஆண்டில் அந்நாளில் முன்னோடி ரப்பர் உற்பத்தியாளரான "தாமஸ் ஹான்காக்" என்பவர் பாட்டிலில் இணைக்கும் படியான சுருங்கி விரியும் சிரன்ஞ் போல் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

1847 இல் லண்டனில் முதன்முறையாக "லேடக்ஸ்" பலூன்களை "J.G. இங்க்ராம்" என்பவர் தயாரித்து வெளியிட்டார். ஆனாலும் அவரால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பெரிய அளவில் உற்பத்தியை பெருக்க வில்லை. 1970 ம் ஆண்டில் ஃபாயில் பலூன்கள் வெளிவந்தன.

அவற்றின் விலை அதிகமாக இருந்தாலும், இரப்பர் மற்றும் "லேடக்ஸ்" பலூன்களை விட அதிகமாக காற்று அல்லது வாயுவை தன்னுள் புகுத்தக் கூடிய வகையில் அமைந்திருந்தது. மேலும் அவை இலகுவாகவும் இருந்தது.

இன்று, பலூன்கள் இரப்பர், லேடக்ஸ் அல்லது நைலான் துணி ஆகியவற்றில் செய்யப்படுகின்றன, மேலும் இவற்றால் நமக்கு எந்த தீங்கும் வராது. இவை பல வண்ணங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. பொம்மை பலூன்களுக்கு வாயு அதனுள் செலுத்துவதற்காக ஒரு வாயில் கொடுக்கப் பட்டிருக்கும். ஒரு பலூனை நமது வாய் கொண்டு ஊதி அதனுள் காற்றை செலுத்தி பெரிதாக்கலாம். ஒரு வேலை அதிக அளவில் பலூன்கள் இருந்தால் காற்றை செலுத்தும் ஒரு பம்பையோ அல்லாத வாயுவை செலுத்தும் வேறு ஒரு முறையிலோ நாம் காற்றையோ அல்லது வாயுவையோ அதில் செலுத்தலாம்.

Facts about Balloon that you did not know

நாம் காற்றிற்கு பதில், அதை விட எடை குறைவுள்ள வாயுவை பயன் படுத்தினால் (உதாரணம் ஹீலியம் வாயு), அந்த பலூன் காற்றின் மேலே பறந்து விடும். மேலும் ஹீலியம் போன்ற வாயுவை பயன் படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் அவைகளில் எளிதில் தீ பற்றாது. மேலும் இந்த வாயு விஷத் தன்மை அற்றது, அவற்றை நமது நாசிகளில் நுகர்ந்தாலும் நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

இரப்பர் பலூன்களில் தண்ணீரையும் ஊற்றி வைக்கலாம், அவற்றை "தண்ணீர் பலூன்கள்" என அழைப்பார்கள். இந்த வகையான பலூன்கள் வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொள்ளும் இந்தியாவில் ஹோலி முதலான கொண்டாட்ட விழாக்களில் பயன் படுத்துகிறார்கள்.

English summary

Facts about Balloon that you did not know

Facts about Balloon that you did not know
Story first published: Tuesday, August 22, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter