Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
குலதெய்வத்தை இப்படி வணங்குங்கள்.. எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது..!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். குலத்தை காக்கும் தெய்வத்தை குலதெய்வம் என்கிறோம்.குலதெய்வ வழிபாட்டிற்கு மாசி அல்லது பங்குனி மாதங்களே உரிய சிறந்த காலங்களாக சொல்லப்படுகிறது. இந்த குல தெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குலத்திற்கும் மாறுபடும். தற்போது வாழ்க்கை சூழலில் பலருக்கும் தங்களின் குலதெய்வம் எது, அந்த கோவில் எங்குள்ளது என்றே தெரியாமல் போய் விட்டது.
இப்படி குலதெய்வம் தெரியாதவர்களும், பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட வழி தெரியாமல் இருப்பவர்களும் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும். ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர், நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள். ஆனால் நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும்.
காரணம் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டும்தான் மற்ற தெய்வங்களின் அருளை நம்மால் பெற முடியும். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வீட்டில் வளர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி, உரிய காலங்களில் சுப காரியங்கள் நடப்பது போன்றவை இருக்கும். நமக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்தால் கூட, ஒரு முறை குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள் என பெரியவர்கள், ஜோதிடர்கள் சொல்வதை கேட்டிருப்போம். குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வர வேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப் பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.
ஒருவருக்குக் குலதெய்வம் திருப்பரங்குன்றம் முருகன் என வைத்துக் கொள்வோம். அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை திருத்தணி முருகன் கோவிலில் செய்துவிட்டால், அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது. ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால்,இந்த நிலை.எனவே, தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்திட வேண்டும்.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications